/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
புதுச்சேரி பல்கலைக்கழகம் - சிறந்த கல்வி நிறுவனங்கள் (53)
/
புதுச்சேரி பல்கலைக்கழகம் - சிறந்த கல்வி நிறுவனங்கள் (53)
புதுச்சேரி பல்கலைக்கழகம் - சிறந்த கல்வி நிறுவனங்கள் (53)
புதுச்சேரி பல்கலைக்கழகம் - சிறந்த கல்வி நிறுவனங்கள் (53)
ஏப் 18, 2009 12:00 AM
ஏப் 18, 2009 12:00 AM
புதுச்சேரி பல்கலைக்கழகம் மத்திய அரசால் 1985 ல் நிறுவப்பட்டது. இதன்கீழ் இயங்கும் 57 கல்லூரிகளில் 25 ஆயிரம் மாணவர்களும், முதுகலை மற்றும் டாக்டர் படிப்புகளில் ஆயிரத்து 600 மாணவர்களும், தொலைநிலைக்கல்வி வாயிலாக 27 ஆயிரம் மாணவர்களும் படிக்கின்றனர். சாய்ஸ் அடிப்படையிலான கிரடிட் சிஸ்டம் மற்றும் முதுகலைப்பட்டப் படிப்புகளுக்கு ஆன்லைனில் பதிவது போன்ற பல புதிய முறைகளும் இப்பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த பல்கலைக்கழகம் 780 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மற்ற மத்திய பல்கலைக்கழகங்களைப் போல கல்வி மற்றும் ஆய்வு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மத்திய ஆட்சிப் பகுதிகளான அந்தமான் நிக்கோபார், மாஹி, ஏனாம், காரைக்கால் போன்றவற்றில் செயல்படும் கல்லூரிகளும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. லட்சத்தீவில் உள்ள கல்லூரிகளும் இதனுடன் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், இந்தி, வங்காளம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு போன்ற பல மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். இங்குள்ள ஆனந்த ரங்கபிள்ளை நூலகம் 1986ல் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் 1 லட்சத்து 19 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
இங்குள்ள துறைகள்
- மேலாண்மை
- வணிகம்
- பொருளாதாரம்
- சுற்றுலா
- பேங்கிங் டெக்னாலஜி
- சர்வதேச வணிகம்
- கணிதவியல்
- புள்ளியியல்
- கம்ப்யூட்டர் சயின்ஸ்
- இயற்பியல்
- வேதியியல்
- புவி அறிவியல்
-< உளவியல்
- லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சயின்ஸ்
- எலக்ட்ரானிக் மீடியா அண்டு மாஸ் கம்யூனிகேசன்
- பயோ கெமிஸ்ட்ரி அண்டு மாலிகுலர் பயாலஜி
- பயோடெக்னாலஜி
- ஈக்கோலஜி அண்டு என்விரோன்மன்டல் சயின்ஸ்
- ஓஷன் சயின்ஸ் அண்டு மரைன்
பயாலஜி
- பயோஇன்பர்மேட்டிக்ஸ்
- பொலுஷன் கன்ட்ரோல் அண்டு எனர்ஜி டெக்னாலஜி
- ஆங்கிலம்
- பிரஞ்சு
- இந்தி
- சமஸ்கிருதம்
- தத்துவம்
- ஏசியன் கிறிஸ்டீன் ஸ்டடீஸ்
- உடற்கல்வி மற்றும் விளையாட்டு
- ஆந்ரபாலஜி
- வரலாறு
- பாலிடிக்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்
- சோஷியல் ஒர்க்
- சோஷியாலஜி
- விமென் ஸ்டடீஸ்
இங்கு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனி ஹாஸ்டல் வசதிகள் உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் 30 பேருக்கும் மேலாக தங்கிப்படிக்கும் வகையில் சர்வதேச தரத்துடன் ஹாஸ்டல் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 14 ஹாஸ்டல்கள் உள்ளன.