/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
கால்நடை கல்விக்கு என்.டி.ஆர்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (57)
/
கால்நடை கல்விக்கு என்.டி.ஆர்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (57)
கால்நடை கல்விக்கு என்.டி.ஆர்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (57)
கால்நடை கல்விக்கு என்.டி.ஆர்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (57)
மே 16, 2009 12:00 AM
மே 16, 2009 12:00 AM
அரியானாவில் உள்ள கர்னாலில் அமைந்துள்ளது ‘நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ (என்.டி.ஆர்.ஐ.,) ஆசியாவிலேயே பால்வளம் தொடர்பான படிப்புகளை வழங்கும் சிறந்த கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 1989ம் ஆண்டு இதற்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது.
கிராமப்புற பொருளாதாரத்தில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் கால்நடை வளத்தை பெருக்கும் வகையில் பால்வள ஆராய்ச்சி மையம் 1923ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கால்நடைகள், பால் உற்பத்தி, அவை தொடர்பான பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கினர்.
இது ‘இம்பிரியல் இன்ஸ்டிடியூட் பார் அனிமல் ஹஸ்பண்டரி’ என்ற பெயரில் பெங்களூருவில் தொடங்கப்பட்டது. 1936ல் ‘இம்பீரியல் டெய்ரி இன்ஸ்டிடியூட்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது 1955ம் ஆண்டு கர்னாலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. எனினும் என்.டி.ஆர்.ஐ.,யின் வளாகம் ஒன்று பெங்களூருவிலும் செயல்பட்டு வருகிறது.
இங்கு இளநிலை படிப்பாக பி.டெக்., டெய்ரி டெக்னாலஜி உள்ளது. முதுநிலை படிப்பை
- டெய்ரி மைக்ரோபயாலஜி
- டெய்ரி கெமிஸ்ட்ரி
- டெய்ரி டெக்னாலஜி
- டெய்ரி இன்ஜினியரிங்
- டெய்ரி பயோடெக்னாலஜி
- டெய்ரி பயோகெமிஸ்ட்ரி
- அனிமல் ஜெனிட்டிக்ஸ் அண்டு பிரீடிங்
- லைவ்ஸ்டாக் புரடக்ஷன் அண்டு மேனேஜ்மென்ட்
- அனிமல் நியூட்டிரிஷியன்
- அனிமல் பிசியாலஜி
- டெய்ரி எகனாமிக்ஸ்
- டெய்ரி எக்ஸ்டென்ஷன் எஜுகேஷன்
ஆகிய பிரிவுகளில் தொடரலாம். இவை மூன்றாண்டு முதுநிலை படிப்புகள். எனினும் தொழிற்கல்வி முடித்தவர்களுக்கு இரண்டாண்டு படிப்பாக வழங்கப்படுகிறது. இங்கு கீழ்க்கண்ட பிரிவுகளில் பிஎச்.டி., வழங்கப்படுகிறது.
- டெய்ரி மைக்ரோபயாலஜி
- டெய்ரி கெமிஸ்ட்ரி
- டெய்ரி டெக்னாலஜி
- டெய்ரி இன்ஜினியரிங்
- அனிமல் பயோகெமிஸ்ட்ரி
- அனிமல் பயோடெக்னாலஜி
- அனிமல் ஜெனிட்டிக்ஸ் அண்டு பிரீடிங்
- லைவ்ஸ்டாக் புரடக்ஷன் அண்டு மேஜேன்மென்ட்
- அனிமல் நியூட்டிரீஷியன்
- அனிமல் பிசியாலஜி
- டெய்ரி எகனாமிக்ஸ்
- டெய்ரி எக்ஸ்டென்ஷன் எஜுகேஷன்
பிஎச்.டி., படிப்பின் காலம் இரண்டரை ஆண்டு முதல் நான்காண்டு வரை. மொத்தம் ஆறு ஹாஸ்டல்கள் இங்கு உள்ளன. ஏறத்தாழ 600 பேர் வரை இங்கு தங்க முடியும். இவற்றில் மாணவிகளுக்கு ஒன்று. திருமணமான பிஎச்.டி., மாணவர்களுக்கு தனியான ஹாஸ்டல் வசதி உள்ளது. திருமணமான வெளிநாட்டு மாணவர்களுக்கும் தனியாக ஹாஸ்டல் உள்ளது.