sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

அழகிய சூழலில் அசாம் பல்கலைக்கழகம்

/

அழகிய சூழலில் அசாம் பல்கலைக்கழகம்

அழகிய சூழலில் அசாம் பல்கலைக்கழகம்

அழகிய சூழலில் அசாம் பல்கலைக்கழகம்


ஜன 01, 1970 05:30 AM

ஜன 01, 1970 05:30 AM

Google News

ஜன 01, 1970 05:30 AM ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெற்கு அசாம் பகுதியில், வங்கதேச எல்லை அருகில் அசாம் பல்கலைக்கழகம் உள்ளது.

ஏறத்தாழ 600 ஏக்கர் பரப்பளவில் சில்சாரில் இருந்து 20 கி.மீ., தொலைவில் தர்கோனா பகுதியில் இந்த மத்திய பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. மலைகளாலும், ஏரிகளாலும் இந்த பல்கலைக்கழகம் சூழப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.

இந்த பல்கலைக்கழகம் 1994ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்கீழ் கச்சார், கைலக்கண்டி, கரிமகஞ்ச், வட கச்சார், கர்பி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருக்கும் 51 கல்லூரிகள் செயல்படுகின்றன. மிசோரம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்தை சேர்ந்த மாணவர்களும் இந்த பல்கலைக்கழகத்தில் பெருமளவில் படிக்கின்றனர். இங்கு 9 பிரிவுகளில் 29 துறைகள் செயல்படுகின்றன.

ஹியுமானிட்டீஸ் பிரிவின் கீழ்
- கல்வி
- தத்துவம்
- நுண்கலைகள்

என்விரான்மென்டல் சயின்ஸ் பிரிவின் கீழ்
- ஈக்காலஜி அண்டு என்விரான்மென்டல் சயின்ஸ்

இன்பர்மேஷன் சயின்ஸ் பிரிவின் கீழ்
- மாஸ் கம்யூனிகேஷன்

லைப் சயின்ஸ் பிரிவின் கீழ்
- பயோடெக்னாலஜி
- லைப் சயின்ஸ்

மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் பிரிவின் கீழ்
- பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன்
- வணிகம்

பிசிக்கல் சயின்ஸ் பிரிவின் கீழ்
- வேதியியல்
- கணிதம்
- இயற்பியல்
- கம்ப்யூட்டர் சயின்ஸ்

மொழி பிரிவின் கீழ்
- அரபி
- வங்காளம்
- ஆங்கிலம்
- இந்தி
- லிங்விஸ்டிக்ஸ்
- பாரின் லாங்குவேஜஸ்
- மணிப்புரி
- சமஸ்கிருதம்

சமூக அறிவியில் பிரிவின் கீழ்
- பொருளாதாரம்
- வரலாறு
- சட்டம்
- பொலிட்டிக்கல் சயின்ஸ்
- சோஷியாலஜி
- சோஷியல் ஒர்க்

டெக்னாலஜி பிரிவின் கீழ்
- அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங்
- விவசாய தொழில்நுட்பம்

மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே ஒரு ஹாஸ்டல் அமைந்துள்ளது. அருகில் உள்ள ஈராங்மோரா, துவார்பாங் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளிலும் மாணவர்கள் தங்கிக்கொள்ளலாம். அசாம் பல்கலைக்கழக நூலகத்தில் 52 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தங்கள் உள்ளன. ஏறத்தாழ 200 இந்திய பத்திரிகைகளையும், 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பத்திரிகைகளையும் இங்கு மாணவர்கள் வாசிக்க முடியும்.

பெரும்பாலான துறைகளில் தனியாக துறை சார்ந்த நூலகமும் உள்ளது. யு.ஜி.சி., உதவியுடன் புத்தகங்கள் குறித்து டேட்டாபேஸ் தயாரிக்கும் பணி இங்கு நடந்து வருகிறது. ஏறத்தாழ 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு நவீன சாப்ட்வேர்கள் உதவியுடன் டேட்டாபேஸ் தயாரிக்கப்பட்டுவிட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரும் இங்குள்ளது.






      Dinamalar
      Follow us