sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

இஸ்ரேல் அரசு உதவித்தொகை

/

இஸ்ரேல் அரசு உதவித்தொகை

இஸ்ரேல் அரசு உதவித்தொகை

இஸ்ரேல் அரசு உதவித்தொகை


டிச 19, 2022 12:00 AM

டிச 19, 2022 12:00 AM

Google News

டிச 19, 2022 12:00 AM டிச 19, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்ரேல் நாட்டின் வெளிநாட்டு விவகாரத்துறை அமைச்சகம் அந்நாட்டின் சிறந்த கல்வி அனுபவத்தை பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது.

யார் விண்ணப்பிக்கலாம்?:

எம்.ஏ., பிஎச்.டி., சர்வதேச படிப்புகள், சிறப்பு படிப்புகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிற்காக அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரையிலான 8 மாத கால முழு கல்வி ஆண்டிற்கான படிப்பு அல்லது ஹிப்ரூ / அரபிக் மொழிக்கான 3 மாதகால கோடைகால படிப்பு ஆகியவற்றிகாக இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை விபரம்:

8 மாதகால படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீதம் வரை உதவித்தொகை வழங்கப்படும். எனினும், அதிகபட்சமாக 6 ஆயிரம் டாலர் வரை மட்டுமே வழங்கப்படும். இவைதவிர, படிப்பு காலத்தில் மாத செலவினங்களுக்கு நிதி வழங்கப்படுதோடு, அடிப்படை மருத்துவ காப்பீடும் உண்டு.

கோடைகால படிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முழு கல்விக்கட்டணம், தங்குமிட வசதி, 3 வார கால செலவினங்களுக்கான நிதி மற்றும் அடிப்படை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

தகுதிகள்:

பி.ஏ., அல்லது பி.எஸ்சி., அல்லது அவற்றை விட உயர்ந்த படிப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டு துவங்கும் தருணத்தில், 35 வயது மிகாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:


கல்வி சான்றிதழ்கள், டோபல், ஜி.ஆர்.இ., ஐ.இ.எல்.டி.எஸ்., மற்றும் ஜிமேட் ஆகியவற்றில் தேவையான தேர்வு சான்றிதழ், சுயவிபரக் குறிப்பு, புகைப்படங்கள் உட்பட தேவையான இதர சான்றுகளின் மூன்று நகல்களுடன் இஸ்ரேல் தூதரகம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு:
https://www.gov.il/en/service/scholarships_application_for_academic_studies_in_israel மற்றும் https://www.education.gov.in/en






      Dinamalar
      Follow us