/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ம.பி.,யின் முதல் பல்கலை., சிறந்த கல்வி நிறுவனங்கள்-52
/
ம.பி.,யின் முதல் பல்கலை., சிறந்த கல்வி நிறுவனங்கள்-52
ம.பி.,யின் முதல் பல்கலை., சிறந்த கல்வி நிறுவனங்கள்-52
ம.பி.,யின் முதல் பல்கலை., சிறந்த கல்வி நிறுவனங்கள்-52
ஏப் 11, 2009 12:00 AM
ஏப் 11, 2009 12:00 AM
சாகர் பல்கலைக்கழகம் மத்திய பிரதேசத்தின் சாகர் நகரில் அமைந்துள்ளது. இது 1946ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. மத்திய பிரதேசத்தின் முதல் பல்கலைக்கழகம் இது தான். அம்மாநிலத்தின் முதல் மத்திய பல்கலைக்கழகமும் சாகர் பல்கலைக்கழகமே.
இந்த பல்கலைக்கழகத்தை தொடங்கிய கல்வியாளர் ஹரி சிங் கவுர் பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. ‘நாக்’ குழுமத்தால் மிகச்சிறந்த கல்வி நிறுவனத்துக்கான ‘ஏ கிரேடை’ மாநிலத்திலேயே முதலில் பெற்றது இந்த பல்கலைக்கழகம். பிரிட்டனில் செயல்பட்டு வரும் காமன்வெல்த் பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பில் இந்த பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது.
ம.பி.,யில் பல்வேறு கல்லூரிகளும், கல்வி நிறுவனங்களும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படவுள்ளது. 37 துறைகள் இங்கு இயங்கி வருகின்றன.
இங்குள்ள துறைகள்
- ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகள்
- உருது மற்றும் பெர்ஷிய மொழி
- தத்துவம்
- லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சயின்ஸ்
- மொழியியல்
- மராத்தி
- சமஸ்கிருதம்
- இசை
- இந்தி
- கம்யூனிகேஷன் அண்டு ஜர்னலிசம்
- யூத் வெல்பேர், கல்சுரல் ஆக்டிவிட்டீஸ் அண்டு பெர்பாமிங் ஆர்ட்ஸ்
- பிசிக்கல் எஜுகேஷன்
- கிரிமினாலஜி அண்டு பாரன்சிக் சயின்ஸ்
- கணிதமும், புள்ளியியலும்
- ஆந்ரபாலஜி
- பிசிக்ஸ் அண்டு எலக்ட்ரானிக்ஸ்
- வேதியியல்
- புவியியல்
- கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு அப்ளிகேஷன்
- பொருளாதாரம்
- வரலாறு
- பண்டைய இந்திய வரலாறு, கலாசாரம், தொல்லியல்
- சோஷியாலஜி
- சைக்காலஜி
- பொலிட்டிக்கல் சயின்ஸ் அண்டு பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன்
- விலங்கியல்
- தாவரவியல்
- அப்ளைடு மைக்ரோபயாலஜி
- பயோடெக்னாலஜி
- பார்மசி
- அப்ளைடு ஜியாலஜி
- சட்டம்
- வணிகம்
- யோகிக் சயின்ஸ்
- கல்வி
- அடல்ட் எஜுகேஷன்
- வணிக மேலாண்மை
மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியான ஹாஸ்டல்கள் உள்ளன. 400 மாணவர்கள் மற்றும் 400 மாணவிகள் வரை இங்கு தங்கிக்கொள்ள முடியும். இங்குள்ள ஜவஹர்லால் நேரு நூலகத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும் புதிதாக ஒரு லட்சம் புத்தகங்கள் வாங்க இந்த பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு ரூ.27 லட்சம் நிதி வழங்கியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள இன்டர்நெட் வசதியும் இங்கு செய்து தரப்பட்டுள்ளது. ஆன்மிக தலைவரான ஓஷோ இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவரே.