sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

சி.ஏ., படித்தால் சிறப்பான சம்பளம்; பணி வாய்ப்பு

/

சி.ஏ., படித்தால் சிறப்பான சம்பளம்; பணி வாய்ப்பு

சி.ஏ., படித்தால் சிறப்பான சம்பளம்; பணி வாய்ப்பு

சி.ஏ., படித்தால் சிறப்பான சம்பளம்; பணி வாய்ப்பு


ஜூன் 24, 2021 12:00 AM

ஜூன் 24, 2021 12:00 AM

Google News

ஜூன் 24, 2021 12:00 AM ஜூன் 24, 2021 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டயக்கணக்காளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சி.ஏ., பயிற்சியை முழுமையாக முடித்தாலே, அனைத்து நிறுவனங்களிலும், நிச்சயம் பணிவாய்ப்பை பெறலாம் என, இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தென்னிந்திய பட்டய கணக்காளர் அமைப்பின் தலைவர் ஜலபதி கூறியதாவது:

சி.ஏ., படிப்பு பிளஸ்2 முடித்து நேரடியாகவும், இளநிலை முடித்த பின்பும் சேர முடியும். பிளஸ்2 முடித்து நேரடியாக வரும் மாணவர்களுக்கு 'பவுண்டேஷன்' எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் எழுதவேண்டும். இத்தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் மே, நவ., என இரண்டு முறை நடத்தப்படும். இளநிலை முடித்து வருபவர்களுக்கு இத்தேர்வு இல்லை; மற்ற விதிமுறைகள் பொதுவானது. பட்டம் முடித்து வருபவர்கள், வணிகவியல் பிரிவாக இருப்பின், 55 சதவீத மதிப்பெண்களும், வணிகவியல் அல்லாத பிற பாடங்களை சேர்ந்தவர்கள், 60 சதவீத மதிப்பெண்களையும் பெற்றிருக்கவேண்டும். 
பத்தாம் வகுப்பு முடித்ததுமே பதிவு செய்து கொண்டு, நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ளலாம். கல்விமுறைமுதலில், பவுண்டேஷன் கோர்ஸ்' எனப்படும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். அடுத்து 'இன்டர்மீடியேட்' தேர்வு. இதன் பின் ஆடிட்டரிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று, இறுதி தேர்வு எழுத வேண்டும். பயிற்சி பெறும்போது மாதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. சி.ஏ., படிப்புக்கு ஆகும் செலவினம் மிகவும் குறைவு. வீட்டில் இருந்தபடியே பயிற்சி மேற்கொள்ள முடியும். பயிற்சி மையங்களுக்கும் சென்றும் படிக்கலாம்.
நவ., மாத பவுண்டேசன் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், இந்திய பட்டயக்கணக்காளர் அமைப்பு சார்பில், 'ஆன்லைன்' மூலம், ஜூலை 15ம் தேதி துவங்கவுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பவுண்டேஷன் பயிற்சி வகுப்பு முழுமையாகவும், கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு, மூன்று நிலையும் சேர்ந்து பயிற்சி முழுமையாகவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

'ஆடிட்டர்' என்று கூறப்படும் பட்டயக்கணக்காளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் அனைத்து துறை, தனியார் பிரிவில் சிறிய முதல் பெரிய நிறுவனங்கள், கல்விநிறுவனங்கள், மருத்துவமனை என அனைத்து துறைகளிலும் நிதி மேலாண்மை துறையில் அதிகாரிகளாக பணியில் சேரலாம். தனியாகவும் சொந்த அலுவலகம் அமைத்து பயிற்சியை துவக்கலாம். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு அதிகளவில் உள்ளது.
வயது வரம்பு என்பது இல்லை. தேர்வில் வெற்றி பெறமுடியாமல் போனாலும், சி.ஏ., பயிற்சியை முழுமையாக முடித்தாலே, அனைத்து நிறுவனங்களிலும், 'அக்கவுன்டன்ட்' பிரிவில் நிச்சயம் பணிவாய்ப்பை பெறலாம். வெற்றி பெறும் வரை, முயற்சி மேற்கொள்ளலாம்.
இத்துறை சார்ந்த சந்தேகங்களுக்கு 9677126011 / 8220522669 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us