sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

செயல்திறனை மேம்படுத்த 5 வழிகள்

/

செயல்திறனை மேம்படுத்த 5 வழிகள்

செயல்திறனை மேம்படுத்த 5 வழிகள்

செயல்திறனை மேம்படுத்த 5 வழிகள்


டிச 06, 2008 12:00 AM

டிச 06, 2008 12:00 AM

Google News

டிச 06, 2008 12:00 AM டிச 06, 2008 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் தேவை பொதுவாக வேலை பார்க்கும் இடங்களில் அமைதியை இழக்காமலிருக்க 2 செயல்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தங்களின் அமைதியின்மைக்கு பிறரையோ சூழ்நிலையையோ குறை கூறுவது மற்றும் எதிர்மறையான அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது இவை தான் அந்த 2 செயல்கள். இவற்றில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்பட்டாலும் அதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

எந்தப் பிரிவில் நீங்கள் பணிபுரிவதன் மூலமாக உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும் என்ற கோணத்தில் யோசித்துப் பார்க்க வேண்டும். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான அம்சங்களின் மூலமாக நீங்கள் மகிழ்ச்சியைப் பெறலாம் என்பதை இதன் மூலமாக காண முடியும்.

எதிர்மறை அம்சங்களை ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் நமது எண்ணம் எப்போதும் நேரடியான அம்சங்களோடே ஒன்றியிருக்க வேண்டும். மிக முக்கியமாக நாம் தவிர்க்க வேண்டிய ஒரு அம்சம் எது என்றால் சுய பச்சாதாபம் கொள்வதைத்தான்.

அறிவு விருத்தி
நமது அறிவையும் திறமைகளையும் அதிகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளைத் தேட வேண்டும். போதுமான அளவு பயிற்சிகளையும் நாம் மேற்கொள்ளலாம். பணி தொடர்பான அனைத்து தகவல் ஊடகங்களையும் கவனித்து கேட்டு அறிய வேண்டும்.

நாம் பணி புரியும் நிறுவனத்தின் தலைமை பண்புகளைப் பெற எப்போதும் தயாராக இருப்பதும், சுயமாக முன்வருவதும் நல்லது. குழுக்கள் மற்றும் கமிட்டிகளில் பணி புரியத் தயாராக இருப்பதன் மூலமாக நம்மை எல்லோரும் ஒரு தலைவராக அடையாளம் காண ஏதுவாகும். இது நமது பணியிடத்தை விட்டு வெளியிலும் நமக்கு நல்ல அடையாளங்களை உருவாக்குவதுடன் நமது திறமைகளை முழுமையாக வெளிக் கொண்டு வரும்.

மேலதிகாரிகளுடன் நல்லுறவு
பணியிடத்தில் சில விரும்பத் தகாதநிலை ஏற்படும் போது தொடர்ந்து உங்களதிகாரியிடம் இது குறித்த தகவல் அளித்து வர வேண்டும். உங்கள் பணியைப் பற்றிய உண்மை உங்களை விட அவருக்குத்தான் நன்றாகத் தெரியும் என்ற எண்ணத்தை நிச்சயமாக நாம் தவிர்க்க வேண்டும். சரியான தகவல் பரிமாற்றம் இல்லாத நிலையில் நாமே 50 சதவீத தவறுகளுக்கு பொறுப்பாக அடையாளம் காணப்படுவோம். உங்கள் அதிகாரியுடன் முழுமையாக நல்லுறவுக்கு மனதைத் தயார்ப்படுத்திக் கொள்ளத் தவற வேண்டாம்.

உங்கள் சக அலுவலர்களின் திறமையைப் பலப்படுத்துவது:
உங்கள் பகைவர்களையும் நன்றாக நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களால் இனிமையாகப் பேசத் தெரியாது என்றால் பேசாமல் இருப்பதே மேல் என்ற பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். முதுகுக்குப் பின் குத்துவது, இரட்டை வேடம் போடுவது, வதந்திகளையும் வம்பு பேசுவது போன்ற குணங்களை அறவே விட்டொழிக்க வேண்டும்.

ஒருவேளை பணி மாறுதல் பெற்றுச் செல்லும் போது கூட உங்கள் சக ஊழியர்களைப் பற்றிய உங்களின் எதிர்மறை எண்ணங்களைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று உங்களால் விமர்சிக்கப்படுபவரே இன்னொரு நாள் உங்களுக்கு பாடம் கற்பிக்கும் நிலையைத் தவிர்த்திட இது வகை செய்யும்.

உணர்ச்சிவசப்படும் நிலை வேண்டவே வேண்டாம்
நம்மோடு அலுவலகங்களில் பணி புரியும் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள் தான்... அதன்பின் தான் அலுவலத்தில் சக ஊழியர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாம் செய்யவேண்டிய அனைத்தையும் முழுமையாகச் செய்த போதும் நாம் இணைந்திருக்கும் குழு ஒரு வேளை தோல்வி நிலையில் இருக்கும் போது நமது அதிகாரியின் மனநிலை நம்மிடம் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

அலுவலகத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும் போது அதை தனியான பிரச்னையாக விட்டுவிட்டு அது சரியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள பிரச்னைகளுடனும் காயங்களுடனும் இதையும் இணைத்துப் பார்த்தால் நிச்சயம் வேதனை தான் மிஞ்சும். எனவே பிரச்னைகளைத் தனித்தனியாகப் பார்க்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us