sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

எல்எல்.பி.,

/

எல்எல்.பி.,

எல்எல்.பி.,

எல்எல்.பி.,


ஆக 24, 2021 12:00 AM

ஆக 24, 2021 12:00 AM

Google News

ஆக 24, 2021 12:00 AM ஆக 24, 2021 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 14 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் கல்லூரிகள்
படிப்பு: 
பி.ஏ.எல்எல்.பி., -ஹானர்ஸ் - 5 ஆண்டுகள்பி.காம்.எல்எல்.பி.,  - ஹானர்ஸ் - 5 ஆண்டுகள்பி.பி.ஏ.எல்எல்.பி., - ஹானர்ஸ் - 5 ஆண்டுகள்பி.சி.ஏ.எல்எல்.பி., - ஹானர்ஸ் - 5 ஆண்டுகள்பி.ஏ.எல்எல்.பி., - 5 ஆண்டுகள்
ஒருங்கிணைக்கப்பட்ட இந்த சட்டப்படிப்பிற்கு இடையே மாணவர்களுக்கு தனி பட்டம் எதுவும் வழங்கப்படாது.
கல்வி நிறுவனங்கள்:
சென்னையில் உள்ள சட்ட பல்கலை வளாகத்தில் செயல்படும் சீர்மிகு சட்ட கல்லூரி, அதன் இணைப்பு பெற்ற சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி - புதுப்பாக்கம் மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி ஆகிய நகரங்களில் செயல்படும் அரசு சட்டக்கல்லூரிகள். மேலும் திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி சட்டக்கல்லூரி எனும் தனியார் கல்லூரி.
மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள்:
1651
தகுதிகள்:
ஹானர்ஸ் சட்டப்படிப்புகளுக்கு மேல்நிலைப் பள்ளி படிப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
இதர எல்எல்.பி., படிப்பில் சேர்க்கை பெற மேல்நிலைப்பள்ளி படிப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
மேல்நிலைப்பள்ளி படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், இன வாரியான இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: 
தொலைபேசி எண்கள்:
044 - 2464 1919 மற்றும் 2495 7414 இணையதள முகவரி:
www.tndalu.ac.in 






      Dinamalar
      Follow us