sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

பிளாஸ்டிக் டெக்னாலஜி - துறை அறிமுகம்

/

பிளாஸ்டிக் டெக்னாலஜி - துறை அறிமுகம்

பிளாஸ்டிக் டெக்னாலஜி - துறை அறிமுகம்

பிளாஸ்டிக் டெக்னாலஜி - துறை அறிமுகம்


மார் 01, 2009 12:00 AM

மார் 01, 2009 12:00 AM

Google News

மார் 01, 2009 12:00 AM மார் 01, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பிளாஸ்டிக் என்பது நம் வாழ்வின் பல அம்சங்களில் வசதியானதாகவும் சொகுசான பொருளாகவும் விளங்குகிறது. குறைந்த விலை, பலதரப்பட்ட உபயோகம், பலவிதமான உருவாக்கம் மற்றும் உழைப்பின் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் இரும்புக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவது பிளாஸ்டிக் தான். பேக்கேஜிங் துறையில் ரப்பர், மரம், கண்ணாடி, பேப்பர் போன்றவற்றுக்கு மாற்றாக பிளாஸ்டிக் பயன்படுகிறது.

பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகள்
இந்திய பிளாஸ்டிக் துறை அபரிமிதமான பணி வாய்ப்புகளைத் தருவதால் இத் துறையில் பிளாஸ்டிக் டெக்னாலஜி அல்லது பிளாஸ்டிக் இன்ஜினியரிங் படிப்பது நல்ல எதிர்காலத்தைத் தரும். டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, என்ற பல நிலைகளில் படிப்புகள் தரப்படுகின்றன. பள்ளிப்படிப்பு முடித்த நிலையிலிருந்தே இப் படிப்புகளைத் தொடங்க முடியும்.

பிளாஸ்டிக்/பாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., எம்.டெக்., படிப்புகள் உள்ளன. இயற்பியல் அல்லது வேதியியலில் எம்.எஸ்சி., முடித்தபின் படிக்கக் கூடிய படிப்புகளும் உள்ளன. இதன் பி.டெக்., படிப்பு 4 ஆண்டு படிப்பாகும். இத் துறையில் எம்.டெக்., எம்.இ., படிப்புகளை 1 1/2 ஆண்டில் முடிக்க முடியும். குறுகிய காலத்தில் படிக்கக் கூடிய பட்டயப்படிப்புகளும் உள்ளன. பி.எஸ்சி.,யில் கெமிக்கல் பிளாஸ்டிக்ஸ், ரப்பர் இன்ஜினியரிங் முடித்து பிளாஸ்டிக் தொழிலோடு தொடர்புடைய எம்.பி.ஏ., படிப்பையும் படிக்கலாம்.

பிளாஸ்டிக் டெக்னாலஜியிலும் பாலிமர் சயின்ஸ் பிரிவிலும் டில்லி ஐ.ஐ.டி., கொச்சின் பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகத்தின் கெமிக்கல் டெக்னாலஜி துறை, புனேயிலுள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஆமதாபாத்திலுள்ள எல்.டி., இன்ஜினியரிங் கல்லூரி, கோல்கட்டாவிலுள்ள யுனிவர்சிடி காலேஜ் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஆமதாபாத்திலுள்ள நிர்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி போன்றவை துறையின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள்.

சென்னையிலுள்ள சிப்பெட் எனப்படும் மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் நிறுவனம் துறையிலுள்ள புகழ் பெற்ற மத்திய உரத்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனமாகும். ஆமதாபாத், அமிர்தசரஸ், போபால், புவனேஸ்வர், ஐதராபாத், இம்பால், லக்னோ, மைசூர், பாட்னா, ஹால்டியா, கவுகாத்தி போன்ற இடங்களிலும் இது இயங்குகிறது. இதில் டிப்ளமோ, பட்டயப்படிப்புகளைப் படிக்கலாம்.

இவை தவிர அரசு பாலிடெக்னிக்குகள், ஐ.டி.ஐ., ஏ.டி.ஐ., சி.டி.ஐ., போன்ற கல்வி நிறுவனங்களிலும் 2 முதல் 3 ஆண்டு வரை படிக்கக்கூடிய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும் பிளாஸ்டிக் ஆபரேட்டர் பிரிவு டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன.

துறை வாய்ப்புகள்
பிளாஸ்டிக் உற்பத்தித் துறை அபரிமிதமான வளர்ச்சியை எப்போதும் கண்டு வருவதால் துறை தொழில் நுட்ப வல்லுனர்களுக்கான டிமாண்ட் எப்போதும் அதிகம் இருக்கிறது. அரசு மற்றும் தனியார் துறை வாய்ப்புகள் இதைப் படிப்பவர்களுக்கு எப்போதும் ஏராளம்.

அரசுத் துறையில் ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா லிமிடட், மாநிலங்களிலுள்ள பாலிமர் கழகங்கள், பெட்ரோ கெமிக்கல் ஆய்வுக் கூடங்கள், மத்திய பெட்ரோலியத் துறை போன்றவற்றில் பிளாஸ்டிக் டெக்னாலஜி படித்தவருக்கான பணிவாய்ப்புகள் பல நிலைகளில் உள்ளன.

தனியார் துறையில் பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங் நிறுவனங்கள், பிளாஸ்டிக் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் போன்றவற்றில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியால் துறை முதலீடு பலமடங்கு அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ், ஸ்பிக், நோஸில், பினோலெக்ஸ் போன்ற நிறுவனங்கள் மிகப் பெரிய உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளன. இந்திய பொருளாதாரத்தின் கேந்திரத் துறைகள் எனக் கருதப்படும் விவசாயம், பதப்படுத்திய உணவுப் பொருள் துறை, தொலை தொடர்புத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை போன் றவற்றின் வளர்ச்சியில் பிளாஸ்டிக் முக்கிய பங்காற்றுகிறது.

சிறப்பான பயிற்சி பெற்றுள்ள துறை வல்லுனர்கள் கவர்ச்சிகரமான சம்பளத்தைப் பெறுகிறார்கள். சிறப்புத் திறன் பெற்றவருக்கு சர்வதேச உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மையங்கள் சிறப்பான சம்பளத்தைத் தருகின்றன.






      Dinamalar
      Follow us