sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

அறிவோம் ஐ.சி.டி.,

/

அறிவோம் ஐ.சி.டி.,

அறிவோம் ஐ.சி.டி.,

அறிவோம் ஐ.சி.டி.,


டிச 20, 2022 12:00 AM

டிச 20, 2022 12:00 AM

Google News

டிச 20, 2022 12:00 AM டிச 20, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெமிக்கல் துறையில் சிறப்பான கல்வியை வழங்குவதற்காக மத்திய அரசின்கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக செயல்படும் கல்வி நிறுவனம் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாஜி!

முக்கியத்துவம்:


கடந்த 1933ம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் தொடங்கப்பட்டு, 2008ம் ஆண்டு நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை பெற்ற இந்நிறுவனம் நாட்டின் முதல் 10 சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதான வளாகம் மும்பையில் செயல்படும் நிலையில், புவனேஸ்வர் மற்றும் ஜல்னாவில் கிளை வளாகம் உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:


இளநிலை பட்டப்படிப்புகள்:

பேச்சுலர் ஆப் கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.கெம்.இன்ஜி.,

பேச்சுலர் ஆப் பார்மசி - பி.பார்ம்.,

பேச்சுலர் ஆப் டெக்னாலஜி - பி.டெக்.,: ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் டெக்னாலஜி, பைபர் அண்டு டெக்ஸ்டைல் புராசசிங் டெக்னாலஜி, புட் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, ஆயில், ஒலியோகெமிக்கல்ஸ் அண்டு சர்பாக்டாண்ட்ஸ் டெக்னாலஜி, பார்மாசூட்டிக்கல்ஸ் கெமிஸ்டரி அண்டு டெக்னாலஜி, பாலிமர் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மற்றும் சர்பேஸ் கோட்டிங் டெக்னாலஜி

சேர்க்கை முறை:
பிளஸ் 2 வகுப்பில் அறிவியலை முதன்மை பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். ஜே.இ.இ., மெயின் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


முதுநிலை பட்டப்படிப்புகள்:

மாஸ்டர் ஆப் கெமிக்கல் இன்ஜினியரிங் - எம்.கெம்.இன்ஜி.,

மாஸ்டர் ஆப் பார்மசி - எம்.பார்ம்.,

மாஸ்டர் ஆப் டெக்னாலஜி - எம்.டெக்.,: ஸ்பெசாலிட்டி கெமிக்கல் டெக்னாலஜி, பைபர்ஸ் அண்டு டெக்ஸ்டைல் புராசசிங் டெக்னாலஜி, புட் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, ஆயில், ஒலியோகெமிக்கல்ஸ் அண்ட் சர்பாக்டாண்ட்ஸ் டெக்னாலஜி, பார்மாசியூடிகல்ஸ் கெமிஸ்டரி அண்டு டெக்னாலஜி, பாலிமர் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, சர்பேஸ் கோட்டிங் டெக்னாலஜி, பர்பியூரி அண்டு பிளேவர் டெக்னாலஜி, கிரீன் டெக்னாலஜி, பயோபுராசஸ் டெக்னாலஜி, புட் பயோடெக்னாலஜி, பார்மசூட்டிக்கல் பயோடெக்னாலஜி

மாஸ்டர் ஆப் இன்ஜினியரிங் - எம்.இ.,: பிளாஸ்டிக் இன்ஜினியரிங்

மாஸ்டர் ஆப் பார்மசி - எம்.பார்ம்.,: பார்மசூட்டிக்ஸ், பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி, மெடிசினல் நேச்சுரல் புராடெக்ட்ஸ்

மாஸ்டர் ஆப் சயின்ஸ் - எம்.எஸ்சி.,: கெமிஸ்ட்ரி, இன்ஜினியரிங் மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ் (மெட்டீரியல் சயின்ஸ்), டெக்ஸ்டைல் கெமிஸ்டரி

தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலை மற்றும் கல்லூரிகளில், இளநிலை  பட்டப்படிப்பில்  பொறியியல் / தொழில்நுட்பம்  / அறிவியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.


சேர்க்கை முறை:
கேட் அல்லது கிராஜூவேட் பார்மசி ஆப்ட்டிடியூட் டெஸ்ட்  - ஜி.பி.ஏ,.டி., தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.


ஆராய்ச்சி படிப்புகள்:
இக்கல்வி நிறுவனத்தில் ராசாயன துறையின் உட்பிரிவுகளில் உள்ள அனைத்து  பாடப்பிரிவுகள், சிவில், எலட்ரிக்கல், எலட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் அறிவியல் பிரிவுகளிம் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. இவைதவிர, கெமிக்கல் டெக்னாலஜி மேனேஜ்மெண்ட் பிரிவில் முதுநிலை டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது.


விபரங்களுக்கு: 
www.ictmumbai.edu.in






      Dinamalar
      Follow us