/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வெளிநாடு சென்று படிக்க வேண்டுமா (4)
/
வெளிநாடு சென்று படிக்க வேண்டுமா (4)
ஏப் 11, 2009 12:00 AM
ஏப் 11, 2009 12:00 AM
‘கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்’ சுருக்கமாக ‘ஜிமேட்’ (GMAT) எனப்படுகிறது.
ஜி.ஆர்.இ., தேர்வைப் போலவே, கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் தேர்வும் வாய்மொழித் திறன், கணக்கிடும் திறன் மற்றும் பகுப்பாய்வு திறன்களை அளவிட உதவுகிறது. ஆனால் வணிகம் மற்றும் மேலாண்மை பிரிவுகளில் உயர்கல்விக்கு தகுதியான மாணவர்களை கண்டறிவதில், வர்த்தக கல்வி நிறுவனங்களுக்கு ஜிமேட் தேர்வு பெரிதும் உதவுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுமார் 900 மேலாண்மை கல்வி நிறுவனங்கள், விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ஜிமேட் மதிப்பெண்களை கேட்கின்றன.
வழக்கமான தேர்வுகளிலிருந்து ஜிமேட் தேர்வு மாறுபட்டது. இது முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் அடிப்படையிலானது. ஒரு மாணவருக்கு கேட்கப்பட்ட கேள்வி, இன்னொருவருக்கு கேட்கப்படாது. எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டியது கட்டாயம். இந்த தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்கள் 800. ஆனால் ஜிமேட் மதிப்பெண்கள் மட்டும் கல்விநிறுவனங்களில் சேர உத்தரவாதமாகி விடாது. ஒரு மாணவனுடைய அட்மிஷனை உறுதிப்படுத்தும் பல கட்ட பரிசீலனைகளில் இந்த தேர்வும் ஒன்று.
கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சிலின் கீழ் இயங்கும் அமெரிக்காவில் உள்ள ‘பியர்சன் வி.யு.இ.,’ நிறுவனம் ‘ஜிமேட்’ தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வில் கணிதம் மற்றும் ஆங்கிலப் பிரிவுகளில் கீழ்க்கண்டவாறு தேர்வு நடத்தப்படுகிறது.
30 நிமிடங்கள்: ஒரு விஷயம் குறித்து ஆய்வு
30 நிமிடங்கள்: ஒரு விவாதம் குறித்து ஆய்வு
5 நிமிடங்கள்: இடைவேளை
75 நிமிடங்கள்: கணிதப் பிரிவு - 37
கேள்விகள்
5 நிமிடங்கள்: இடைவேளை
75 நிமிடங்கள்: மொழித் திறன் பிரிவு - 41 கேள்விகள் (கட்டுரை வாசித்தல், கிரிட்டிக்கல் ரீசனிங் மற்றும் பிழை திருத்தம்) தேர்வு மொத்தம் 4 மணி நேரம் நடக்கும். மொத்த மதிப்பெண்களான 800க்கு 600 பெற்றால், நல்ல மதிப்பெண்ணாக கருதப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் மதிப் பெண்கள் மாறுபடும். ‘சாட்’ (SAT) தேர்வு குறித்து அடுத்த வாரம் காண்போம்...