sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

கம்ப்யூட்டர் படிப்புகள் -துறை அறிமுகம்

/

கம்ப்யூட்டர் படிப்புகள் -துறை அறிமுகம்

கம்ப்யூட்டர் படிப்புகள் -துறை அறிமுகம்

கம்ப்யூட்டர் படிப்புகள் -துறை அறிமுகம்


பிப் 21, 2009 12:00 AM

பிப் 21, 2009 12:00 AM

Google News

பிப் 21, 2009 12:00 AM பிப் 21, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துறை அறிமுகம் பகுதியில் நாம் பல்வேறு துறை படிப்புகள் பற்றியும் அவற்றின் வேலை வாய்ப்புகள் பற்றியும் பார்த்து வருகிறோம். கம்ப்யூட்டர் துறைப் படிப்புகள் பற்றி இங்கு பார்க்கவிருக்கிறோம்.

பல்கலைக்கழகப் படிப்புகள்
எம்.சி.ஏ., - கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு முடித்துள்ள மாணவர்கள் 2 அல்லது 3 ஆண்டு காலத்தில் எம்.சி.ஏ., படிப்பைப் படிக்கலாம். புரொகிராமிங் மொழிகள் மற்றும் லீனியர் புரொகிராமிங் தொடர்புடைய பாடங்களை இதில் படிக்கிறார்கள். இவற்றை நடைமுறையில் பயன்படுத்தும் பணி தொடர்பான சிறப்புப் பயிற்சியும் இதில் இடம் பெறுகிறது.

பி.எஸ்சி.,/பி.சி.எஸ்., - கம்ப்யூட்டர் தொடர்பான பணிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கான இளநிலை பட்டப்படிப்பு இது. இதில் தியரி பகுதியே அதிகம் இருக்கிறது. பிராக்டிகல் பகுதி குறைவாக இருப்பது இப் படிப்புகளின் பலவீனமாக உள்ளது.

பி.ஜி.டி.சி.ஏ., - பட்டயப்படிப்பு அல்லது போஸ்ட்கிராஜூவேட் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் என்னும் இந்தப் படிப்பை முழு நேரப் படிப்பாகப் படிப்பது அறிவுறுத்தப்படுகிறது. எனினும் பெரிய ஐ.டி., நிறுவனங்களில் பணி பெற இது போதுமானதாக இருப்பதில்லை.

டி.சி.இ., - கம்ப்யூட்டர் சர்வீசிங் மற்றும் பராமரிப்பு தொடர்பான டிப்ளமோ இது.

தனியார் நிறுவன படிப்புகள்:
கம்ப்யூட்டர் படிப்புகளைத் தரும் கல்வி நிறுவனங்கள் எங்கும் உள்ளன. இவற்றில் குறுகிய கால மற்றும் நீண்ட காலப் படிப்புகள் தரப்படுகின்றன. லாங்வேஜ், அப்ளிகேஷன்ஸ் படிப்புகள் இவை. கம்ப்யூட்டர் படிப்புகள் எதுவாக இருந்தாலும் அது டி.ஓ.இ.ஏ.சி.,யின் அங்கீகாரம் பெற்றதாக இருப்பது முக்கியம்.

டி.ஓ.இ.ஏ.சி.சி.,
கம்ப்யூட்டர் படிப்பு மற்றும் பயிற்சிகளின் தரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 1991ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதை மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் துறை நிர்வகிக்கிறது. தனியார் கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்களின் தரத்தை இது கவனித்து அங்கீகாரம் தருகிறது.இந்த நிறுவனம் நடத்தும் படிப்புகளில் 4 பிரிவுகள் உள்ளன. ஓ பிரிவு என்பது அடிப்படைப் பிரிவு. அட்வான்ஸ்ட் டிப்ளமோவுக்கு ஏ என்றும் பட்டப்படிப்புக்கு பி என்றும் பட்ட மேற்படிப்புக்கு சி என்றும் பெயரிடப்பட்டுள்ளது. தரக்கட்டுப்பாட்டை நிர்ணயிப்பதில் கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆப் இந்தியா மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன்ஸ் அமைப்புகள் டி.ஓ.இ.ஏ.சி.சி.,யுடன் இணைந்து செயல்படுகின்றன.

