/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்மா ரிசர்ச்
/
இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்மா ரிசர்ச்
டிச 24, 2021 12:00 AM
டிச 24, 2021 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனம் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்மா ரிசர்ச்!
இந்த நிறுவனம், அடிப்படை பிளாஸ்மா இயற்பியல், காந்தத்தால் கட்டுப்படுத்தப்பட்ட சூடான பிளாஸ்மாக்கள் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கான பிளாஸ்மா தொழில்நுட்பங்கள் ஆகிய பிரிவுகளில் அறிவியல் கோட்பாடு மற்றும் சோதனை ஆய்வுகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
வளாகங்கள்:
குஜராத் மாநிலம் காந்திநகரை தலைமை இடமாக கொண்டுள்ள இந்நிறுவனத்தின் கீழ் மூன்று மையங்கள் செயல்படுகின்றன.

அவை,
1. தொழில்துறை பிளாஸ்மா தொழில்நுட்பங்களுக்கான வசதி மையம் - எப்.சி.ஐ.பி.டி., குஜராத்
2. ஐ.டி.இ.ஆர்.,-இந்தியா, இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்மா ரிசர்ச், குஜராத்
3.பிளாஸ்மா இயற்பியல் மையம் - பிளாஸ்மா ஆராய்ச்சிக்கான நிறுவனம் (CPP-IPR), அசாம்.
நோக்கங்கள்:
காந்தத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பிளாஸ்மா மற்றும் நேரியல் அல்லாத நிகழ்வுகளின் பிளாஸ்மா ஆகிய பிரிவுகளில் அடிப்படை கல்வி மற்றும் ஆய்வுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், இயற்பியல் துறையில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பயிற்சிகளை அளித்து வருகிறது. அதன்படி, இயற்பியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை வழங்குகிறது.

படிப்பு:
பிஎச்.டி., - பிசிக்ஸ்
பிஎச்.டி., - பிசிக்ஸ்
கல்வித் தகுதி:
இயற்பியல், பொறியியல் இயற்பியல் அல்லது அப்ளைடு இயற்பியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்துடன் கூடிய எம்.எஸ்சி., படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், இளநிலை பட்டப்படிப்பில், இயற்பியல் மற்றும் கணிதப்பாடங்களை படித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை:
இப்படிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 31 ஆயிரம் ரூபாயும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 35 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இவைதவிர, ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் புத்தக செலவினங்களுக்காக வழங்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கான மருத்துவம், தங்குமிட செலவினங்களையும் இந்நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது.

இதர படிப்புகள்:
பிஎச்.டி., படிப்பு தவிர, போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப், தொழில்நுட்ப பயிற்சிகள், கோடைகால பயிற்சிகளும் உதவித்தொகை, போக்குவரத்து வசதி மற்றும் தங்குமிட வசதியுடன் வழங்கப்படுகின்றன.

விபரங்களுக்கு:
www.ipr.res.in
www.ipr.res.in