/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஸ்காட்லாந்தில் படிக்க இந்தியர் ஆர்வம்
/
ஸ்காட்லாந்தில் படிக்க இந்தியர் ஆர்வம்
ஜூன் 13, 2009 12:00 AM
ஜூன் 13, 2009 12:00 AM
உயர்கல்விக்காக ஸ்காட்லாந்து சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.
உறுதியளிக்கப்படும் வேலை, பல்கலைக்கழகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவு காரணமாக ஸ்காட்லாந்தில் படிக்க இந்திய மாணவர்கள் அதிகமாக தற்போது ஆர்வம் காட்டுவதாக மதிப்பீடுகள் கூறுகின்றன.
ஸ்காட்லாந்து பல்கலைக்கழகங்களில் தற்போது 3 ஆயிரத்து 625 மாணவர்கள் படித்து வருகின்றனர். பிரிட்டனில் படிக்கும் மொத்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் இது 13 சதவீதமாகும். முதுநிலை ஆய்வுப் படிப்புகளில் இங்கு கிடைக்கும் மிகவும் தரமான படிப்புகள் மற்றும் இங்கு படித்து முடித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்புகளின் காரணமாகவே ஸ்காட்லாந்தில் படிக்க இந்திய மாணவர்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
பொருளாதார மந்த நிலையின் மத்தியிலும் இங்கு படித்த மாணவர்களின் வேலைகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது மற்றொரு முக்கியமாக காரணமாகக் கூறப்படுகிறது. இதே போல 2005ம் ஆண்டில் ஸ்காட்லாந்து அரசு அறிமுகப்படுத்திய புதிய திறன்களை அடையாளம் காணுவது என்னும் திட்டத்தின் மூலமாக அங்கு பட்டப்படிப்பைப் படிக்க விரும்புபவர்களுக்கு எளிதாக விசா வழங்கிடும் வசதி மற்றும் படிப்பை முடித்தபின் 2 ஆண்டு வரை ஸ்காட்லாந்திலேயே பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்பட்டன.
இதுவும் மாணவர்களின் ஈடுபாட்டுக்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஸ்காட்லாந்தில் படிக்க விரும்பும் பலரும் பிசினஸ், மேனேஜ்மென்ட், நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்புடைய படிப்புகளுக்கே விண்ணப்பிக்கின்றனர். சமீப காலங்களில் இத் துறை தவிர்த்து பிற படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கத் தொடங்கிவிட்டனர்.
ஸ்காட்லாந்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக கிளாஸ்கோ பல்கலைக்கழகம் ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டின பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படவுள்ளது. ஸ்காட்லாந்தில் கிடைக்கும் அனுவங்கள் மிக அரிதானவை என்றும் அவை இங்கும் வெளிநாட்டில் பணிபுரிய பெரிதும் உதவும் என்றும் ஸ்காட்லாந்தில் பயிலும் மாணவர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச மாணவர்களுக்கென்று பிரத்யேகமான பல்வேறு நிதியுதவிகளையும் ஸ்காட்லாந்து வழங்குகிறது. உதாரணமாக சால்டைர் உதவித் தொகை மூலமாக சீனா, கனடா, இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 200 பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாத் தரப்படுகிறது. இவற்றுள் 50 உதவித்தொகைகள் இந்திய மாணவருக்கு வழங்கப்படுகின்றன.
ஒரு நிறுவனத்தில் அல்லது அமைப்பு அல்லது மையம் ஒன்றில் அவை தொடர்பான தகவல்களை கம்ப்யூட்டர் மூலமாக பதிவு செய்து சேமித்துக் கொள்வதை டேட்டா என்ட்ரி என்று கூறுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. குறிப்பாக இத் துறை பி.பி.ஓ., துறையின் முக்கிய அங்கமாகவே மாறி வருகிறது. முக்கியமான தகவல்களையும் வார்த்தைகளையும் எழுத்துப் பணிகளையும் எளிமையாகக் கம்ப்யூட்டரில் செயல்படுத்திட டேட்டா என்ட்ரி பெரிதும் உதவுகிறது.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக டைப்பிஸ்டுகள், வேர்ட் பிராசசர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி செய்பவர்கள் பணியாற்றலாம். டேட்டா என்ட்ரி துறையில் புதிதாகப் பணியைத் தொடங்குபவர்கள் கடிதங்களை தயாரிப்பது, கம்ப்யூட்டர் வாயிலாக வரையறுக்கப்பட்ட படிவங்களை உருவாக்குவது, கவர்களில் முகவரியை அச்சிடுவது போன்ற அன்றாட நிர்வாகப் பணிகளை செய்கின்றனர்.
டேட்டா என்ட்ரியில் ஆன்லைன் டேட்டா என்ட்ரி, இமேஜ் டேட்டா என்ட்ரி, கேடலாக் டேடா என்ட்ரி, டேடா என்ட்ரி ஆப் பி-புக்ஸ், டேட்டா என்ட்ரி ஆப் கம்பெனி ரிப்போர்ட்ஸ், டேட்டா என்ட்ரி பிரம் எல்லோ பேஜஸ், டேட்டா என்ட்ரி ஆப் இன்சூரன்ஸ் கிளைம் போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன.
பி.பி.ஓ., பணிகளில் இந்தியாவுக்கு தொடர்ந்து மிக நில்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. பி.பி.ஓ.,வின் முக்கிய அங்கமாக விளங்கிடும் டேட்டா என்ட்ரி துறையும் இதனால் நல்ல வாய்ப்புகளைப் பெறும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவிலுள்ள எண்ணற்ற மனித வளத்தின் காரணமாக பி.பி.ஓ., துறையில் இந்தியாவுக்கு எப்போதுமே நல்ல கிராக்கியும் மதிப்பும் உள்ளது.
எனவே இத்துறை தொடர்பான பணியாளர்களுக்கு இந்தியாவிலுள்ள ஐதராபாத், நொய்டா, பெங்களூரு, டில்லி, மும்பை, குர்கான், கொச்சி, புனே, சண்டிகார் ஆகிய இடங்களில் இயங்கிடும் நிறுவனங்கள் பலவற்றில் தேவை எப்போதுமே காணப்படுகிறது. டேட்டா என்ட்ரியுடன் தொடர்புடைய டேட்டா மேனேஜ் மென்ட், டாகுமெண்ட் மேனேஜ்மென்ட், டேட்டா பிராசசிங், டேட்டா மைனிங், டேட்டா கன்வர்ஷன், டாகுமென்ட் இமேஜிங், டேட்டா டிஜிடலைசேஷன் போன்ற துறைகளிலும் மிக நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.
டேட்டா என்ட்ரி துறையில் முறையான கல்வித் தகுதிகளை விட சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. ஏற்கனவே இது போன்ற நிறுவனங்களில் படித்தவர்களிடம் நன்றாக விசாரித்துக் கொண்டு நல்ல திறன்களைப் பெற முயற்சிப்பதே சிறப்பான வாய்ப்புகளைத் தரும். அடிப்படையில் சாதாரணமாக ஒரு பட்டப்படிப்புடன் டேட்டா என்ட்ரி பயிற்சியைப் பெறுபவருக்கு இத் துறை எளிமையான ஆனால் தெளிவான எதிர்காலத்தைத் தரும் என்றே கூறலாம்.