பிப் 15, 2009 12:00 AM
பிப் 15, 2009 12:00 AM
இந்திய மேனேஜ்மென்ட் கல்விக்காக நடத்தப்படும் கேட், மேட் தேர்வு போலவே சர்வதேச அளவில் நடத்தப்படும் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு தான் ஜிமேட் எனப்படும் கிராஜூவேட் மேனேஜ்மென்ட் ஆப்டிடியுட் டெஸ்ட் என்னும் தேர்வு.
ஆண்டு முழுவதும் நடத்தப்படும் தேர்வு இது. மேனேஜ்மென்ட் கல்விக்காக அமெரிக்காவின் டாப் பிசினஸ் ஸ்கூல்களில் சேர விரும்பும் மாணவர்கள் ஜிமேட் மூலமாக மட்டுமே அவற்றில் சேர முடியும். இதில் மாணவர்களின் வெர்பல் திறன்கள், கணிதத் திறன்கள் மற்றும் அனலிடிகல் திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இதை கம்ப்யூட்டர்களின் மூலமாக மட்டுமே எழுத முடியும். தாள், பேனா கொண்டு எழுத முடியாது. இதில் 3 பகுதிகள் உள்ளன.
அனலிடிகல் ரைட்டிங் அசெஸ்மென்ட், குவான்டிடேடிவ் பகுதி மற்றும் வெர்பல் திறனறியும் பகுதிகள் இவை. கணிதத்திற்கு 75 நிமிடங்கள் கால அளவு. இதில் 37 கேள்விகள் இடம் பெறுகின்றன. டேட்டா சபிஷியன்சி மற்றும் பிராப்ளம் சால்விங் ஆகிய இரு பிரிவுகளிலிருந்து கேள்விகள் இடம் பெறும்.
வெர்பல் பகுதிக்கு 75 நிமிடங்கள். 41 கேள்விகள் இதில் இடம் பெறுகின்றன. வெர்பல் பகுதியில் ரீடிங் காம்ப்ரிஹென்ஷன், கிரிடிகல் ரீசனிங் மற்றும் சென்டன்ஸ் கரெக்ஷன் ஆகிய பிரிவுகளிலிருந்து இதில் கேள்விகள் இடம் பெறும். இந்தியாவில் சென்னை, அலகாபாத், ஆமதாபாத், பெங்களூரு, கோல்கட்டா, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் புதுடில்லி ஆகியவற்றில் இதில் கலந்து கொள்ள முடியும்.
சென்னை மைய முகவரி:Prometric Testing (P) Ltd.
No 15, 2nd Floor, Romar House,
Jagannathan Road, Nungambakkam,
Chennai 600034. தொலைபேசி: 914428241875
இந்தத் தேர்வு எழுதி பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புக்காகச் செல்பவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள்.