/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வெளிநாட்டில் படிக்க விருப்பமா... (2)
/
வெளிநாட்டில் படிக்க விருப்பமா... (2)
மார் 28, 2009 12:00 AM
மார் 28, 2009 12:00 AM
இந்த வாரம் முதல் வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விரும்புவர்கள் எழுத வேண்டிய தேர்வுகளை பற்றி பார்க்கலாம். முதலில் ஜி.ஆர்.இ., ‘கிராஜுவேட் ரெக்கார்ட் எக்சாமினேஷன்’ என்பது இதன் விரிவாக்கம். இந்த தேர்வின் கேள்விகள் மொழியறிவு, கணிதம், அனால்டிக்கல் வகைகளில் அமைந்திருக்கும்.
அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தங்கள் விண்ணப்பதாரர்களின் கல்வித் திறன் குறிந்து அறிந்து கொள்வதற்காக ஜி.ஆர்.இ., தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அமெரிக்காவில் முதுநிலை படிப்பில் சேர விரும்புபவர்களுக்கு ஜி.ஆர்.இ., மதிப்பெண்கள் இன்றியமையாதது. வணிகம், சட்டம், மருத்துவம் தொடர்பான படிப்புகளுக்கு இது பொருந்தாது.
இது முழுமையாக கம்ப்யூட்டர் சார்ந்த தேர்வு. கேள்விகள் ஒவ்வொரு மாணவருக்கும் வேறுபடும். இந்த தேர்வில் மொத்த மதிப்பெண் ஆயிரத்து 600. ஜி.ஆர்.இ., மதிப்பெண்களை மட்டும் வைத்து எந்த கல்லூரியிலும் சேர்ந்து விட முடியாது. சேர்க்கையின் போது கல்லூரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளும் பல்வேறு அளவுகோல்களில் ஜி.ஆர்.இ., மதிப்பெண்களும் அடங்கும்.
கிராஜுவேட் ரெக்கார்ட் எக்சாமினேஷன் போர்டின் வழிகாட்டுதலின்படி இ.டி.எஸ்., எனப்படும் ‘எஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீஸ்’ என்ற அமைப்பு இந்த தேர்வுகளுக்கு பொறுப் பேற்றுள்ளது. வினாக்களை அமைப்பது, தேர்வு நடத்துவது, தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்களை அனுப்பி வைப்பது இந்த அமைப்பின் பொறுப்பு.
இந்தியாவில் ஒன்பது மையங்களில் தேர்வுகளை நடத்த ‘தாம்சன் புராமெட்ரிக்’ என்ற நிறுவனத்தை இ.டி.எஸ்., நியமித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஜி.ஆர்.இ., தேர்வு மையங்கள்: சென்னை, ஆமதாபாத், அலகாபாத், பெங்களூரு, கோல்கட்டா, ஐதராபாத், மும்பை, குர்கான் மற்றும் திருவனந்தபுரம்.