தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஜிமேட்

ஜிமேட்

ஜிமேட்


ஆக 24, 2021 12:00 AM

ஆக 24, 2021 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 24, 2021 12:00 AM ஆக 24, 2021 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் வணிகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய நுழைவுத்தேர்வு, 'கிராஜூவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்’!
முக்கியத்துவம்
உலகம் முழுவதிலும் 110க்கும் அதிகமான நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இத்தேர்வு, கணினி வழித்தேர்வாக மட்டுமே நடைபெறுகிறது. 2 ஆயிரத்து 300 கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான படிப்புகளில் சேர்க்கை பெற, ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
பிரிவுகள்:
அனலிட்டிக்கல் ரைட்டிங், இன்டக்ரேட்டட் ரீசனிங், குவான்டிடேடிவ் மற்றும் வெர்பல் ஆகிய 4 முக்கிய பிரிவுகள் உள்ளன. விருப்பத்திற்கு ஏற்ப இந்த நான்கு பகுதிகளையும் தேர்வு எழுதும் மாணவர்களே, வரிசைப்படுத்திக் கொள்ளும் ‘செலக்சன் ஆடர்’ எனும் நடைமுறையை இத்தேர்வை நடத்தும், ‘ஜிமேக்’ அமைப்பு பின்பற்றுகிறது.
தகுதி:
இந்தத் தேர்வினை எழுத வயது வரம்பு ஏதுமில்லை. ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. வேறு எந்தச் சிறப்பு தகுதிகளும் இல்லை.
சேர்க்கை முறை:
சில கல்வி நிறுவனங்கள் ‘ஜிமேட்’ தேர்வில் மாணவர்கள் பெறும் மொத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. சில கல்வி நிறுவனங்கள், இந்த நான்கு பிரிவுகளில் குறிப்பிட்ட ஒன்றோ அல்லது இரண்டு பிரிவுகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்து மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. ஆகையால், மாணவர்கள், சேர்க்கை பெற விரும்பும் கல்வி நிறுவனத்தின் சேர்க்கை முறைக்கேற்ப தேர்விற்கு தயாராவது நல்லது!
தேர்வு முறை:
பிரிவு: அனலிட்டிக்கல் ரைட்டிங்கேள்விகள்: 1 தலைப்புநேரம்: 30 நிமிடம்
பிரிவு: இன்டக்ரேட்டட் ரீசனிங்கேள்விகள்: 12 கேள்விகள்நேரம்: 30 நிமிடம்
பிரிவு: குவான்டிடேடிவ் ரீசனிங்கேள்விகள்: 31 கேள்விகள்நேரம்: 62 நிமிடம்
பிரிவு: வெர்பல் ரீசனிங்கேள்விகள்: 36 கேள்விகள்நேரம்: 65 நிமிடம்
மொத்த தேர்வு நேரம்:
3:30 மணி நேரம் (இடைவேளை உட்பட)
இந்தத் தேர்வின் மதிப்பெண்கள், ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமென்றாலும் இந்தத் தேர்வை எழுதலாம். ஓர் ஆண்டில் 30 நாட்கள் இடைவேளையில், 5 முறை இந்தத் தேர்வை எழுத முடியும். ஆங்கில மொழியில் மட்டுமே இத்தேர்வு நடைபெறும். 
விண்ணப்பிக்கும் முறை:
குறிப்பிட்ட விண்ணப்ப தேதிகள் எதுவும் இல்லை. அடுத்த 6 மாதங்களில் உள்ள எந்தத் தேர்விற்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு மையங்கள்:
உலகம் முழுவதிலும் 650 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
விபரங்களுக்கு:
www.gmac.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us