sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

வெளிநாட்டில் படிக்க விருப்பமா?

/

வெளிநாட்டில் படிக்க விருப்பமா?

வெளிநாட்டில் படிக்க விருப்பமா?

வெளிநாட்டில் படிக்க விருப்பமா?


மே 18, 2009 12:00 AM

மே 18, 2009 12:00 AM

Google News

மே 18, 2009 12:00 AM மே 18, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளிநாட்டுக்கல்வியின் பயன்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

*  செய்முறைப் பயிற்சியுடன் கற்க முடியும்
*  துறை சார்ந்த சிறப்பு பயிற்சி
*  உலகளவிலான அங்கீகாரம்
*  மாறுபட்ட பண்பாட்டுச் சூழல்
*  நவீன தொழில் நுட்பம் மற்றும் வசதிகள்
*  சிறப்பாக பாடம் நடத்தும் முறை
*  உலகளாவிய வேலைவாய்ப்புகள்
* உலகம் முழுவதும் உள்ள முன்னாள் மாணவர்களுடன் தொடர்பு

மாணவர்கள் அதிகம் விரும்பும் நாடுகள்
*  அமெரிக்கா
*  இங்கிலாந்து
*  கனடா
*  ஜெர்மனி
*  ஆஸ்திரேலியா
*  அயர்லாந்து
*  நியூசிலாந்து
*  சுவிட்சர்லாந்து

நீங்களும் படிக்கலாம்!
தேவையான திறனும், முழுமையான தயார்படுத்தலும் இருந்தால், வெளிநாடுகளில் கல்வி கற்பது மிகவும் எளிமையானது தான். விதிமுறைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபட்டாலும், சில விஷயங்கள் பொதுவானவை. வெளிநாட்டுக்கு சென்று படிக்க விரும்பும் ஒரு மாணவன் குறிப்பாக இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

1. பொருத்தமான பல்கலைக்கழகத்தை தேர்வு செய்ய வேண்டும். படிப்பு செலவு, பாடம், தரவரிசை, வேலைவாய்ப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2. விசா நடைமுறைகளின் போது, நிதி, கல்வித் தகுதி, சொந்தநாட்டில் உள்ள உடைமைகள் போன்றவை குறித்த தகவல்களுடன் தயார்நிலையில் இருக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு நடைமுறைகளும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. சரியான திட்டமிடல் இருந்தால் இரண்டு விஷயங்களையும் திறம்பட கையாளலாம்.

முறையாக திட்டமிடாமல் சில மாணவர்கள் சிக்கல்களில் மாட்டிக் கொள்வதை நாம் காண்கிறோம். மாணவருடைய நிதிநிலைமை சரியாக இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை பல்கலைக்கழகம் மற்றும் குடியேற்ற துறையிடம் அளிக்க வேண்டும். முதலில் நம்முடைய நிதிநிலைமையை மதிப்பிட்டு, அதற்கேற்ற பொருத்தமான நாட்டையும், பல்கலைக்கழகத்தையும் தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.

பல்கலைக்கழகத்தை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து அடுத்தவாரம் காணலாம்.






      Dinamalar
      Follow us