/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
2009ல் புதிதாக 9 கோடி வேலைகள்... வளர்ச்சிப் பாதையில் இந்தியா!
/
2009ல் புதிதாக 9 கோடி வேலைகள்... வளர்ச்சிப் பாதையில் இந்தியா!
2009ல் புதிதாக 9 கோடி வேலைகள்... வளர்ச்சிப் பாதையில் இந்தியா!
2009ல் புதிதாக 9 கோடி வேலைகள்... வளர்ச்சிப் பாதையில் இந்தியா!
ஜன 31, 2009 12:00 AM
ஜன 31, 2009 12:00 AM
உலகையே அச்சுறுத்தி வரும் பொருளாதார தேக்க நிலை காரணமாக பல லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதைப் பற்றி செய்தித்தாள்களில் நாம் தினசரி படிக்கிறோம்.
எனினும் இந்தப் பிரச்னைகளைத் தாண்டி இந்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு துறைகளில் 8.5 முதல் 9 கோடி புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்பதே மனித வள மேம்பாட்டுத் துறை ஆலோசகர்கள் தரும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. புகழ் பெற்ற கன்சல்டன்சி நிறுவனமான ‘பாஸ்டன் கன்சல்டிங் குழுமம்‘ தான் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.
ஐ.டி., அவுட்சோர்சிங், வங்கி, சில்லறை வணிகம், சுகாதாரத் துறை போன்ற துறைகளில் 8 .5 முதல் 9 கோடி புதிய பணி வாய்ப்புகள் உருவாகவிருப்பதாக இந்த நிறுவனம் கணித்துள்ளது. இதேபோல மற்றொரு கன்சல்டன்சி நிறுவனமான ‘மேன்பவர்‘ நிறுவனமும் இந்த ஆண்டு புதிதாக எண்ணற்ற பணியாளர்கள் தேவைப்படுவர் என மதிப்பிட்டுள்ளது.
இந்தத் தேவையானது ஆண்டுக்கு 18 சதவீதமாக அதிகரித்து வருவதாகுவும் மேன்பவர் தெரிவித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் வேலைத் துறையில் தேக்க நிலை நிலவி வரும் நிலையில் இந்தியாவின் இந்த மனிதவளத் தேவையானது அந்த நாடுகளின் பொருளாதார நிபுணர்களை யோசிக்க வைப்பதாக உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளும் நிதிச் சிக்கலை எதிர்மறையான அணுகு முறையுடன் அணுகும் போது இந்தியா மட்டும் முறையாக அணுகுவதும், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது 7 சதவீதமாக இருப்பதும் இந்த ஆரோக்கியமான நிலைக்குக் காரணமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. நமது பொருளாதாரத்தில் சுரங்கம் மற்றும் பல்வேறு சேவைத் துறை நிறுவனங்களும் புதிய நபர்களை எடுத்துக் கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளன.
எனினும் இந்த பணிகள் இந்தியாவின் பரந்துபட்ட பல்வேறு பகுதிகளிலும் சமமாக உருவாகாது. இந்தியாவின் 48.4 கோடி பணியாளர்களில் 27.3 கோடி பேர் கிராமப்புறங்களிலும் 6.1 கோடி பேர் உற்பத்தித் துறையிலும் 15 கோடி பேர் சேவைத் துறையிலும் பணி புரிகிறார்கள். இதே போன்ற சமச்சீரற்ற நிலை இருப்பதால் புதிய வேலை வாய்ப்புகள் குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே கிடைத்திடும் என்று பாஸ்டன் தெரிவித்துள்ளது.
வரும் மாதங்களில் சேவைத் துறையின் வளர்ச்சியைப் பொறுத்தே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்கு காணப்படும் என்று பாஸ்டன் சுட்டிக்காட்டுகிறது. நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 70 சதவீதமும் புதிய பணிகளில் 60 சதவீதமும் நமது சேவைத் துறையைப் பொறுத்தே அமையும் என்று பாஸ்டன் கருத்து தெரிவித்துள்ளது.