/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
உலகெங்கும் பிரசித்தி பெறும் ஆயுர்வேதம்
/
உலகெங்கும் பிரசித்தி பெறும் ஆயுர்வேதம்
நவ 22, 2008 12:00 AM
நவ 22, 2008 12:00 AM
உலகம் முழுவதிலும் பிரசித்து பெற்றுவரும் ஆயுர்வேத சிகிச்சை முறையால் இத்துறை சார்ந்த படிப்புக்கு வேலை வாய்ப்புகளும் பரந்து விரிந்துள்ளன.
மனித உடலில் மூன்றுவித சக்திமையங்கள் உள்ளன. வாதம், பித்தம், கபம் எனப்படும் இவை முறையே நரம்பு சக்தி உடல் ரீதியான நெருப்பு சக்தி, ஊட்டச்சத்துள்ள சக்தி ஆகும்.
ஒருமனிதனின் உடலில் உள்ள இந்த மூன்றுவித சக்திகளின் அளவைப் பொறுத்தே அவருக்கு உள்ள நோய் பற்றிய தன்மை புரிந்து கொள்ளப்படுகிறது. இயற்கை மூலிகைகள் மற்றும் தாதுப் பொருட்களை உபயோகித்து நோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மருந்துளை உட்கொள்வதுடன் இணைத்து தூய்மைப்படுத்துதல் மற்றும் நச்சுநீக்குதல், உணவுப் பழக்க மாற்றம், உடலுக்கு மசாஜ்கள், தியானம் போன்ற அம்சங்களை உபயோகித்து நோய் தடுத்தல், நோய் நீக்குதல் போன்ற முயற்சிகளை ஆயுர்வேதம் கடைபிடிக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் “ஐந்து அறிவு மருத்துவம்” என்ற முறை கையாளப்படுகிறது. டயட் அண்டு ஹெர்பலிசம், அரோமா தெரபி, கலர் தெரபி, சவுண்ட் தெரபி, டச் தெரபி என்பனவையே அந்த 5 முறைகளாக உள்ளது.
சுற்றுச்சூழலுடன் ஒத்திசைவு கொண்ட மனித உடலே ஆரோக்கியமான நிலையில் நிலவும் என்றும், தட்பவெப்ப மாறுதல்களும் மனித உடலுடன்
நேரடித் தொடர்பு கொண்டுள்ளதால் அதற்கேற்ற சிகிச்சைகள் கையாளப்படவேண்டும் என்றும் ஆயுர்வேதம் நம்புகிறது.
தற்போது ஆயுர்வேத மருத்துவ முறையை மிகச்சிறந்த மாற்று மருத்துவ முறையாக உலகெங்கும் கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர் இம்மருத்துவ முறையில் மிகக் கடுமையான நோய்களுக்கும் சிறந்த சிகிச்சைகள் உள்ளதுடன், இம்மருத்துவ முறையின் மருந்துகளால் எந்தவிதப் பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பது உலகை இம்மருத்துவ முறையின் பால் வெகுவாக ஈர்த்து வருகிறது.
கல்வித்தகுதியும் பயிற்சியும்
ஆயுர்வேதத்தில் பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கு பேச்சிலர் ஆப் ஆயுர்வேதிக் மெடிசின் மற்றும் சயின்ஸ் (ஆஅMகு) அல்லது ஆயுர்வேதாச்சார்யா என்ற பட்டங்கள் வழங்கப்படுகிறது. இம்மருத்துவ படிப்புகளை 5 1/2 ஆண்டுகளில் படித்து, பின் ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பி.ஏ.எம்.எஸ்., படிப்புகளில் இணைய விரும்புபவர்கள் பிளஸ் 2 வுக்குப் இணையான படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் கட்டாயம் படித்திருப்பதுடன் சமஸ்கிருத மொழியும் படித்திருந்தால் நல்லது. இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளை எழுதி வெற்றிபெற வேண்டும்.
அதன்பின்னரே பி.ஏ.எம்.எஸ்.,ல் சேரமுடியும். பி.ஏ.எம்.எஸ்., முடித்தவர்கள் ஆயுர்வேதத்துறையில் முதுநிலைப்படிப்புகளாக உள்ள எம்.டி., அல்லது எம்.டி.,யை மூன்றாண்டுகளில் முடிக்கலாம். எம்.பி.பி.எஸ்., முடித்தவர்களும் ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் முடித்தபின் ஆயுர்வேதத்தில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்கலாம்.
