/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
மீன்வள படிப்புக்கு சி.ஐ.எப்.இ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (60)
/
மீன்வள படிப்புக்கு சி.ஐ.எப்.இ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (60)
மீன்வள படிப்புக்கு சி.ஐ.எப்.இ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (60)
மீன்வள படிப்புக்கு சி.ஐ.எப்.இ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (60)
ஜூன் 06, 2009 12:00 AM
ஜூன் 06, 2009 12:00 AM
மும்பையில் அமைந்துள்ள ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரிஸ் எஜுகேஷன்’(சி.ஐ. எப்.இ.,) மீன்வளம் தொடர்பான படிப்புகளுக்காக இந்தியாவில் செயல்படும் ஒரே நிகர்நிலை பல்கலைக்கழகம். இது 1961ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தொடங்கி இருபது ஆண்டுகளுக்கு பின்னர் ‘இந்திய விவசாய கவுன்சிலின் நிர்வாகத்தின் கீழ் சி.ஐ.எப்.இ., கொண்டுவரப்பட்டது. பின்னர் 1989ல் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப் பட்டது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவிலும், அரியானாவின் ரோதக்கிலும், ஆந்திராவின் காக்கிநாடாவிலும், மத்திய பிரதேசத்தின் பவர் கேடாவிலும் இதன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்குள்ள முதுநிலை (எம்.எப்.எஸ்சி.,) படிப்புகள்
- பிஷரிஸ் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்
- அக்குவாகல்சர்
- அக்வாட்டிக் அனிமல் ஹெல்த் மேனேஜ்மென்ட்
- அக்வாட்டிக் என்விரான்மென்ட் மேனேஜ்மென்ட்
- பிஷரிஸ் நியூட்ரீஷியன் அண்டு பயோகெமிஸ்டரி
- பிஷரிஸ் ஜெனிட்டிக்ஸ் அண்டு பயோடெக்னாலஜி
- பிஷரிஸ் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்டு எவல்யூஷன்
சி.ஐ.எப்.இ.,யில் உள்ள ஆராய்ச்சி படிப்புகள்
- பிஷரிஸ் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்
- அக்வாகல்சர்
- போஸ்ட் ஹார்வஸ்ட் டெக்னாலஜி
- பிஷ் ஜெனிட்டிக்ஸ்
- பிஷ் பயோடெக்னாலஜி
- பிஷ் பேத்தாலஜி அண்டு மைக்ரோபயாலஜி
- பிஷ் நியூட்ரிஷியன் அண்டு பயோகெமிஸ்ட்ரி
- பிஷ் பிசினஸ் மேனேஜ்மென்ட்
முதுநிலை படிப்பில் மொத்தமாக 45 இடங்களும், ஆராய்ச்சி படிப்பில் 25 இடங்களும் மட்டுமே உள்ளன. முதுநிலை படிப்பில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். ‘போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் இன்லாண்ட் பிஷரிஸ் மேனேஜ்மென்ட்’ என்ற டிப்ளமோ படிப்பும் சி.ஐ.எப்.இ.,யில் உள்ளது.
மீன்வளம் தொடர்பான பிரத்தியேக நூலகம் ஒன்று இங்கு இயங்கி வருகிறது. ‘நேஷனல் லைப்ரரி பார் பிஷரிஸ் அண்டு அலைடு சயின்சஸ்’ என பெயரிடப்பட்ட இந்த நூலகத்தில் புத்தகங்கள், ‘சிடி’, மைக்ரோபிலிம்களும் உள்ளன. மாணவர்களின் செய்முறை பயிற்சிகளுக்காக இரண்டு பிரம்மாண்ட மீன்பிடி படகுகளும் சி.ஐ.எப். இ.,யில் உள்ளது. சரஸ்வதி, நர்மதா என பெயரிடப்பட்டுள்ள இந்த படகுகளில், ஜி.பி.எஸ்., வி.எச்.எப்.ஆர்., ரேடியோ டெலிபோன், எக்கோ சவுண்டர், சோனார், ‘டிரால் ஐ’ உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
சி.ஐ.எப்.இ.,யில் உள்ள மியூசியத்தில், அரிய வகை மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் எடுத்து பதப்படுத்தி, பாதுகாத்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஹாஸ்டல், ஜிம், இன்டர்நெட்டுடனான கம்ப்யூட்டர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.