டிச 16, 2008 12:00 AM
டிச 16, 2008 12:00 AM
யு.பி.எஸ்.சி., என்னும் மத்திய அரசின் ஊழியர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வை பற்றிய அறிமுகம் தேவையில்லை. நாட்டின் கவுரம் மிக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., போன்ற பணிகளுக்கு நம்மை எடுத்துச்செல்வது இந்த தேர்வுதான். 2009ல் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்னென்ன சேவைகளுக்காக இந்த தேர்வு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்.,ஆடிட் அண்ட் அக்கவுன்ட்ஸ் சர்வீஸ், போஸ்டல் சர்வீஸ், ரயில்வே டிராபிக் சர்வீஸ், ரெவின்யூ சர்வீஸ், இன்பர்மேசன் சர்வீஸ், புதுச்சேரி சிவில் சர்வீஸ், புதுச்சேரி போலீஸ் சர்வீஸ், ரயில்வே அக்கவுன்ட்ஸ் சர்வீஸ்.
யார் விண்ணப்பிக்கலாம்
ஆகஸ்ட் 1, 2009 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.8.1979க்கு முன்பாகவோ 1.8.1988க்கு பின்பாகவோ பிறந்திருக்கக் கூடாது. ஓ.பி.சி.,பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை தரப்படும். உடல் ஊனமுற்றவருக்கு 10 ஆண்டுகள் சலுகை தரப்படும்.
* அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். தகுதி தரும் படிப்பில் தேர்வு எழுதி முடிவுகளுக்காகக் காத்திருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.
எத்தனை முறை இத்தேர்வை எழுதலாம்
ஒருவர் இத்தேர்வை நான்கு முறை எழுத முடியும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். ஓ.பி.சி.,பிரிவினர் 7 முறை எழுதலாம். உடல் ஊனமுற்ற பொதுப்பிரிவினரும் 7 முறை எழுத முடியும்.
விண்ணப்பக்கட்டணம்
* இதற்கான விண்ணப்பக்கட்டணம் ரூ. 50. இதை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் கட்டண ஸ்டாம்பாக மட்டுமே செலுத்த முடியும். தபால் அலுவலகங்களில் இதைப்பெற்று விண்ணப்பத்தில் ஒட்ட வேண்டும். பின்பு கேன்சலிங் என்ற முறையில் இதை அதே தபால் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
* எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு கட்டணம்
கிடையாது.
* போஸ்டல் ஆர்டர், டி.டி., மணி ஆர்டர், செக், பணம் ஆகிய முறையில் அனுப்பப்படும் கட்டணம்
நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி
இத் தேர்வுக்காக யு.பி.எஸ்.சி., வடிவமைத்துள்ள விண்ணப்பமானது குறிப்பிட்ட தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்
கிறது. ரூ. 20 செலுத்தி இதை பெறலாம்.
தேர்வுமுறை : இத்தேர்வானது 3 கட்டங்களை கொண்டுள்ளது.
* முதனிலைத்தேர்வு (PRELIMINARY EXAM)
* முதன்மைத் தேர்வு (MAIN EXAM)
* நேர்முகத்தேர்வு (INTERVIEW)
எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கும். ஓ.பி.சி., பிரிவினருக்கும் இத்தேர்வுக்கான இலவச பயிற்சி தரப்படுகிறது. இதை தமிழக அரசு தருகிறது. சென்னையில் உள்ள அண்ணா சிறப்பு பயிற்சி மையம் இதற்கான அறிவிப்பை பின்பு வெளியிடும். இந்த நிறுவனம் நடத்தும் போட்டி தேர்வில் வெற்றி பெற்றால்தான் இலவச பயிற்சியில் சேர முடியும். இது தவிர பல பல்கலைக்கழகங்களும், ஒரு சில தனியார் அமைப்புகளும் இப்பயிற்சியை தருகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 5, 2009.
விபரங்கள் அறிய: (www.upsc.gov.in)