sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

சிறந்த படிப்பை தேர்வு செய்வது எப்படி

/

சிறந்த படிப்பை தேர்வு செய்வது எப்படி

சிறந்த படிப்பை தேர்வு செய்வது எப்படி

சிறந்த படிப்பை தேர்வு செய்வது எப்படி


ஜூன் 06, 2009 12:00 AM

ஜூன் 06, 2009 12:00 AM

Google News

ஜூன் 06, 2009 12:00 AM ஜூன் 06, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைனிங் இன்ஜினியரிங் இந்த படிப்பு இயற்கையில் கிடைக்கும் வளங்களை பிரித்தெடுத்து புதுப்பித்தல், ஆராய்தல் போன்ற பாடங்களை உள்ளடக்கியது. மைனிங் இன்ஜினியர்கள் சுரங்கங்களில் பாதுகாப்பான, லாபகரமாக முறையில் வடிவமைத்தல், இயக்குதல், நிர்வகித்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். சுரங்கத்தொழிலில் பாதுகாப்பே முக்கியமானது.

கனிமப்பொருட்களை தோண்டி எடுப்பதற்கும், அவற்றை பிரிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்வதற்கும் நன்கு பயிற்சி பெற்ற, பொறுப்பான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். மைனிங் இன்ஜினியர்கள் பூமியின் அடியில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரி, பெட்ரோலியம், உலோகம் மற்றும் உலோகமற்ற கனிமப் பொருட்களை பாதுகாப்பாக பிரித்தெடுக்க திட்டம் வகுத்துத் தருகின்றனர். நில அமைப்பியல் வல்லுனர்களுடன் இணைந்து கனிம வளம் குறித்த ஆய்வுகளிலும் இவர்கள் ஈடுபட வேண்டியிருக்கும்.

பாதுகாப்பான முறையில் பாறைகளை வெடிக்கச் செய்து, தாதுப்பொருட்களை சேகரித்தல் இதன் தனிச்சிறப்பு மிக்க ஒரு பகுதியாகும். நிலக்கரி சுரங்களிலிருந்து கனிம வளங்களை அனல்மின் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் மைனிங் இன்ஜினியர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

இதனைத் தேர்ந்தெடுப்பவர்கள் சுரங்கங்கள் தொடர் பான சூழலில் மகிழ்ச்சியாக வேலைபார்க்க பழகிக் கொள்ள வேண்டும். மைனிங் இன்ஜினியரிங் படிப்பு பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. பொதுவாக பெண்கள் இத்துறையை தேர்ந்தெடுப்பதில்லை.

பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங்

இப்படிப்பில் கெமிக்கல் இன்ஜினியரிங்கில் உள்ள பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதில் பெட்ரோகெமிக்கல் பற்றியும், சுத்திகரிப்பு பற்றியும் விரிவாக கற்றுத்தரப்படுகிறது. பெட்ரோலியம் அல்லது இயற்கைவாயுக்களிலிருந்து பெறப்படும் பல்வேறு பொருட்களை நாம் வீடுகளிலும், தொழிற் சாலைகளிலும் பயன்படுத்தி வருகிறோம்.

எத்திலின், பென்சீன், நைலான், பிளாஸ்டிக், ரெசின், சிந்தடிக் இழைகள், பிலிம், டிடர்ஜென்ட், பெயின்ட், வார்னிஷ், உரங்கள், பூச்சிக் கொல்லிகள், காஸ்மெட்டிக், மருந்துப்பொருட்கள் இவற்றுக்கு சில உதாரணங்கள் ஆகும். குரூட் ஆயில் மூலக்கூறுகள் பல்வேறு சிறு பொருட்களாக பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றையும் மறுபடி ஒருங்கிணைத்து பிளாஸ்டிக், பாலிமர், சிந்தடிக் ரப்பர் லூப்ரிகேட்டிங் ஆயில், சிந்தடிக் இழை போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் ஒருவரே பணியாற்ற முடியாது. இதில் தனிச்சிறப்பு மிக்க பல பிரிவுகள் உள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் புதுமைகளைப் படைக்கும் மனப்பாங்கு உள்ளவர்கள் பல்வேறு வேலை வாய்ப்புகளை பெறலாம்.

