sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

அறிவோம் ஐ.ஐ.எம்.ஆர்.,

/

அறிவோம் ஐ.ஐ.எம்.ஆர்.,

அறிவோம் ஐ.ஐ.எம்.ஆர்.,

அறிவோம் ஐ.ஐ.எம்.ஆர்.,


நவ 19, 2021 12:00 AM

நவ 19, 2021 12:00 AM

Google News

நவ 19, 2021 12:00 AM நவ 19, 2021 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆராய்ச்சி வாயிலாக நாட்டில் தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மில்லட்ஸ் ரிசர்ச்’

முக்கியத்துவம்:
1958ல் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் பருத்தி, எண்ணெய் வித்துக்கள், சோளம், நிலக்கடலை உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அவை சார்ந்த ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டு, கடந்த 2014ம் ஆண்டில் தானியங்களுக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனமாக தற்போதைய அந்தஸ்தை பெற்றது. தானியங்கள் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதோடு, அதற்கான தொழில்நுட்ப வாய்ப்புகளையும் மேம்படுத்தி வருகிறது. 
குறிக்கோள்கள்:
* தானிய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான அடிப்படை மற்றும் திட்டமிட்ட ஆராய்ச்சி வாயிலாக, அவற்றின் பல்வகைப் பயன்பாடுகளை கண்டறிவது மற்றும் லாபகரமானதாக உயர்த்துவது.
* நாடு முழுவதிலும் மேம்படுத்தப்பட்ட பயிர் உற்பத்தி மற்றும் தானியங்களின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது மற்றும் மேம்பாடுத்துவது.
*  தானியங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்த தேவையான பயிற்சிகளை வழங்குவது மற்றும் உரிய ஆலோசனைகளை வழங்குவது.
* இவை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களைப் பரப்புவது மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை குறிக்கோள்களாகக் கொண்டு செயல்படுகிறது.
மனிதவளம்:
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், வாராங்கல் மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் ஆகிய இடங்களில் பிராந்திய மையங்களையும் கொண்டுள்ளது. இவை சார்ந்த 17 துறைகளில் 48 விஞ்ஞானிகள், 41 தொழில்நுட்ப பணியாளர்கள், 21 நிர்வாக ஊழியர்கள் மற்றும் 27 துணை பணியாளர்களுடன் செயல்படுகிறது.
திட்டங்கள்:
மரபணு வள மேலாண்மை, உற்பத்தியை அதிகரிக்க பயிர் மேம்பாடு, ஒரு யூனிட் நேரத்திற்கு அதிக உயிரியலுக்கான மரபணு மேம்பாடு, காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளைத் தணித்தல், உள்ளீட்டுத் திறனை அதிகரிக்க பயிர் உற்பத்தி தொழில்நுட்பங்களை உருவாக்குதல், உயரற்ற மற்றும் உயிருள்ள தானியங்களின் அழுத்த மேலாண்மை, விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வணிகமயமாக்கலுக்கான மதிப்பு கூட்டல், செயல்பாட்டு உணவுகள் மற்றும் அடிப்படை ஆய்வுகள் ஆகியவற்றில் தற்போது இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
பயிற்சிகள்: 
ஊட்டச்சத்து மிகுந்த தானிய உணவுகளை வீட்டிலேயே தயாரித்தல், இத்துறை சார்ந்த தொழில் வாய்ப்புகள், தொழில்முனைவோர் மேம்பாடு, சந்தைப்படுத்துதல் உட்பட பல்வேறு தலைப்புகளில் குறுகியகால பயிற்சி மற்றும் பயிலரங்குகளை நடத்திவருகிறது.
விபரங்களுக்கு:
www.millets.res.in






      Dinamalar
      Follow us