sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

சிறந்த படிப்பை தேர்வு செய்வது எப்படி

/

சிறந்த படிப்பை தேர்வு செய்வது எப்படி

சிறந்த படிப்பை தேர்வு செய்வது எப்படி

சிறந்த படிப்பை தேர்வு செய்வது எப்படி


மே 23, 2009 12:00 AM

மே 23, 2009 12:00 AM

Google News

மே 23, 2009 12:00 AM மே 23, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

9. கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
வளர்ச்சியடையாத நாடுகளில் கூட மக்களின் அன்றாடத் தேவைகளின் ஒரு பகுதியாக கம்ப்யூட்டர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜவுளிக்கடைகளில் துணிகளுக்கு விலைப்பட்டியல் தயார் செய்வதிலிருந்து விண்வெளிக்கு ராக்கெட் களை அனுப்புவது வரை அனைத்து துறைகளிலும் ஏதேனும் ஒரு வகையில் கம்ப்யூட்டர் முக்கியப்பங்கு வகிக்கிறது.

இப்படிப்பில் உள்ள பாடத் திட்டங்கள் கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பானவற்றை வடிவமைத்தலுடன் தொடர்புடையது. இதில் சாப்ட்வேர், ஹார்டுவேர், தகவல் தொடர்புபாடங்களும் உள்ளன. எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், கணிதம் தொடர்பான நுணுக்கங் களை கம்ப்யூட்டர் மற்றும் அது தொடர்பான கருவிகளின் வடிவமைப்பில் பயன்படுத்த கற்றுத் தரப்படுகின்றன.

புரோகிராமிங், நெட்வொர்க்கிங், டேட்டாபேஸ், இன்டர்நெட் போன்ற பாடத்திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மனிதனைப் போல் வேலை செய்யும் ரோபோ மற்றும் நுண்ணறிவு கருவிகள் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பின் மூலம் உருவாக்கப்பட்டவையே. மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப இதில் உள்ள சாப்ட்வேர் அல்லது ஹார்ட்வேர் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து வெற்றி பெறலாம்.


10.டெய்ரி சயின்ஸ்/டெய்ரி டெக்னாலஜி
டெய்ரி சயின்ஸ் படிப்பில் அனிமல் நியூட்ரிஷன், பிசியாலஜி, லாக்டேஷன், ஜெனடிக்ஸ், ரீபுரொடக்ஷன், என்டர்பிரைஸ் மேனேஜ்மென்ட்,நேச்சுரல் சயின்ஸ், அனிமல் பயாலஜி, பிரீடிங், நியூட்ரிஷன், பைனான்ஸ், இன்பர்மேஷன் மேனேஜ்மென்ட் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன. இப்படிப்பில் பால் மற்றும் பால்பொருட்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பாலில் உள்ள உயிரியல், வேதியியல், இயற்பியல், நுண்ணுயிரியல் பற்றியும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெண்ணெய், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் உட்பட பல்வேறு உணவுப்பொருட்களை தயாரிப்பதைப் பற்றியும் கற்றுத் தரப்படுகிறது.

இந்தியாவின் விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு பால்நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பால்பண்ணைத் தொழிலில் கால்நடைகளைப் பாதுகாத்தல், சேமிப்புக் கிடங்குகள், செயல்முறைப்படுத்துதல், பால்பொருட்கள் வினியோகம் போன்றவை உள்ளடங்கியுள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உட்பட பால்நிறுவனங்களுக்குதேவையான தரக்கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு இப்படிப்புவழங்குகிறது.

இத்துறையில் இளங்கலை முடித்து, மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் டெய்ரி டெக்னாலஜி, வேதியியல், மைக்ரோபயாலஜி, இன்ஜினியரிங், ஜெனடிக்ஸ் அண்டு பிரீடிங், அனிமல் நியூட்ரிஷன், லைவ்ஸ்டாக் புரொடக்ஷன், அனிமல் பயோடெக்னாலஜி மற்றும் புட் டெக்னாலஜி, பிரிசர்வேஷன் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க முடியும்.

பால் வள மேம்பாட்டு வாரியம், பால் மேம்பாட்டு துறைகள், பால் நிறுவனங்கள், பால்பண்ணைகள், கூட்டுறவுச் சங்கங்கள், கிராம வங்கிகள், பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் இத்துறையை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. சுயதொழில் செய்ய விரும்புபவர்களும் சிறிய பால் உற்பத்தி மையங்களை தொடங்கலாம். இத்துறையை தேர்ந்தெடுப்பவர்கள் ஆராய்ச்சியாளராகவும், ஆசிரியராகவும் உருவாகலாம்.

11. எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
இன்ஜினியரிங்கில் வழக்கமாக உள்ள எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பே எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பு ஆகும். ஜெனரேசன், ட்ரான்ஸ்மிஷன், டிஸ்டிரிபியூசன், உட்டிலிஷேசன் ஆப் எலக்ட்ரிக்கல் பவர் உள்ளிட்ட பவர் இன்ஜினியரிங் பாடத்திட்டங்களை இப்படிப்பு கொண்டுள்ளது. இது பாதுகாப்பு சாதனங்கள், எலக்ட்ரிக்கல் இயந்திரங்களை வடிவமைத்தல் மற்றும் தயாரித்தல், மின்சாதனப் பொருட்கள் மற்றும் மின்கம்பிகளைப் பராமரித்தல், எலக்ட்ரிக் இன்ஜின்கள், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள், கேபிள்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

அனலாக் அண்டு டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மைக்ரோபி ராஸஸர்ஸ் அண்டு இட்ஸ் அப்ளிகேஷன்ஸ், கன்ட்ரோல் சிஸ்டம்கள், மைக்ரோபிராஸஸர்களை அடிப்படையாகக் கொண்ட கருவிகளை வடிவமைத்தல் போன்ற பாடப்பிரிவுகள் இப்படிப்பில் உள்ளன.

