/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பப்ளிக் ரிலேஷன்ஸ் - துறை அறிமுகம்
/
பப்ளிக் ரிலேஷன்ஸ் - துறை அறிமுகம்
டிச 06, 2008 12:00 AM
டிச 06, 2008 12:00 AM
தனிநபர் ஒருவர் தான் சார்ந்துள்ள நிறுவனத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் செயல்படுவதைத் தான் பப்ளிக் ரிலேஷன்ஸ் குறிக்கிறது. ஒரு நிறுவனத்துடன் தொடர்புடைய உள்ளார்ந்த மற்றும் வெளிநபர்களுக்கிடையே பயன்தரும் உறவுகளை மேம்படுத்துவதே இப் பிரிவின் தலையாய பணியாக உள்ளது.
உள்ளார்ந்த நபர்களாக ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களையும் நிறுவனத்துடன் தொடர்புடைய வெளியாட்களாக பங்குதாரர்கள், சப்ளையர்கள், வாடிக்கையாளர்கள், அரசாங்கம், மீடியா ஆகியோரைக் கூறலாம். இந்த இரு பிரிவினரிடையே சரியான தகவல் பரிமாற்றத்தை செய்வதன் மூலமாக நிறுவனத்தை இலகுவாக நிர்வகிக்க முடியும் என்ற கோட்பாடு தற்போது புகழ் பெற்று வருவதுடன் அதன் முக்கியத்துவமும் அனுபவபூர்வமாக உணரப்பட்டுள்ளது. வணிகமயமாகி வரும் இன்றைய உலகில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது பொருட்களையோ சேவைகளையோ பி.ஆர்.ஓ., எனப்படும் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆபிசர் மூலமாகவே வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.
பொதுவாக இத் துறையை விளம்பரத் துறையோடு குழப்பிக் கொள்வதை காண்கிறோம். ஆனால் உண்மையில் இத் துறை தகவல் பரிமாற்றத் துறையின் தனித்தன்மை வாய்ந்த துறையாக இருப்பதோடு பொது மக்களிடையே ஒரு நிறுவனத்தைப் பற்றிய செயல்பாடுகள் மற்றும் தத்துவத்தை வெளிப்படுத்துதல் மற்றும் படிப்பிக்கும் துறையாக விளங்குகிறது. சில நிறுவனங்கள் தங்களுக்கென்று பிரத்யேகமாக பி.ஆர்., பிரிவைக் கொண்டுள்ளன. வேறு சில நிறுவனங்கள் ஒரு ஏஜென்சி மூலமாக பி.ஆர்., பணிகளை தேவைக்கேற்றபடி மேற்கொள்ளுகின்றன.
தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இத்துறையின் அவசியத்தை வெகுவாக உணரத்துவங்கியுள்ளன. பொருட்களின் வெற்றிக்கு மார்க்கெட்டிங் உத்திகளுடன் பி.ஆர்., பணிகளும் அவசியம் என்ற உண்மை நன்றாக உணரப்பட்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் என அனைவருமே பப்ளிக் ரிலேஷன்ஸ் துறையை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
துறையின் பணிப் பிரிவுகள்
பத்திரிகைத் துறை உறவுகள்: பொதுவாக பத்திரிகைகள் நிறுவனம் பற்றிய நல்ல பார்வையைப் பெற்றிருக்கும் நோக்குடன் இத் துறை செயல்படுகிறது. பத்திரிகைகளுக்கு நிறுவனம் பற்றிய தகவல்கள் அச்சுப் பிரதிகளாக தரப்படுகின்றன.தகவல் பரிமாற்றம்: ஒரு நிறுவனத்துடன் நேரடியாக தொடர்புடைய பங்குதாரர்கள், சப்ளையர்கள், ஊழியர்கள், டீலர்கள் ஆகியோரிடம் நிறுவன நட
வடிக்கைகள் பற்றி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுவது இப் பிரிவில் தான். கருத்துருவாக்கம்(லாபியிங்): நிறுவனம் தொடர்புடைய அம்சம் ஒன்று பற்றி பொது மக்களிடம் கருத்துருவாக்குவது இப் பிரிவின் பணி.
கவுன்சலிங்: நிறுவனம் தொடர்பான குழப்பங்கள், கேள்விகளுக்கு விடை காணுவது இதன் பணியாகும்.
துறையில் மிளிர இவை தான் தேவை:
* எளிதாக தானாகவே சென்று ஒருவரிடம் பழகும் குணம் மற்றும் ஆர்வம்
* மீடியாவுடன் நல்ல தொடர்பு பெறும் திறன் மற்றும் அதை தேவைக்கேற்ப உபயோகித்துக் கொள்ளும் திறன்
* சிறப்பான தகவல் தொடர்புத் திறன், எழுத்து மற்றும் பேச்சுத் திறன்
* நிர்வாகத் திறன், முறைப்படுத்தும் திறன்
* தோல்விகளில் சோர்வுறாமல் விடா முயற்சியை மேற்கொள்ளும் சுபாவம்
* கடினமான சூழல்களிலும் அமைதியான மனப்பாங்குடன் நிதானமாக செயல்படும் தன்மை பெற்றிருப்பது
* வாடிக்கையாளர்களுடன் நன்றாக பழகும் குணம் மற்றும் அவர்களது பிரச் னைகளை லாவகமாக களையும் திறன்
* நிறுவனம் பற்றிய எதிர்மறை விளம்பரங்கள் இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு சூழலை மாற்றி சாதகமான சூழலாக மாற்றும் திறன்
* பொதுவாக சவாலான பணிகளை ஏற்கும் ஆர்வமும் அதற்கான மனப்பாங்கும் பெற்றிருப்பது.
படிப்புகள் எவை
இத்துறையில் பட்ட மேற்படிப்புகள் தரப்படுகின்றன. சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளையும் சில நிறுவனங்களில் படிக்கலாம். விளம்பரம் தொடர்புடைய படிப்புகள் அனைத்திலும் பி.ஆர்., பாடங்களோ பிரிவு படிப்புகளோ இடம் பெறுகின்றன.
இந்தியாவில் புனேயிலுள்ள சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன், மும்பையிலுள்ள ஸ்கூல் ஆப் பிராட்காஸ்டிங் அண்ட் இன்பர்மேஷன், மும்பை சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸ், டில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ், ஆமதாபாத்திலுள்ள முத்ரா இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸ், டில்லியிலுள்ள த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பி.ஆர்., எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் ஆகியவை இத் துறையில் சிறப்புப் படிப்புகளை நடத்துகின்றன.
உள்நாட்டு, வெளிநாட்டு வாய்ப்புகள் இத்துறையில் படிப்புடன் சிறப்புத் திறன் பெற்றவருக்குக் கிடைக்கின்றன. பி.ஆர்., கன்சல்டன்சி நிறுவனங்களையும் இதைப் படித்தவர் துவக்கலாம். பிரபலங்களுடன் பழகும் வாய்ப்புகள் அதிகம் உள்ள துறை இது. அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் சிறப்புத் திறன் பெற்று ஆங்கிலத்தில் மிகச் சரளமான தகவல் பரிமாற்றத் திறன் பெற்றவர்களுக்கு இது சரியான துறையாக அமையும் என்றே கூறலாம்.