வேலை வாய்ப்புகள்
ஆயுர் வேதத்துறையில் மருந்தியலாளர், அறுவை சிகிச்சையாளர், உணவு நெறியாளர், மகப்பேறு மருத்துவர், ஆசிரியர், பஞ்சகர்மா பயிற்சியாளர் என்பது போன்ற 17 விதமான சிறப்புப் புலங்கள் உள்ளன. ஆயுர்வேதம் பயின்றவர்களுக்கு அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் நல்ல வாய்ப்புகள் உள்ளது. தனியாகவும் பயிற்சி மேற்கொள்ளமுடியும். ஆயுர்வேதத் தத்துவங்களை மக்களுக்கு போதிப்பது, பஞ்சகர்மா மையத்தை மேற்பார்வையிடுவது, ஆயுர்வேதக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுவது ஆராய்ச்சிப்பணிகள் ஈடுபடுவது ஆயுர்வேதத்தில் பட்டறைகளையும் கருத்தரங்கங்களையும் நடத்துவது போன்ற விதவிதமான பணிகள் ஒருவரின் ஈடுபாட்டைப் பொறுத்துப் பார்க்கலாம்.
எதிர்காலம் எப்படி
ஆயுர்வேதம் தற்போது இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் பிரசித்தி பெற்று வருகிறது. சில வகை சிகிச்சைகளில் அலோபதி மருத்துவமுறையில் சிகிச்சைக்கு பின் ஒருவாரம் வரை ஓய்வு தேவைப்படும். ஆனால், ஆயுர்வேத முறையில் இந்த கால அவகாசம் தேவைப்படுவதில்லை.
ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கும் போது, மருந்து நிறுவனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ஒரு ஆயுர்வேத மருத்துவரை பணியமர்த்துவது நடைமுறையில் இருந்து வருகிறது. இவை தவிர இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் இம்மருத்துவ முறையில் பேரார்வம் செலுத்துகின்றனர்.
வேதிப்பொருட்களை தவிர்த்த இம்முறை மருந்துகளை மனித உடலும் எளிதில் ஏற்றுக்கொள்வதுடன், நல்ல சிகிச்சை பலன்களும் கிடைக்கிறது. இதன் காரணமாக தற்போது ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது.எங்கு படிப்பது
இந்தியாவில் தற்போது இளநிலை பட்டப்படிப்புக்கு 154 ஆயுர்வேத கல்லூரிகளும், முதுநிலை பட்டப்படிப்புக்கு 33 கல்லூரிகளும் உள்ளன. இவை மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘சென்ட்ரல் கவுன்சில் பார் ரிசர்ச் இன் ஆயுர்வேதா அண்ட் சித்தா’ என்ற அமைப்பின் கீழ் இயங்குகின்றன. நாடெங்கும் உள்ள 221 கல்லூரிகள் அந்தந்த பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்றுள்ளன. ஆண்டுதோறும் இக்கல்வி நிறுவனங்களின் வாயிலாக 12 ஆயிரம் ஆயுர்வேத மருத்துவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், குஜராத்தில் ஜாம் நகரில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகம், நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பார்மசூடிகல் எஜுகேஷன்
அண்ட் ரிசர்ச் (என்.ஐ.பி.இ.ஆர்.,) போன்ற கல்வி நிறுவனங்கள் ஆயுர்வேத படிப்புகளை தரும் சில சிறந்த கல்வி நிறுவனங்களாகும்.
சம்பளம் எப்படி
பி.ஏ.எம்.எஸ்., பட்டம் படித்த மருத்துவர்களுக்கு அரசு ஆயுர்வேத மருத்துவ மனைகளில் மாதம் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 13 ஆயிரத்து 500 வரை சம்பளம் கிடைக்கும். இத்துறையில் நிபுணர்களாக விளங்கும் மருத்துவர்கள் இந்தியாவில் மாதம் ரூ. 40 ஆயிரம் வரை சம்பளம் பெற வாய்ப்புகள் உள்ளது. இத்துறை ஆராய்ச்சி பிரிவில் 15 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் சேர்ந்து மாதம் ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கலாம். முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு ஏராளமான ஆசிரியப்பணி வாய்ப்புகள் உள்ளன.