/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
சிறந்த படிப்பை தேர்வு செய்வது எப்படி?
/
சிறந்த படிப்பை தேர்வு செய்வது எப்படி?
ஜூன் 21, 2009 12:00 AM
ஜூன் 21, 2009 12:00 AM
பி.எஸ்சி., நர்சிங் நோயாளிகளை மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புடனும் கவனிப்பதால் நர்சிங் பணி உன்னதமானது. மருத்துவரோ, மருத்துவ நிபுணரோ நர்ஸ் உதவியின்றி பணியாற்றுவது கடினம். மருத்துவ கருவிகளை கையாளுதல்,நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை சரியான நேரத்தில் வழங்குதல் போன்ற பணிகளை நர்ஸ் செய்கின்றனர்.
நோயாளிகள் குணமாவதில் நர்ஸ்களின் பணி இன்றியமையாதது. மருந்துகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் அல்லது சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்கள் தரும் ஆலோசனைகளை கவனித்து அதன்படி நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை நர்ஸ் செய்கின்றனர்.
நோயாளிகளின் உடல்நலம் தொடர்ந்து நர்ஸ்களால் கவனிக்கப் பட்டு வருகிறது. அவர்களின் உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை மருத்துவர்களுக்கு நர்ஸ்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவரின் அவசர தேவைகளை உடனே நர்ஸ்கள் அறிவிக்கின்றனர்.
அவசர நிலைகளின்போது நர்ஸ்கள் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். சிறந்த நர்ஸ் நோயாளிகளுக்கு மட்டுமின்றி நோயாளிகளின் உறவினர்களுக்கும் மனரீதியாக ஊக்கம் அளிக்கின்றனர்.
பி.எஸ்சி., நர்சிங்கில் அனாடமி, பிசியாலஜி, பயோகெமிஸ்ட்ரி, நியூட்ரிஷியன், øகாலஜி, சோஷியாலஜி, பேமிலி வெல்பேர், மெடிக்கல்-சர்ஜிக்கல்/பீடியாட்ரிக்/øகியாட்ரிக்/கம்யூனிட்டி ஹெல்த்/கைனகாலஜிக்கல் நர்சிங் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன. நான்கு ஆண்டு படிப்பிற்குப் பின் ஓராண்டு பயிற்சி மேற்கொள்ளுதல் அவசியம்.
நர்ஸ் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் லட்கணக்கான நர்ஸ்கள் அதிகமான சம்பளத்தில் பணியமர்த்தப்படுகின்றனர். வெளிநாடுகளில் நர்ஸ் பணிக்கு பதிந்து வைக்க கல்வி தகுதி மட்டுமின்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனையும் தேர்வின் மூலம் நிரூபிக்க வேண்டும்.
நர்சிங் துறையில் ஆசிரியராக பணியாற்ற விரும்புபவர்கள் மெடிக்கல் சர்ஜிக்கல் நர்சிங், கம்யூனிட்டி நர்சிங், பீடியாட்ரிக் நர்சிங், ஆப்சஸ்ட்ரிக்ஸ் அண்டு கைனகாலஜி நர்சிங் மற்றும் சைகியாட்ரிக் நர்சிங் போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெறவேண்டும்.
பி.பார்ம்.,
மருத்துவ சிகிச்சை அளிக்க தேவைப்படும் மருந்துகளைப் பற்றிய படிப்பே பி.பார்ம்., பார்மசிஸ்ட்கள் புதிய மருந்துகளை ஆராய்ச்சிகளால் உருவாக்குகின்றனர். எத்தனை வேளை மருந்து உட்கொள்வது, மருந்துகளின் விளைவு, பக்கவிளைவுகள் பற்றி பார்மசிஸ்ட்களே மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் அறிவுரை வழங்குகின்றனர்.
