/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
எதிர்மறை சிந்தனை தரும் கல்வி முறை
/
எதிர்மறை சிந்தனை தரும் கல்வி முறை
மார் 01, 2009 12:00 AM
மார் 01, 2009 12:00 AM
படிக்கும் குழந்தைகளின் மன ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை அறிய தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி மையம் (என்.சி.இ.ஆர்.டி.,) சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. உணர்வு ரீதியாக மாணவர்கள் எப்படி உள்ளனர் என்பதையும் கல்வியின் தாக்கம் என்ன என்பதையும் இந்த ஆய்வு அறிய முயற்சித்தது. இதில் பொதுவாக மாணவர்களிடம் ஒரு எதிர்மறை சிந்தனை இருப்பது கண்டறியப்பட்டது.
படிப்பின் சுமையால் மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள் என்றும் மதிப்பெண்களே தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதால் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இடையே அவர்கள் மனரீதியான சிக்கலை சந்திக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகளே இந்த அதிர்ச்சியயான தகவல்களைத் தருகின்றன. முழு முடிவுகளும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தான் வெளியாகவுள்ளது.
‘கல்வியை பரந்த பார்வையில் இந்தியர்கள் பார்க்க வேண்டும். 10ம் வகுப்பு வரை தான் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இதனால் எதிர்காலத்தில் குழந்தைகள் கல்வி குறித்த பயங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.