sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா?

/

ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா?

ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா?

ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா?


அக் 14, 2022 12:00 AM

அக் 14, 2022 12:00 AM

Google News

அக் 14, 2022 12:00 AM அக் 14, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., உட்பட நாட்டின் உயரிய அரசு பணிகளுக்கு தகுதியுடையவர்களை தேர்ந்தெடுப்பதற்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 
அறிமுகம்:
பிரிலிமினரி, மெயின் மற்றும் இன்டர்வியு என மூன்று கட்டங்களாக நடைபெறும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு தரவரிசையின் அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. நாட்டின் உயரிய அரசு பணிகளுக்கான இத்தேர்வில் தேர்ச்சி பெற முனைப்புடன் உள்ள தேர்வர்களுக்கு உரிய பயிற்சிகளை குறைந்த கட்டணத்தில் அளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனம் தான், சென்னை ஆர்.ஏ. புரத்தில் செயல்படும் ‘ஆல் இந்தியா சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டர்’. 
தகுதிகள்: 


கல்வித் தகுதி:
ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட இளநிலை பட்டப்படிப்பு.
வயது வரம்பு:
ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி, குறைந்தது 21 வயது நிரம்பியும், 32 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.,(ஏ) பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் வரையில் தளர்வு வழங்கப்படுகிறது. அதேபோல் பி.சி., பி.சி.(எம்), எம்.பி.சி., மற்றும் டி.என்.சி., ஆகிய பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள் வரையிலும் தளர்வு உண்டு. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையிலும் தளர்வு வழங்கப்படுகிறது.
பயிற்சி காலம்: 
முழு நேரம் மற்றும் பகுதி நேரம் என இரண்டு பிரிவுகளில் மொத்தம் 325 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரிலிமினரி தேர்வுக்கான பயிற்சி நவம்பர் முதல் மே அல்லது தேர்வு முன்பு வரையில் வழங்கப்படுகிறது. 'மெயின்’ தேர்வுக்கான பயிற்சி ஆகஸ்ட் முதல் நவம்பர் அல்லது தேர்வு முன்பு வரையிலும் 'பர்சனாலிட்டி’ தேர்வு மார்ச் மாதத்திலும் அளிக்கப்படுகிறது.
பயிற்சி கட்டணம்:
ரூ.3 ஆயிரம்
உதவித்தொகை:
மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றவர்களுக்கு 3 மாதங்களுக்கு, மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. 
'பிரிலிமினரி’ பயிற்சி:
சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல்கட்ட தேர்வான ‘பிரிலிமினரி’ தேர்வு அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்வுக்கான பயிற்சியை இந்த பயிற்சி மையம் வழங்க உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் நுழைவுத்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவர். 2 மணிநேரம் நடைபெறும் இத்தேர்வில் ‘அப்ஜெக்ட்’ வகையில் 100 கேள்விகள் கேட்கப்படும். 
விபரங்களுக்கு:
www.civilservicecoaching.com






      Dinamalar
      Follow us