/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வெளிநாடு சென்று படிக்க விருப்பமா (10)
/
வெளிநாடு சென்று படிக்க விருப்பமா (10)
மே 23, 2009 12:00 AM
மே 23, 2009 12:00 AM
வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒரு மாணவர் படிக்கப் போகும் நாட்டை தேர்வு செய்யும் போது, அதன் புவியியல் அமைப்பு, தட்பவெப்ப நிலை, உறவினர்கள் அங்கு வசிக்கின்றனரா, அதன் சர்வதேச மாணவர் கொள்கை, அங்கு படிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, நாட்டின் இடப்பெயர்ச்சிக் கொள்கைகள், படிப்பு முடிந்ததும் வேலைவாய்ப்பு போன்ற விஷயங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதில் நூறு சதவீதம் துல்லியமாக இருந்தால், நல்ல பலன்களை அடைய முடியும். எந்த நாட்டில் படிக்க போகிறோம் என்று முடிவு செய்து விட்டால், பின்னர் அடுத்த கட்டமாக பல்கலைக்கழகம் மற்றும் படிப்பை முடிவு செய்யலாம். ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு, அதன் வெப்சைட்டில் உள்ள தகவல்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு முடிவெடுத்து விடாதீர்கள்.
சில கல்வி நிறுவனங்களும், படிப்புகளும் மற்றவற்றை விட மதிப்புமிக்கதாக கருதப்படும். கல்வி நிறுவனத்தின் ரேங்கிங், அங்கீகாரம், ஆராய்ச்சி வசதிகள், தகவல் தொழில்நுட்ப வசதிகள், நூலகம், கல்வி நிறுவன வளாகம், பாடத்திட்டம் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் பெறும் கல்வியை விட, நாம் படிக்கும் கல்விநிறுவனம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
படிப்பின் பெயர் ஒரே மாதிரி இருந்தாலும் கல்விநிறுவனங்களுக்கு ஏற்ப கற்றுக் கொடுக்கும் விதமும், பாடத்திட்டமும் பெரிதும் மாறுபடும். எனவே ஒரே படிப்பை வேறு வேறு கல்வி நிறுவனங்கள் எவ்வாறு கற்றுக் கொடுக்கின்றன, பாடத்திட்டங்களில் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என்பதை ஒப்பிட்டு தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பை தேர்வு செய்வதற்கு முன்னர், அதன் அங்கீகாரம் பற்றியும் மிகவும் கவனமாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.