/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வெளிநாட்டில் படிக்க விருப்பமா? (5)
/
வெளிநாட்டில் படிக்க விருப்பமா? (5)
ஏப் 18, 2009 12:00 AM
ஏப் 18, 2009 12:00 AM
ஸ்காலாஸ்டிக் ஆப்டிட்டியூட் டெஸ்ட் என்பதன் சுருக்கமே ‘சாட்’. இது வாசிப்புத் திறன், எழுத்துத் திறன் மற்றும் குவான்டிடேடிவ் ரீசனிங் ஆகியவற்றை மதிப்பிடும் வகையில் நடத்தப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேருவதற்கு இந்த தேர்வு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அங்குள்ள பல பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு சாட்-1 தேர்வின் மதிப்பெண்களை கேட்கின்றன. பல பல்கலைக்கழகங்கள் சாட்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களை தான் சேர்த்துக்கொள்கின்றன. சாட்-1 தேர்வு எழுதுவதற்கு சுமார் 4 ஆயிரத்து 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சாட்-1: ரீசனிங் தேர்வு
இந்த தேர்வு மூன்றே முக்கால் மணி நேரம் நடக்கும். கேள்விகளுக்கு தரப்பட்டுள்ள பல பதில்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கும் முறையில் இருக்கும். வாசிப்புத் திறன், எழுத்துத் திறன் மற்றும் கணிதத் திறன் போன்றவற்றை அளவிடும் வகையில் இந்த தேர்வு அமைகிறது. இம்மூன்று பிரிவுகளுக்கும் தலா 800 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 2400 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. பல கல்லூரிகள் சாட்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அட்மிஷனில் முன்னுரிமை தருகின்றன.
சாட்-2: பாடத்தேர்வுகள்
கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மணி நேரம் சாட்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் லெவல்-1, கணிதம் லெவல்-2, ஆங்கில இலக்கியம், அமெரிக்க வரலாறு, உலக வரலாறு மற்றும் மொழிப்பாடங்கள். சாட்-2 தேர்வு ஆண்டுக்கு 6 முறை நடக்கிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் நடத்தப்படுகிறது.