என்.சி.எஸ்.டி.,
National Centre for Software Technology  என்பது மத்திய எலக்ட்ரானிக்ஸ் துறையின் ஒரு தன்னாட்சி அமைப்பு. இது சி.எஸ்.டி., எனப்படும் சாப்ட்வேர் டெக்னாலஜி தேர்வுகளை நடத்தி சான்றிதழ் தருகிறது. ஜி, டி, ஐ, இ என பல்வேறு நிலை சான்றிதழ்கள் தரப்படுகின்றன. தமிழகத்தில் கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் இத் தேர்வு நடத்தப்படுகிறது.


சாப்ட்வேர் நிறுவனங்களின் படிப்புகள்
தனியார் கல்வி நிறுவனங்கள் பிரபல சாப்ட்வேர் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்புப் படிப்புகளைத் தருகின்றன. இவை வேலை வாய்ப்பை உறுதி செய்யும் படிப்புகளாக உள்ளன.

ஐ.பி.எம்.,
ஐ.பி.எம்., குளோபல் சர்வீசஸ் லிமிடெட் என்ற சிறப்பு கம்ப்யூட்டர் நிறுவனம் உலகெங்கும் 25 இடங்களில் ஏ.எஸ்.,400, மெயின்பிரேம், இ-பிசினஸ் படிப்புகளைத் தருகிறது. சென்னையில் இயங்கும் பென்டாபோர் இதோடு தொடர்புடைய கல்வி நிறுவனம் தான். பவுண்டேஷன், வெப் பப்ளிஷிங், ஜாவா அப்ளிகேஷன்ஸ் டெவலப்மெண்ட், இ காமர்ஸ், லோடஸ் நோட்ஸ் படிப்புகளை இதில் படிக்கலாம்.

டெக்னோ கேம்பஸ் என்னும் பினிஷிங் ஸ்கூலும் ஐ.பி.எம்.,முடன் இணைந்து சான்றிதழ் படிப்பைத் தருகிறது. ஒய்.எஸ்.எம்., எனப்படும் யங் சாப்ட்வேர் மேனேஜர் புரொகிராம் படிப்பும் நடத்தப்படுகிறது. பி.டெக்., எம்.சி.ஏ., எம்.ஸ்டாட்ஸ்., எம்.பி.ஏ., கோபால், பாஸ்கல், சி, போர்ட்ரான் திறன் பெற்றவர்கள் இத் தேர்வை எழுதலாம்.

ஸாப்
ஸாப் படிப்பானது பல்வேறு மாடூல்களாகத் தரப்படுகிறது. இப் படிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

வெப் மாஸ்டர்ஸ் புரொகிராம்
சுவிட்சர்லாந்தின் வேர்ல்ட் வைட் வெப் இன்ஸ்டிடியூட் என்னும் நிறுவனம் சர்டிபைட் வெப் மாஸ்டர்ஸ் புரொகிராம் படிப்பைத் தருகிறது.

மைக்ரோசாப்ட் சர்டிபிகேஷன்
பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் என்.ஐ.ஐ.டி., ஆப்டெக் போன்றவற்றுடன் இணைந்து இப்படிப்பைத் தருகிறது. சிறப்பான வேலை வாய்ப்புகளைக் கொண்டது இந்தப் படிப்பு.

ஆரக்கிள்
45 நாளில் முடீக்கக் கூடிய படிப்பிலிருந்து பல்வேறு விதமான படிப்புகள் ஆரக்கிள் நிறுவனத்தால் தரப்படுகின்றன.  இவை தவிர ஆஅஅN நிறுவனத்தால் இ.ஆர்.பி., புரபஷனலுக்கான 10 வாரப் படிப்பு, 17 வாரப் படிப்பு என தன் படிப்புகளைத் தருகிறது. இந்தியாவின் ஐ.ஐ.டி., நிறுவனங்களின் 6 மாத சான்றிதழ் படிப்புகள், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், இன்டர்நெட் அப்ளிகேஷன்ஸ், ஆர்.டி.பி.எம்.எஸ்., ஆரக்கிள் படிப்புகளும் மதிப்புடையவை.






      Dinamalar
      Follow us