sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா

/

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா


ஆக 20, 2022 12:00 AM

ஆக 20, 2022 12:00 AM

Google News

ஆக 20, 2022 12:00 AM ஆக 20, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்த மருத்துவம் சார்ந்த உயர்கல்வி வழங்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் மத்திய - மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட பிரத்யேக கல்வி நிறுவனம், ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா’
அறிமுகம்:
கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பரில், சென்னை அருகே தாம்பரத்தில் இந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனம் துவக்கப்பட்டது. இந்திய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனம், தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது. புதுடில்லியில் உள்ள இந்திய மருத்துவத்திற்கான மத்திய கவுன்சிலின் பரிந்துரைக்கபட்ட பாடத்திட்டத்தையும், கல்வி முறையையும் கொண்டுள்ளது.
பிரதான நோக்கங்கள்:
* சித்த மருத்துவ முறையை மேம்படுத்துதல் மற்றும் வளர்ச்சியடையச் செய்தல்* முதுநிலை பட்டப்படிப்பின் தரத்தை உயர்த்துதல்* சித்த மருத்துவ முறையில் தீர்வினை கண்டறியும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்
வழங்கப்படும் படிப்புகள்:
* எம்.டி., சித்தா - 3 ஆண்டுகள்* பிஎச்.டி
துறைகள்:
* பொது மருத்துவம்* குணபடம்* குழந்தை மருத்துவம்* நோய் நாடல்* நஞ்சு மருத்துவம்* புற மருத்துவம்* வர்ம மருத்துவம்* சித்தர் யோக மருத்துவம்
நேரடி சிகிச்சை:
ஆகிய பிரதான துறைகளின் கீழ் உயர்கல்வி வழங்கப்படுவதுடன் ஏராளமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு உட்பிரிவுகளை உள்ளடக்கிய ஒவ்வொரு துறையிலும் மாணவர்களுக்கு ஆழ்ந்த மருத்துவ கல்வி சாத்தியமாகிறது. 
முடி உதிர்வதற்கான சிகிச்சை முதல் பெண்களின் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் வரை ஏராளமான நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கென, உள் மற்றும் புற நோயாளிகளுக்கான வசதிகளுடன் மருத்துவமனையும் அதே வளாகத்தில் செயல்படுகிறது. 
சேர்க்கை முறை:
எம்.டி., பட்டப்படிப்பில் சேர்க்கை பெற பி.எஸ்.எம்.எஸ்., படிப்புடன், ஆல் இந்தியா ஆயுஷ் போஸ்ட் கிராட்ஜூவேட் என்ட்ரன்ஸ் டெஸ்ட் -ஏ.ஐ.ஏ.பி.ஜி.இ.டி., எனும் நுழைவுத்தேர்வினை எழுத வேண்டும். பிஎச்.டி., படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
https://nischennai.org/






      Dinamalar
      Follow us