sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

வேலை பெற்றுத் தரும் திறன்கள் இவைதான்...

/

வேலை பெற்றுத் தரும் திறன்கள் இவைதான்...

வேலை பெற்றுத் தரும் திறன்கள் இவைதான்...

வேலை பெற்றுத் தரும் திறன்கள் இவைதான்...


மார் 28, 2009 12:00 AM

மார் 28, 2009 12:00 AM

Google News

மார் 28, 2009 12:00 AM மார் 28, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெறும் தகவல் தொடர்புத் திறனைப் பெற்றிருந்தாலே போதும்... வேலை கிடைப்பது பிரச்னையல்ல என்று பொதுவாக இளைஞர்களிடம் ஒரு எண்ணம் இருக்கிறது.

தற்போதைய சூழலில் Employable என்ற வார்த்தையை நமது வேலை ஆலோசகர்கள் அடிக்கடி கூறுகிறார்கள். எம்ப்ளாயபிள் என்றால் என்ன? வேலை தரக்கூடிய என்று இது அர்த்தம் தருகிறது. ஒரு நிறுவனம் ஒருவருக்கு வேலை தரக்கூடிய திறன்களை அவர் பெற்றிருப்பதை இந்த வார்த்தை குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால் வேலை தரக்கூடிய திறன்கள் என்பது வெறும் தகவல் தொடர்புத் திறன்கள் மட்டுமா?

சமீபத்தில் பர்ப்பிள்-லீப் என்னும் அமைப்பு நடத்திய சர்வே ஒன்றில் 100 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறப்பான தகவல் தொடர்புத் திறன்கள் கொண்ட 80 சதவீத மாணவர்களிடம் பிற வேலை பெறும் திறன்கள் இல்லையென்பது அறியப்பட்டது.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் மற்றொரு நிறுவனத்தில் பணி புரிவதற்கும் கூட உதவும் மாற்றக் கூடிய திறன்கள் தான் இன்று ஆலோசகர்களால் அதிகம் பேசப்படுகிறது. இதுதவிர ஒருவர் எந்தத் துறையில் வேலை பெற விரும்புகிறாரோ அந்தத் துறை தொடர்பான திறன்களையும் தொழில்நுட்பத் திறன்களையும் பெற்றிருப்பதும் நல்ல வேலை பெறுவதற்கான முக்கியமான திறன்களாகக் கருதப்படுகிறது.

மாற்றக்கூடிய திறன்கள், அதாவது Transferrable Skills என்பது சிந்திக்கும் திறன், நடத்தைத் திறன் மற்றும் பழகும் திறன்களைக் குறிக்கிறது.

சிந்திக்கும் திறன்கள்

பிசினஸ் என்பது இன்று சவால்கள் மிகுந்ததாக இருக்கிறது. எண்ணற்ற தகவல்களைக் கொண்டு பிசினஸ் மேனேஜர்களாக பணியாற்றுபவர்கள், தெளிவான முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதால் நிறுவனங்கள் சிந்தித்து திறம்பட செயலாற்றுபவர்களையே நாடுகின்றன. தகவல்கள் என்பது பலவித பரிமாணங்கள் கொண்டதாக உள்ளன. இவற்றின் அடிப்படையில் வாய்ப்புகளை அலசி அதற்கேற்ப சேவை பொருட்களையும் தருவதாகவும் இருக்கின்றன.

இது போலவே பிரச்னைகளை அலசி ஆய்வு செய்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்கும் கட்டாயத்தில் இருக்கின்றனர் பிசினஸ் மேனேஜர்கள். நடத்தைத் திறன்கள் பணியிடத்தில் புதிதாகப் பணிகளை மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை இத்திறன்கள் குறிக்கின்றன. மேலும் தன்னை மேலும் மேலும் புதுப்பித்துக் கொள்ளும் ஆர்வத்தையும் இது காட்டுகிறது.

எவ்விதச் சூழ்நிலையிலும் ஒருவர் தனது நிறுவனத்தின் வளர்ச்சியில் எவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்பதையும் இது குறிக்கிறது. தங்களது வேலையில் மீது மிகுந்த பற்றுடையவராக ஒருவர் இருப்பதையும் இது குறிக்கிறது. எந்த வேலையையும் தானாகவே செய்யவிரும்புவது ஆரோக்கியமான ஒரு திறனாக அடையாளம் காணப்படுகிறது. தனது இலக்குகளை ஒருவர் அடைய எப்படித் திட்டமிடுகிறார் என்பதையும் தனது பயணத்தில் வரக்கூடிய சிரமங்கள் என்பதை அறிந்து அவற்றை தவிர்ப்பதற்கு எப்படி முயற்சிக்கிறார் என்பதையும் இத் திறன்கள் காட்டுகின்றன.

பழகும் திறன்கள்

சக ஊழியர்கள், வாடிக்கையாளர் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றோடு ஒருவர் எப்படி தனது உறவை நிர்வகிக்கிறார் என்பதை இத் திறன்கள் குறிக்கின்றன. சக ஊழியர்களோடு நல்ல உறவைப் பெற்றிருப்பவர் சிறப்பான தகவல் தொடர்புத் திறன்களைப் பெற்றிருப்பவராக இருப்பதைக் காண்கிறோம்.

வெறும் தகவல் தொடர்புத் திறன்களாக மட்டுமல்லாமல் அவர்கள் சூழ்நிலைகளை சரியாக கணிப்பராகவும் பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்பவராகவும் இருந்தால் அவற்றை பழகும் திறன்கள் எனக் கூறலாம். இந்தத் திறன்களில் தகவல் தொடர்புத் திறன், பிறரோடு இசைவுடன் பணியாற்றும் தன்மை போன்றவை அடங்குகின்றன. 

பொதுவாக 70 சதவீதத்தினர் சிந்திக்கும் திறன்களில் தான் பின்தங்கியிருப்பதாக பர்ப்பிள் லீப் ஆய்வு கண்டறிந்துள்ளது. இத்திறன் தான் டெக்னிகல் பணிகளுக்குத் தேவைப்படும் அடிப்படைத் திறனாகும். மொத்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இத்திறனைப் பெற முடியாதவர்களாக அறியப்பட்டனர். 30 சதவீதத்தினர் இத் திறன்களை சிறந்த பயிற்சியின் மூலமாகப் பெறக் கூடியவர்கள் என்று பர்ப்பிள் லீப் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us