/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
உலக பொருளாதார நெருக்கடியும், பணி இழப்புகளும்
/
உலக பொருளாதார நெருக்கடியும், பணி இழப்புகளும்
டிச 16, 2008 12:00 AM
டிச 16, 2008 12:00 AM
தற்போது உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலால் பணி வாய்ப்புகள் பெரிதும் பாதிக்கப்படாமல் இருப்பதுடன், இச்சிக்கலில் பலிகடாவாகவும் ஆக்கப்பட்டுவிட்டது.
கடந்த 26 ஆண்டுகளிலேயே மிக அதிகமான பணியிழப்புகளை அமெரிக்கா சந்தித்து வருகிறது. எத்தனை பேர் வேலையிழந்துள்ளனர் என்ற எண்ணிக்கை நமது மனதை உறையச்செய்யும் அளவு உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு பணி பறிப்பு நடந்துள்ளதும், இந்த ஆண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட பணிக்குறைப்பு ஒரு கோடியே 57 ஆயிரத்து 645 பேருக்கு இருக்கும் என்பதும் மோசமான தகவலாக உள்ளது.
அமெரிக்காவின் வேலையிழப்பு விகிதம் தற்போது 6.8 சதவீதத்தை எட்டிவிட்டது. 1993ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த அளவு உயர்ந்துள்ளது. இந்த பொருளாதார தேக்கநிலை மேலும் வலுவடையும் என்றும், அப்போது உலகெங்கும் உள்ள பல ஊழியர்கள் பணியிழக்கும் நிலை ஏற்படும் என்ற கருத்துக்கள் நிலவுகின்றன.
இந்த நிதிச்சிக்கல் எங்கு போய் முடியும்? எத்தனை பேருக்கு வேலை பறிபோகும்? இவையெல்லாம் இன்னும் பதில் அறியப்படாத வினாக்களாகவே உள்ளன. உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இப்பகுதியில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பணி பறிப்புகளுக்கு திட்டமிட்டுள்ளன என்ற தகவலை தந்துள்ளோம்.
ஜெனரல் மோட்டார்ஸ்
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இங்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 96 ஆயிரத்து 537 பேர் பணி புரிகின்றனர். இவர்களில் அமெரிக்காவில் பணிபுரியும் 31 ஆயிரத்து 500 பேரின் வேலையை பறிப்பு செய்ய இந்நிறுவனம் அமெரிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள 47 தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை வரும் 2012ம் ஆண்டுக்குள் 38 ஆகக் குறைக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தில் கடந்த 2000ல் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 465 பேர் பணிபுரிந்தனர் என்பதும், அதில் பாதி பேர் ஏற்கனவே வேலை பறிப்புக்கு உள்ளாகி விட்டனர் என்பதும் கூடுதல் தகவலாகும்.
ஆர்செலர் மிட்டல்
உலகின் மிகப்பெரிய இரும்பு தயாரிப்பு நிறுவனமான ஆர்செலர் மிட்டல் தன் உலகளாவிய ஊழியர் எண்ணிக்கையை 3 சதவீதம் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. சுயவிருப்ப பணி ஓய்வுத்திட்டத்தின் மூலம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 9 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விற்பனை, பொது மற்றும் நிர்வாகப்பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் இதற்கு இலக்காக உள்ளனர். உலகின் நிதி நெருக்கடி இரும்புக்கான கிராக்கியை குறைத்ததே இம்முயற்சிகளின் முக்கிய காரணமாக உள்ளது.
ஜே.பி.,மார்கன் சேஸ் அண்ட் கோ
அமெரிக்காவில் இயங்கி வந்த ‘வாஷிங்டன் மியூச்சுவல்’ என்ற நிறுவனத்தை ஜே.பி.,மார்கன் சேஸ் அண்ட் கோ நிறுவனம் 95 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதில், பணியாற்றும் 9 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு பணி பறிப்பு செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் இது 21 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரிக்குள் 4 ஆயிரம் பேருக்கும், அதன் பிறகு, 5 ஆயிரத்து 200 பேருக்கும் பணியிழப்பு இருக்கும் என்று இந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிராட் அண்ட் விட்னி
ஜெட் விமானங்களுக்கான இன்ஜின் தயாரிக்கும் பிராட் அண்ட் விட்னி நிறுவனம் அங்கு பணிபுரியும் 350 ஊழியர்களுக்கு பணி பறிப்பு செய்துள்ளது. இந்நிறுவனம் யுனைடெட் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். இதனால் அந்நிறுவன ஊழியர்களில் ஒரு சதவீத ஆட்குறைப்பு இருக்கும் என்று தெரிகிறது. இந்நிறுவனத்தில் 38 ஆயிரம் ஊழியர்கள் பணி புரிகின்றனர். போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களுக்கான ஜெட் இன்ஜின்களை பிராட் அண்ட் விட்னி நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அடோப்
அடோப் நிறுவனத்தில் செயல்பாட்டுக் கட்டணங்களை குறைக்கும் முயற்சியாக 600 வேலை பறிப்புகள் இருக்கும் என்று அந்நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
டெலகாம் இடாலியா
இத்தாலிய நாட்டை சேர்ந்த தொலைபேசி நிறுவனமான ‘டெலிகாம் இடாலியா’ 4 ஆயிரம் பணி பறிப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 2010க்குள் 5 ஆயிரம் வேலை பறிப்புகளை மேற் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கார்லைல் குழுமம்
உலகின் 2வது தனியார் பங்கு நிறுவனமான கார்லைல் குழுமம் தனது பணியாளர்களில் 10 சதவீதம் அல்லது நுõறு வேலை பறிப்புகள் இருக்கும் என்று கூறுகிறது.
டூபான்ட்
வேதிப்பொருட்கள் தயாரிக்கும் டூபான்ட் நிறுவனம் 2 ஆயிரத்து 500 வேலை பறிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தை சார்ந்த பிற ஊழியர்களுக்கு பணி நேரத்தை குறைக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்த 4 ஆயிரம் ஊழியர்களுக்கு வேலையிழப்பு அறிவிப்பு வெளியிடப் பட்டுவிட்டது.
அக்கமாய் டெக்னாலஜிஸ்
இந்நிறுவனம் மொத்த ஊழியர்களில் 7 சதவீதமான 110 பணி பறிப்புகளை மேற்கொண்டுள்ளது.