பெரும்பாலும் மாநில மின்வாரியங்கள், தனியார் மின்சார வினியோக நிறுனங்கள், எலக்ட்ரிக்கல் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் மையங்கள் ஆகியவற்றில் இத்துறையை சேர்ந்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கின்றன. ஒவ்வொரு மிகப்பெரிய தொழிற்சாலைக்கும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்களின் தேவை தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது.

12. எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் துறைகளுள் இதுவும் ஒன்று. இப்படிப்பில் சாலிட் ஸ்டேட் டிவைஸ், நெட்வொர்க் தியரி, கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், டெலிபோன் அண்டு பேக்ஸ், பல்ஸ் சர்க்கியூட்ஸ், லீனியர் இன்டெக் ரேட்டர் சர்க்யூட்ஸ், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ், வி.எல்.எஸ்.ஐ., கம்ப்யூட்டர் ஆர்கனிசேஷன் அண்டு ஆர்க்கிடெக்சர், மைக்ரோபிராசஸரை அடிப்படையாகக் கொண்டவற்றை வடிவமைத்தல், ரேடியோ அண்டு டெலிவிஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமென்டேசன், மைக்ரோவேவ் இன்டக்ரேட்டட் சர்க்கியூட்ஸ், ஆப்டிகல் கம்யூனிகேஷன், ரேடார் அண்டு நேவிகேஷன் எய்ட்ஸ், பிராசஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன், மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன.

எலக்ட்ரானிக்ஸ் துறையைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்ய வேண்டும். சில மாணவர்கள் இந்த துறையை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் அடைந்து விடுகின்றனர். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் எலக்ட் ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கையும், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பயில விரும்பும் மாணவர்கள் அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்பையும் தேர்வு செய்ய வேண்டும்.

எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தக்கூடிய பல்வேறு தொழிற்சாலைகளில் இத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இதற்கு ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்கள், எலக்ட்ரானிகள் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், டெலிபோன் துறைகள் மற்றும் நிறுவனங்கள், கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட நிறுவனங்கள், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், பொழுதுபோக்கு துறை, செயற்கைக்கோள் தகவல்தொடர்பு வசதிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

13. உணவு அறிவியல் / உணவு தொழில்நுட்பம்
 தனிநபரின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதில் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒரு நாடு பொருளாதாரத்திலும், சமூக ரீதியாகவும் முன்னேறும்போது பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் தேவையும் அதிகரிக்கிறது. இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் 10 சதவீதத்துக்கு குறைவாகவும், வளர்ந்த நாடுகளில் 80 சதவீதமும் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படிப்பில் இயற்பியல், மைக்ரோபயாலஜிக்கல், உணவில் வேதிப்பொருட்களை பயன்படுத்துதல் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன. உணவை தயாரித்தல், கெடாது பாதுகாத்தல், பேக்கிங் செய்தல், சேமித்து வைத்தல் போன்றவையும் கற்றுத்தரப்படுகிறது. பழங்கள், ஜுஸ், ஜாம், பழச்சாறு, கடல்உணவு, இறைச்சி, ஊறுகாய் போன்ற உணவுகளை கெடாது பாதுகாத்தல் இத்துறையின் முக்கிய அம்சமாகும்.

மேலும் மாவுப்பொருட்கள், பிஸ்கட், கேக், திண்பண்டங்கள், ஜுஸ், ஜாம் மற்றும் பல விதமான உணவுப்பொருட்கள் தயாரிப்பது இப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. பால்பொருட்கள் தயாரித்தல், தானியக் கிடங்குகள், உணவு சுகாதாரம், மார்க்கட்டிங் அண்டு ரிசர்ச் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த உணவு தொழில்நுட்பவல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். உணவு தொழில்நுட்பப் படிப்பு கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

1.பயோகெமிஸ்ட்ரி அண்டு நியூட்ரிஷன்
2.கெமிஸ்ட்ரி ஆப் புட்ஸ்
3. இண்டஸ்ட்ரியல் மைக்ரோபயாலஜி அண்டு பயோகெமிக்கல் இன்ஜினியரிங்
4. இன்பெஸ்டேஷன் கன்ட்ரோல் அண்டு பெஸ்டிசைட்ஸ்
5. பேக்கேஜிங் டெக்னாலஜி
6. பிரின்சிபில்ஸ் ஆப் புட் பிராசஸிங்
7. டெக்னாலஜி ஆப் புட்ஸ்: இறைச்சி, மீன், கோழி இறைச்சி போன்றவற்றை தயாரித்தல், பாதுகாத்தல்
8. புட் பிளான்ட் ஆர்கனிசேஷன் அண்டு மேனேஜ்மென்ட்
உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனங்கள், சிறந்தஹோட்டல்கள், மருத்துவமனைகள், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், மிகப்பெரிய மாவு மில்கள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றில் இத்துறை வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இத்துறையில் சிறந்து விளங்குபவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறலாம்.

-பி.எஸ்.வாரியார்






      Dinamalar
      Follow us