sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

புவி அறிவியல் - ஜியோ சயின்ஸ் துறை அறிமுகம்

/

புவி அறிவியல் - ஜியோ சயின்ஸ் துறை அறிமுகம்

புவி அறிவியல் - ஜியோ சயின்ஸ் துறை அறிமுகம்

புவி அறிவியல் - ஜியோ சயின்ஸ் துறை அறிமுகம்


மே 16, 2009 12:00 AM

மே 16, 2009 12:00 AM

Google News

மே 16, 2009 12:00 AM மே 16, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூமி, கடல், வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய அனைத்து அம்சங்களைப் பற்றிப் படிக்கும் பிரிவு புவி அறிவியல் அல்லது ஜியோ சயின்ஸ் என அழைக்கப்படுகிறது. பூமியிலிருந்தே நாம் அனைத்து வளங்களையும் பெறுவதாலும் இவை கிடைப்பது குறிப்பிட்ட அளவில் என்பதாலும் இவை தொடர்பான படிப்புக்கான முக்கியத்துவம் நாளாக நாளாக அதிகரித்து வருகிறது.

ஜியோ சயின்ஸ் துறையானது எண்ணெய், இயற்கை எரிவாயு, எரிபொருள், மினரல், நீர், மண் போன்ற வளங்களை ஆய்வு செய்வது, இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது, இயற்கையின் சீற்றங்களான நில நடுக்கம், மண் சரிவு போன்றவற்றிலிருந்து புவியைப் பாதுகாப்பது போன்ற அம்சங்களில் தனது கவனத்தை செலுத்துகிறது.

பணித் தன்மை
ஜியோ சயின்டிஸ்டுகளாகப் பணி புரிபவர்கள் மனித இனம், தகவல், புதிய சிந்தனைகள், தொழில்நுட்பம் போன்றவற்றை இணைத்துபணி புரிகிறார்கள். ஆய்வுக் கூடங்கள் மற்றும் அலுவலகங்களில் இவர்கள் பணிபுரிகிறார்க்ள. பணி நிமித்தமாக வெளியிடங்களுக்குச் சென்று பணி புரிவதும் கட்டாயத் தேவையாக இருக்கிறது. இதே போல மாறுபட்ட பருவநிலைகளில் பணி புரிவது, நிலநடுக்கம், எரிமலை இருக்கும் பகுதிகளில் பணி புரிவது போன்ற அபாயகரமான சூழல்களையும் சந்தித்து தகவல்களை சேமிப்பது இவர்களின் பணித் தன்மையாக உள்ளது.

துறைப் பிரிவுகள்
ஜியோ சயின்ஸ் துறையில் பல்வேறு மாறுபட்ட உட்பிரிவுகள் உள்ளன. புவியின் இயற்கைத் தோற்றங்களைப் படிப்பதற்காக பாறைகள், மண் போன்றவற்றைத் தோண்டி ஆய்வு செய்வது இதில் ஒன்று. வளி மண்டலம், ஹைட்ரோஸ்பியர், பூமி போன்றவற்றின் தன்மையை அறிவதற்காக ஜியோசயின்டிஸ்டுகள் இயற்பியல், கணிதம், வேதியியல் போன்ற தத்துவங்களை பயன்படுத்துகிறார்கள். நிலத்தடி நீரிலுள்ள வேதிப் பொருட்கள் மற்றும் கனிமங்களின் அளவையும் இவர்களே ஆய்வு செய்கிறார்கள்.

ஹைட்ரோஜியாலஜிஸ்டுகள் நிலத்தடி நீரையும் ஓசனோகிராபர்கள் கடல் தொடர்புடைய ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். பெட்ரோலியம் ஜியாலஜிஸ்டுகள் இயற்கை எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இருப்பிடம் மற்றும் உற்பத்தி குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். சீஸ்மாலஜிஸ்டுகள் உபகரணங்களின் உதவியோடு நில நடுக்கம் மற்றும் அது தொடர்பான காரணங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.

கடுமையான தட்பவெப்பத்தில் பணி புரிவது, பூமிக்கு அடியில் பணி புரிவது போன்ற சவாலான பணிகள் நிறைந்த இத் துறையில் பணியாற்ற மிக நல்ல உடல் தகுதி பெற்றிருப்பது அவசியத் தேவைகளாகும். மேலும் குழு மனப்பான்மை, நிர்வாகத் திறன் மற்றும் தலைமைப் பண்புகளைப் பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது.

என்ன படிக்கலாம்
சில பள்ளிகளில் பிளஸ் 2 நிலையிலேயே ஜியாலஜி ஒரு பாடமாக உள்ளது. பி.எஸ்சி.,யில் ஜியாலஜி படிக்க +2வல் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் படித்திருக்க வேண்டும். நாடெங்கும் 70 பல்கலைக்கழகங்களில் இப் படிப்பு உள்ளது. பிளஸ் 2வுக்குப் பின் அப்ளைட் ஜியாலஜி, பி.எஸ்சி., ஜியோகெமிஸ்ட்ரி, பி.எஸ்சி., ஜியோபிசிக்ஸ், 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகள் இத் துறையில் நடத்தப்படுகின்றன. இதை தொழில்நுட்பப் படிப்பாக மேற்கொள்ள நினைத்தால் பட்ட மேற்படிப்பாக இதை முடிக்க வேண்டும். இப்படிப்பில் களப்பணி என்பது அடிப்படையாகும். இத்துறையில் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்ற பிஎச்.டி., அவசியம். இத்துறையில் அப்ளைட் ஹைட்ராலஜி, அப்ளைட் ஜியோ கெமிஸ்ட்ரி, அப்ளைட் குவார்ட்டர்னரி ஜியாலஜி, என்விரான்மென்டல் ஜியாலஜி போன்ற பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

துறை எதிர்காலம்
யு.பி.எஸ்.சி., நடத்திடும் சிவில் சர்விசஸ் மற்றும் இந்திய வனச் சேவைத் தேர்வுகளில் இத் துறையில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு தகுதி பெற்றிருப்பவர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த குரூப் ஏ அதிகாரிகளாகப் பணியாற்றலாம். ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவின் தேர்வில் ஜியாலஜி, அப்ளைட் ஜியாலஜி, மரைன் ஜியாலஜி, மினரல் எக்ஸ்புளோரேஷன் இவற்றில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவர் கலந்து கொள்ளலாம். இதில் ஆங்கிலத் திறன், பாடத்திறன் பரிசோதிக்கப்படுகின்றன. நேர்காணலும் உண்டு. இவை பற்றிய தகவல்களை தீதீதீ.தணீண்ஞி.ஞ்ணிதி.டிண தளத்தில் அறியலாம்.

ஜியோ சயின்டிஸ்டுகளுக்கு பிற இடங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ், மினரல் எக்ஸ்புளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடட், இந்திய வானிலை மையம், ஓ.என்.ஜி.சி., ஜெம் இண்டஸ்ட்ரி, கட்டுமானத் துறை, கனிம ஆய்வு நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் என எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள் இத்துறையின் சிறந்த கல்வி நிறுவனங்கள் சில இங்கே குறிப்பிடப்படுகின்றன.
ISM University, Dhanbad
Indian Institute of Technology, Kharagpur
Indian Institute of Technology, Roorkee
University of Pune, Pune
Cochin University of Science & Technology, Kochi.






      Dinamalar
      Follow us