இத்துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு மேலே குறிப்பிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

பாலிமர் டெக்னாலஜி பாலிமர்கள் இயற்கையாகவோ அல்லது மோனோமர் எனப்படும் வேதிப்பொருட்களால் செயற்கையாகவோ கிடைக்கின்றன. புரோட்டீன்கள், செல்லுலோஸ், பிளாஸ்டிக்குகள் மற்றும் ரப்பர் ஆகியவை பாலிமர்களுக்கு சில உதாரணங்கள் ஆகும். பாலிமர்கள் ஜவுளித் துறைக்காக இழைகளாகவோ அல்லது பிளாஸ்டிக்குகளாகவோ உருமாற்றம் செய்யப்படுகின்றன.

நமது அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக்குகள் ஒரு முக்கியப்பொருளாக உருவாகியுள்ளன. தொழிற்சாலை கருவிகளின் பாகங்கள், ஆட்டோமொபைல் பாகங்கள் போன்றவற்றை எடைகுறைவாக வடிவமைக்க சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத பிளாஸ்டிக்குகள் பயன்படுகின்றன.  இப்படிப்பில் பாலிமெரிக் மெட்டீரியல் சயின்ஸ், காம்போசைட்ஸ், பாலிமெரிக் பிளட்ஸ், அனலைசிஸ் அண்டு டிசைன் ஆப் பாலிமர் பிராசசிங் ஆபரேசன், பாலிமெரிசேஷன் ரியக்டர் இன்ஜினியரிங், மோல்ட்ஸ் அண்டு மெஷின்ஸ் இன் பாலிமர் இண்டஸ்ட்ரி, மேனுபக்சரிங் டெக்னிக்ஸ், ஸ்பெஷல் பாலிமர்ஸ் பார் பயோமெடிக்கல் அண்டு ஏரோஸ் பேஸ் அப்ளிகேஷன்ஸ், டெஸ்டிங் அண்டு குவாலிட்டி கன்ட்ரோல், இண்டஸ்ட்ரியல் அப்ளிகேஷன்ஸ் போன்ற பாடத்திட்டங்கள் உள்ளன.

பாலிமர் இன்ஜினியர்கள் கடும் முயற்சி செய்து மெட்டல், மரத்துண்டு, கண்ணாடி போன்றவற்றுக்கு பதிலாக பாலிமர்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இதன் மூலமாக தொழிற்சாலைகளின் உற்பத்தி செலவை குறைக்கலாம். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு இத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

பிரின்டிங் டெக்னாலஜி

நாகரிக மனித வாழ்க்கையின் மிக முக்கிய கண்டுபிடிப்பு அச்சுக்கலை. படமாகவோ, எழுத்து வடிவிலோ உள்ள பிரதிகளை பல நகல்களாக எடுக்க அச்சுக்கலை பயன்படுகிறது.

பிரின்டிங் டெக்னாலஜி கலை, அறிவியல் மற்றும் தொழிற்துறை சார்ந்த படிப்பு. எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற துறைகளின் வளர்ச்சியால் அச்சுத்துறை பெருமளவில் முன்னேறியுள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் மாற்றங்கள் ஏற்படும்.

