/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
கணிதம் படிக்க சி.எம்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள்-35
/
கணிதம் படிக்க சி.எம்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள்-35
கணிதம் படிக்க சி.எம்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள்-35
கணிதம் படிக்க சி.எம்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள்-35
டிச 16, 2008 12:00 AM
டிச 16, 2008 12:00 AM
கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்சில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கல்வி நிறுவனம் சி.எம்.ஐ., எனப்படும் ‘சென்னை மேதமெடிக்கல் இன்ஸ்டிடியூட்’. 1989ல் ‘ஸ்பிக் சயின்ஸ் பவுண்டேஷன்’ சார்பில் இது தொடங்கப்பட்டது. 1996ல் இதை தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்தனர்.
அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சியில் இது இயங்குகிறது. அரசு சார்பில் அணுசக்தி துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, இஸ்ரோ ஆகியவை பொருளாதார ரீதியில் சி.எஸ்.ஐ.,க்கு உதவுகின்றன. முன்பு தி.நகரில் செயல்பட்டு வந்த சி.எம்.ஐ., தற்போது சிட்கோ ஐ.டி., பார்க்கில் செயல்படுகிறது. நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற நிறுவனம் இது.
இங்குள்ள படிப்புகள்
பி.எஸ்சி., (ஹானர்ஸ்) மேதமெடிக்ஸ் அண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்
பி.எஸ்சி., (ஹானர்ஸ்) இயற்பியல்
எம்.எஸ்சி., கணிதம்
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
பிஎச்.டி., கணிதம்
பிஎச்.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
மே மாத இறுதியில் இந்த தேர்வு நடத்தப்படும். ஜூன் மாத இறுதியில் முடிவு வெளியிடப்படும். இது தவிர பிஎச்.டி.,யில் சேர விரும்பும் மாணவர்கள் சென்னையில் நடக்கும் நேர்முகத்தேர்விலும் கலந்து கொள்ள வேண்டும்.
‘இந்தியன் நேஷனல் மேதமெடிக்ஸ் ஒலிம்பியாட்’டில் தேர்வடைந்த மாணவர்கள் நேரடியாக பி.எஸ்சி., கணிதத்திலும், ‘இந்தியன் நேஷனல் பிசிக்ஸ் ஒலிம்பியாட்’டில் தேர்வு பெற்ற மாணவர்கள் நேரடியாக இயற்பியலிலும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். ‘இந்தியன் நேஷனல் ஒலிம்பியாட் இன் இன்பர்மேட்டிக்சி’ல் வெற்றி பெற்ற மாணவர்களும் பி.எஸ்சி., கணிதத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். எனினும் இவர்கள் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
பி.எஸ்சி., மாணவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், பி.எஸ்சி., இது தவிர மேதமெடிக்ஸ் அண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கு கூடுதலாக ரூ. 2 ஆயிரமும் ஸ்காலர்ஷிப்பாக வழங்கப்படுகிறது. எம்.எஸ்சி., மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும், பி.எச்டி., மாணவர்களுக்கு குறைந்தது ரூ.12 ஆயிரமும் ஸ்காலர்ஷிப் வழங்குகின்றனர்.
மத்திய பிரதேச போஜ் பல்கலைக்கழக பட்டங்களை முன்பு சி.எம்.ஐ., வழங்கியது. சென்னை பல்கலைக்கழகத்தின் மூலமாக டாக்டர் பட்டங்களை வழங்கியது. தற்போது நிகர்நிலைப்பல்கலைக்கழகமாக உள்ளதால் சுயமாக பட்டங்களை வழங்கும் அந்தஸ்தை பெற்றுள்ளது.
இன்ஸ்டிடியூட் ஆப் மேதமெடிக்கல் சயின்சஸ், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச், இந்திய புள்ளியியல் கழகம், சென்னை ஐ.ஐ.டி., போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இயற்பியல் மாணவர்களுக்கு இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வுமையம் மற்றும் ஹோமிபாபா அறிவியல் ஆய்வு மையம் மூலமாக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பாரீசின் இகோல் நார்மேல் போன்ற சர்வதேச கல்விநிறுவனங்களுடனும், சி.எம்.ஐ.,க்கு கல்வித்திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் சி.எம்.ஐ.,யில் ஹாஸ்டல் வசதி செய்து தரப்பட்டுள்ளது.