sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

அள்ளித்தரும் அனிமேஷன் துறை

/

அள்ளித்தரும் அனிமேஷன் துறை

அள்ளித்தரும் அனிமேஷன் துறை

அள்ளித்தரும் அனிமேஷன் துறை


ஜூன் 13, 2009 12:00 AM

ஜூன் 13, 2009 12:00 AM

Google News

ஜூன் 13, 2009 12:00 AM ஜூன் 13, 2009 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த சில ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்த அனிமேஷன் துறை இன்று ‘டாப் - 10’ துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்தியாவில் தற்போது அனிமேஷன் துறையின் வர்த்தகம் 3 ஆயிரம் கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இத்துறையில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி வருகிறது. சினிமா, ‘டிவி’, விளம்பரம், வெப்சைட் துறைகளில் உள்ள இந்திய நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. வால்ட் டிஸ்னி, ஐ-மேக்ஸ், சோனி ஆகியன கேம்ஸ், கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் துறையில் புகழ் பெற்ற நிறுவனங்கள். இந்தியாவிலும் இந்நிறுவனங்களும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன.

கற்பனைத் திறனும், வரைகலையில் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த துறைக்கு பொருத்தமானவர்கள். நமது கற்பனையில் தோன்றும் எண்ணங்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் எளிதில் வடிவம் கொடுக்கும் விதத்தை அனிமேஷன் துறை நமக்கு எளிதாக கற்றுத் தருகிறது. வரைந்த உருவத்தை பேசச் செய்வதும், ஆக்ஷனில் ஈடுபட வைப்பதும், வேலை பார்ப்போருக்கு முழுதிருப்தியையும் இத்துறை அளிக்கிறது.

அனிமேஷனில் ஒரு உருவத்தையோ அல்லது பொருளையோ உருவாக்குவதில் 3 நிலைகள் இருக்கின்றன. வரைந்து உருவாக்குவது, காட்சிப்படுத்த வடிவமைப்பது மற்றும் அனிமேஷன் ஆகியவை தான் அவை. அடிப்படையில் ஒரு சிலரிடம் சிறப்பான கற்பனை திறன் இருப்பதை காண்கிறோம். வேறு சிலருக்கு குறிப்பிட்ட சூழலில் கற்பனை சக்தி தாமாக உருவாவதை பார்க்கிறோம்.

இத்துறையில் எந்த அடிப்படை இல்லாதவரும் கூட கம்ப்யூட்டர், சிறப்புப் பயிற்சி மற்றும் சாப்ட்வேர் என்று ஏதுவான சூழலைப் பெறும் போது அனிமேஷன் துறையில் மிளிர்பவராக உருவாகின்றனர். அனிமேஷன் துறை சரியான சாப்ட்வேர்களை பயன்படுத்தி திறமையானவராக உருவாக பயிற்சியைத் தருகிறது. அறிவியல், கலை, இன்ஜினியரிங் என எந்த அடிப்படைப் படிப்பை முடித்தவரும் கூட இந்தப் படிப்பில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். தற்போது பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் மேற்படிப்புக்கு அனிமேஷன் துறையை தேர்வு செய்யலாம்.

அனிமேஷன் துறையில் துவக்கத்தில் ‘2-டி’ வடிவங்களை டிசைன் செய்து செயல்படுத்தவும், பின்பு ‘3-டி’ வடிவங்களை செயல்படுத்தவும் கற்றுத்தரப்படுகிறது. ‘2-டி’ பயில திறனும் ஆர்வமும் வேண்டும்.‘3-டி’யில் மிளிர தொழில்நுட்பத் திறன் தேவை. இவை அனிமேஷன் படிப்பில் முறையாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.

‘3-டி’, ‘2-டி’ மாடலர், ஸ்பெஷல் எபக்ட் கிரியேட்டர், அனிமேட்டர், கேரக்டர் டிசைனர், கேம்ஸ் டிசைனர், இன்டர் ஆக்ஷன் டிசைனர், காம்போசிடர், செல் அனிமேட்டர், பேக்ரவுண்ட் ஆர்டிஸ்ட், மாடலிங் ஆர்டிஸ்ட், விஷூவல் எபக்ட் ஆர்டிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான வேலைவாய்ப்புகளுக்கு இன்று தகுதி வாய்ந்த, பயிற்சி பெற்றவர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளதால், தற்போது இத்துறையில் படித்து முடிக்கும் மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.

படிப்பு முடிந்தவுடன், ரூ.10 ஆயிரம் வரை மாணவர்கள் எளிதில் பெறுகின்றனர். நன்றாக திறன்களை பயன்படுத்தத் தொடங்கிய பின் மாதம் ரூ.25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கூட சம்பளம் பெறுவது சாதாரணமாக இருக்கிறது. சினிமாத் துறையில் நுழையும் மாணவர்களின் சம்பளம் லட்சங்களை தொட்டுவிடுகிறது.

அனிமேஷன் படிக்க விரும்புவோர் குறுகிய கால படிப்புகளையோ அல்லது ஓராண்டு டிப்ளமோவை தேர்வு செய்வதை விட, மூன்றாண்டு படிப்புகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். வரையும் திறன் மற்றும் தொழில்நுட்ப அடிப்படைகளை புரிந்து கொள்ள அது உதவும். இந்தியாவிலேயே சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே மூன்றாண்டு பி.எஸ்சி., அனிமேஷன் படிப்பை வழங்குகின்றன. தமிழகத்தில், மதுரை அருப்புக்கோட்டை ரோட்டிலுள்ள சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியும், நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகமும் இப்படிப்பை வழங்குகின்றன. மரைன் இன்ஜினியரிங் துறையில் தேசிய அளவில் பிரபலமான ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸஸ், சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லூரியில் தான் அமைந்துள்ளது.

நல்ல சூழல், கல்வி, ஒழுக்கம், திறன் மிக்க ஆசிரியர்கள், உயர்தர லேபரேட்டரி வசதிகள் என்று இக்கல்லூரி, அனிமேஷன் துறையில் தனது காலடியை எடுத்துவைக்கிறது.
ஒவ்வொரு மாணவருக்கும் தனி விடுதி அறை, தரமான உணவும் இங்கு படிப்பு காலத்தை இனிமையானதாக்க உதவுகிறது. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் மாணவர்களுக்கு அனிமேஷன்துறையில் பட்டங்கள் வழங்கப்படும்.

மூன்றாண்டு படிப்பில் அடிப்படை அறிவுடன், ‘2-டி’, ‘3-டி’ அனிமேஷன், கார்ட்டூன் அனிமேஷன் என்று இத்துறையில் பெரும்பாலான விஷயங்களை மாணவர்கள் கற்றுத்தேறும் வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளது. அனிமேஷன் துறைக்கு கைகொடுக்கும் வீடியோ மற்றும் போட்டோகிராபியும் மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்கப்படுகிறது. பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம் என்று இதுவரை முடிவு செய்யாத மாணவர்கள் - இப்போது முடிவு செய்ய நல்ல நேரம்.

கூடுதல் தகவல்களுக்கு: 0452-3918609






      Dinamalar
      Follow us