இப்படிப்பில் பிரின்டிங் மெட்டீரியல்ஸ், பிரின்டிங் டிசைன் அண்டு பிராடக்ட்ஸ், டைபோகிராபி மற்றும் டிசைன் பிரின்சிபில்ஸ், டிபரன்ட் கைன்ட் ஆப் பிரெஸ்ஸஸ், பிளேட் மேகிங், ஆபரேசன் ஆப் ஆப்செட் பிரெஸ்சஸ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்டு சாப்ட்வேர், கம்ப்யூட்டரைஸ்டு டைப் செட்டிங், டெஸ்க்டாப் பப்ளிசிங், போட்டோகிராபி, டார்க்ரூம் டெக்னிக்ஸ், பேப்பர்ஸ், போட்ஸ் அண்டு தேர் கேரக்டரிஸ்டிக்ஸ், பிரின்டிங் இங்க்ஸ், பைண்டரி எக்யூப்மென்ட், ஸ்கேனர்ஸ், இமேஜ் எடிட்டிங், கலர் கரெக்சன், கலர் மேனேஜ்மென்ட், லேசர் பிரின்டர், டை சப்ளிமேஷன் ஸ்கிரீன் பிரின்டிங், வேர்ஹவுஸ் ஆபரேசன், புராடக்டிவிட்டி அண்டு குவாலிட்டி கன்ட்ரோல் போன்ற பாடத்திட்டங்கள் உள்ளன. விளம்பரம், சினிமா, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் போன்றவற்றின் தேவைகளுக்கு ஏற்ப பிரின்டிங் பிரஸ்கள் செயல்படுகின்றன.

பத்திரிகை, செய்தித்தாள் போன்றவற்றை வெளியிடும் பிரின்டிங் பிரஸ்களில் இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.  இப்படிப்பை முடித்த பட்டதாரிகள் சுயதொழிலும் தொடங்கலாம்.

புரடக்சன் இன்ஜினியரிங்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கின் மேம்படுத்தப்பட்ட படிப்பே புரடக்ன் இன்ஜினியரிங். உற்பத்தி தொழிற்சாலைகள் சிறந்த முறையில் இயங்க செய்முறைப்பயிற்சி மற்றும் திறன் கொண்ட தொழிலாளர்கள் முக்கியம். நவீன உற்பத்தி தொழிற்சாலைகளில் தயாரிப்பு இயந்திரங்கள் முழுவதும் கட்டுப்பாட்டு மையத்தினால் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கும்.

மேலாண்மை, அடிப்படை எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகியவை புரடக்சன் இன்ஜினியரிங் சார்ந்தவையே. மெஷின் டூல்ஸ், பவுண்ட்ரி, புரடக்சன் மேனேஜ்மென்ட், மேனுபக்சரிங் சிஸ்டம்ஸ், பிளான்ட் டிசைன், டூல் அண்டு டை மேகிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், டிசைன் ஆப் மெக்கானிக்கல் எக்யூப்மென்ட், மெஷினரி, காம்பனன்ட்ஸ், பிளான்ட் அண்டு சிஸ்டம்ஸ், டெவலப்பிங் ஸ்பெசிபிகேஷன் ஆப் மேனுபக்சர், செலக்சன் ஆப் மெட்டீரியல்ஸ், எக்யூப் மென்ட், பைப்பிங், மெட்டீரியல் புளோஸ், கெப்பாசிட்டீஸ் அண்டு லேஅவுட் ஆப் பிளான்ட் ஆர் சிஸ்டம்ஸ், கோஆர்டினேசன் ஆப் மேனுபக்சரிங் ஆக்டிவிட்டீஸ், குவாலிட்டி கன்ட்ரோல், ரோபோட் டிக்ஸ், மெயின்டெனன்ஸ் ஆப் பிளான்ட் பில்டிங்ஸ் அண்டு எக்யூப்மென்ட், மெயின்டெனென்ஸ் செட்டியூல் பிரிபரேஷன் போன்ற பல பாடப்பிரிவுகள் இதில் இடம் பெற்றுள்ளன.

பல்வேறு வகையான உற்பத்தி தொழிற்சாலைகள், புராசஸ் கன்ட்ரோல் யூனிட்கள், போன்றவற்றில் இதில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் வேலை வாய்ப்புகளை பெறுகின்றனர். மேலும் மெக்கானிக்கல் இன்ஜினியர்களாகவும், புரடக்சன் இன்ஜினியர்களாகவும், டெக்னிக்கல் மேனேஜர்களாகவும் இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பணிவாய்ப்புகள் கிடைக்கின்றன.

- பி.எஸ். வாரியார்






      Dinamalar
      Follow us