sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

அகதா ஹாரிசன் உதவித்தொகை

/

அகதா ஹாரிசன் உதவித்தொகை

அகதா ஹாரிசன் உதவித்தொகை

அகதா ஹாரிசன் உதவித்தொகை


டிச 21, 2021 12:00 AM

டிச 21, 2021 12:00 AM

Google News

டிச 21, 2021 12:00 AM டிச 21, 2021 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் ஒரு பிரத்யேக திட்டம் 'அகதா ஹாரிசன் மெமோரியல் பெல்லோஷிப்’!
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஆய்வாளருக்கு, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் ஆண்டனி கல்லூரியில் ஆய்வு மேற்கொள்வதற்கான அனைத்து செலவினங்களையும் மத்திய அரசே ஏற்கிறது.
பெல்லோஷிப்பின் காலம்:
ஓர் ஆண்டிற்கு உதவித்தொகை வழங்கப்படும் எனினும் ஆய்வாளரது செயல்திறனின் அடிப்படையில் மேலும் ஓர் ஆண்டிற்கு நீட்டிக்க வாய்ப்புள்ளது.
தகுதிகள்:
முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பதோடு, வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பிஎச்.டி., நிறைவு செய்திருக்க வேண்டும். 
வயது வரம்பு:
30 முதல் 40 வயதுக்குட்டவராக இருத்தல் வேண்டும்.
அனுபவம்:
பிஎச்.டி., நிறைவு செய்ததற்கு பிறகு, இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு அளவில் குறைந்தது மூன்று ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை விபரம்:
கல்வி உதவித்தொகை -  22,063 பவுண்டுகள்போக்குவரத்து செலவு - 890 பவுண்டுகள்கல்லூரி மதிய உணவு செலவு -  2,407 பவுண்டுகள்இரவு நேர உணவு செலவு - 679 பவுண்டுகள்இதர நிர்வாகக் கட்டணங்கள் - 3,930.85 பவுண்டுகள்மொத்தம்:  29,944.85 பவுண்டுகள்
தேர்வு செய்யப்படும் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவிக்கான விமான கட்டண செலவினங்களும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை:
http://proposal.sakshat.ac.in/scholarship/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
பொதுவாக ஜனவரி மாதத்தில் இதற்கான இந்த உதவித்தொகை திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படும். செயல்திறன் மற்றும் திறமை அடிப்படையில் நேர்காணல் வாயிலாக தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 
விபரங்களுக்கு:
www.education.gov.in






      Dinamalar
      Follow us