தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அறிவோம் ஆப்டோமெட்ரி

அறிவோம் ஆப்டோமெட்ரி

அறிவோம் ஆப்டோமெட்ரி


செப் 06, 2023 12:00 AM

செப் 06, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 06, 2023 12:00 AM செப் 06, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், கண் கோளாறுகள் அதிகரித்துவருகின்றன. இதனால், கண் மருத்துவமனைகள், கண் கண்ணாடி மற்றும் லென்ஸ்களின் பயன்பாடு அதிகரிப்பு, ஆப்டோமெட்ரிஸ்ட்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது.
மதிப்பீடு:
2019ம் ஆண்டு 25.04 பில்லியனாக இருந்த கண் மருத்துவத்தின் சந்தை மதிப்பு 2027ம் ஆண்டில் 32.26 பில்லியனை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு சராசரியாக 4.2 சதவீதம் என புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
படிப்பு:
எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறாமல் கண் மருத்துவ பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் பி.எஸ்சி.,- ஆப்டோமெட்ரி அல்லது பி.ஆப்டோமெட்ரி படிப்பை மேற்கொள்ளலாம். இப்படிப்பை மேற்கொண்ட திறமையான மாணவர்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. 
கல்வித் தகுதி:
இயற்பியல், உயிரியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை முக்கிய பாடங்களாகக் கொண்டு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 
முக்கிய பாடப்பிரிவுகள்:
கண் உடற்கூறியல், கண் உடலியல், கண் ஒளியியல், கண் ஒளியியல், விநியோக ஒளியியல், கண் நோய் ஆகியவை ஆப்டோமெட்ரி படிப்பில் முக்கிய பாடங்களாக உள்ளன. இந்த நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில், ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சியும் அடங்கும். இப்படிப்பில், மனித கண் பார்வை, பார்வைக் கோளாறுகள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றைக் கையாளும் திறன் கற்பிக்கப்படுகிறது. இளநிலை ஆப்டோமெட்ரியை முடித்த பிறகு, எம்.எஸ்சி.,- ஆப்டோமெட்ரி, எம்.ஆப்டோம், பிஎச்.டி., போன்ற உயர் படிப்புகளை தொடரலாம்.
வாய்ப்புகள்:
ஆப்டோமெட்ரிஸ்ட், ஆப்டிசியன், கண் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர், ரிப்ராக்‌ஷனிஸ்ட், ஆப்டோமெட்ரி ஆராய்ச்சியாளர், கண் மருத்துவ உதவியாளர், விளையாட்டு பார்வை ஆலோசகர், தேர்வாளர், பார்வை ஆலோசகர், தனியார் பயிற்சியாளர், பேராசிரியர், ஆர்த்தோப்டிக்ஸ் நிபுணர், கண் ப்ராஸ்தெடிக்ஸ் நிபுணர், லேசிக் உதவியாளர்களாக பணி புரியலாம்.
லென்ஸ் உற்பத்தி நிறுவனங்கள், ஆப்டிகல் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், கண்ணாடி மற்றும் லென்ஸ்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், கண் மருத்துவமனைகள், ஆப்டிகல் கடைகள் ஆகியவற்றில் வேலை வாய்ப்புகளை பெறலாம். கவுன்சிலிங், உடல்நலம் மற்றும் பணிச்சூழலியல் வடிவமைப்பு, ஒளியியல் மற்றும் பராமரிப்பு, இமேஜிங் மற்றும் டெக்னாலஜி டிசைனிங் ஆகிய தனியார் மற்றும் பொதுத் துறைகளில் ஆப்டோமெட்ரி பட்டதாரிகளுக்கான தேவை அதிகம் உள்ளன. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us