/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகம்- சிறந்த கல்வி நிறுவனம்
/
வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகம்- சிறந்த கல்வி நிறுவனம்
வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகம்- சிறந்த கல்வி நிறுவனம்
வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகம்- சிறந்த கல்வி நிறுவனம்
டிச 06, 2008 12:00 AM
டிச 06, 2008 12:00 AM
இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று இ.எப்.எல்.யூ., எனப்படும் ‘இங்கிலிஷ் அண்டு பாரின் லாங்வேஜ் யுனிவர்சிட்டி’. இதன் முக்கிய வளாகம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது.
லக்னோவிலும், ஷில்லாங்கிலும் இதற்கு கிளைகள் உள்ளன. ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் மற்றும் அவற்றின் இலக்கியங்கள் தொடர்பான படிப்பை வழங்கும் பல்கலைகழகம் இது. வெளிநாட்டு மொழிகளுக்கென்றே பிரத்யேகமாக அமைந்துள்ள பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே இ.எப். எல்.யூ., மட்டுமே.
இந்த பல்கலைக்கழகம் 1958ம் ஆண்டு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கிலம் தொடர்பான படிப்புகளை மட்டும் வழங்கும் வகையில் ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இங்கிலிஷ்’ என்ற பெயரில் இயங்கியது. பின்னர் 1972ம் ஆண்டு முக்கிய வெளிநாட்டு மொழிகளான பிரஞ்ச், ஜெர்மன், ரஷ்யன் மொழிகளை கற்றுத்தரும் வகையில் ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இங்கிலிஷ் அண்டு பாரின் லாங்குவேஜஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2006ம் ஆண்டு இதற்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. தற்போது இங்கு அரபி, ஸ்பானிஷ், ஜப்பானிய மொழி தொடர்பான படிப்பு
களும் வழங்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகம் ஐந்து பிரிவாக செயல்படுகிறது.
- தொலைநிலை கல்வி பிரிவு
- ஆங்கில மொழி கல்வி பிரிவு
- வெளிநாட்டு மொழிகள் பிரிவு
- மொழி அறிவியில் பிரிவு
- கிரிட்டிக்கல் ஹியூமானிட்டீஸ் பிரிவு
இங்கு மொழி கல்வி, மொழியியல், இலக்கியம், இங்கிலிஷ் லாங்குவேஜ் டீச்சிங் (இ.எல்.டி.,), கலாசார கல்வி ஆகிய பிரிவுகளில் எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன. அரபி, பிரஞ்ச், ஜெர்மன், ரஷ்யன், ஸ்பானிஷ் மொழிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., படிப்பு வழங்கப்படுகிறது.
அரபி, பிரஞ்ச் மொழிகளில் வழக்கமான எம்.ஏ., படிப்பும் உள்ளது. அரபி, பிரஞ்ச், ஜெர்மன், ரஷ்யன் மொழிகளில் பிஎச்.டி., படிப்பும் உள்ளது. ரஷ்யன் மொழியில் எம்.பில்., பிஎச்.டி., படிப்புகளை தொலைநிலை கல்வி மூலமாகவும் பெறலாம்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் வசதிக்காக மேகாலயாவின் ஷில்லாங்கில் 1973ம் ஆண்டு இந்த பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகம் தொடங்கப்பட்டது. இங்கு ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்ச் ஆகிய மொழிகள் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., படிப்புகள் தவிர போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் டீச்சிங் ஆப் இங்கிலிஷ் (பி.ஜி.டி.டி.இ.,), மாஸ் கம்யூனிகேஷன் ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டில்லி, மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பலன்பெரும் வகையில் 1979ம் ஆண்டு லக்னோவில் இந்த பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகம் தொடங்கப்பட்டது.
இங்கு எம்.ஏ., ஆங்கிலம், இ.எல்.டி., ஆகிய படிப்புகள் உள்ளன. லிங்குவிஸ்டிக்ஸ், பொனிட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் எம்.பில்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. எம்.ஏ., ஆங்கிலம் வழக்கமான படிப்பாகவும், 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகவும் வழங்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு ஜூன் மாத வாக்கில் நடைபெறும். அப்போது இதற்கான விண்ணப்பப்படிவத்தை தீதீதீ.ஞிடிஞுஞூடூ.ச்ஞி.டிண என்ற வெப்சைட்டில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.