பார்மசி என்பது மருந்துகள் தயாரிப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டை உள்ளடக்கியது. இப்படிப்பு தாவரங்கள் மற்றும் பல்வேறு வேதிப்பொருட்களின் மருத்துவப்பயன்பாடு, மூலப்பொருட்களை ஆய்வு செய்தல் போன்றவற்றுடன் தொடர்புடையது. மருத்துவர், கால்நடை மருத்துவர், பல் மருத்துவர் போன்றவர்களுக்கு தேவையான மருந்துகளையும் இவர்கள் தயார் செய்து தருகின்றனர்.
‘பிளஸ் 2’வில் உயிரியல் மற்றும் கணிதப் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்த மாணவர்கள் நான்காண்டு படிப்பான பி.பார்ம்.,ல் சேரலாம்.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறைகள், மருந்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பி.பார்ம்., பயின்றவர்கள் பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி (புட் அண்டு ட்ரக் அனலைசிஸ்), பார்மகாக்னசி அண்டு பைட்டோ கெமிஸ்ட்ரி, பார்மசூட்டிக்கல் டெக்னாலஜி(பார்மசூட்டிக்ஸ்), பார்மகாலஜி, பார்மசி பிராக்டிஸ் போன்ற படிப்புகளில் முதுநிலைப் பட்டம் பெறலாம். மேலும் ஆராய்ச்சிப் படிப்புகளையும் மேற்கொள்ளலாம்.
மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி ரத்த வங்கி, கெமிஸ்ட்ரி, ஹீமட்டாலஜி, இம்யூனாலஜி, மைக்ரோ பயாலஜி போன்ற ஆய்வுக்கூடங்களில் லேப் டெக்னிசியன்களின் பங்கு முக்கியமானது. ரத்தம், உமிழ்நீர், சிறுநீர் போன்ற பல்வேறு வகையான உடல் திரவங்களை சேகரித்தல்,
ஆய்வு செய்தல், தேவைப்படும் வேதிப்பொருட்களை தயாரித்தல், மாதிரிகளை சோதித்தல், உடல் திரவம், திசுக்கள், செல்களை ஆய்வு செய்தல், திசு மாதிரிகளை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தல் போன்ற பணிகளை செய்கின்றனர்.
முரண்பாடான செல்களைக் கண்டறிதல், நச்சுக்கிருமிகள், கேன்சர் கட்டிகளை கண்டறிதல், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கண்டறிதல், பாதுகாப்பான முறையில் ஒருவர் உடலில் இருந்து மற்றொருவர் உடலுக்கு ரத்தத்தை செலுத்துதல்,நோயாளிகளின் உடல்நிலையை ஆய்வின் மூலம் அறிதல் போன்றவை லேப் டெக்னீஷியன்களின் பணிகள்.
சிறந்த நிபுணர்கள், தான் ஆய்வு முடிவுகளை மருத்துவர்களுக்கு வழங்குகின்றனர். அதைக் கொண்டு மருத்துவர்கள் நோயை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். டெக்னீஷியன்கள் ஆய்வுக்கூட முடிவுகளை பராமரிக்க வேண்டும். அதனை மருத்துவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். லேப் டெக்னீஷியன் பணிக்கு கம்ப்யூட்டர் உட்பட புதிய தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவுகின்றன. அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும், மதி நுட்பத்துடனும் பணியாற்ற வேண்டும். மருத்துவர்களுக்கு சோதனை முடிவுகளை தெளிவாக கொடுக்க வேண்டும்.
இப்படிப்பில் அனாடமி, பிசியாலஜி, பேத்தாலஜி போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன. மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயக்னாஸ்டிக் சென்டர், மெடிக்கல் லேபரட்டரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் இத்துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக் கின்றன. மார்கெட்டிங் துறையிலும் வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
பி.டி.எஸ்.,
பல் நோய்களை கண்டறிதல், தடுத்தல், பற்கள் மற்றும் பற்குழிகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதே பல் மருத்துவம். இது அறுவை சிகிச்சைகளை உள்ளடக்கியது. பற்களை எடுத்தல், சுத்தம் செய்தல், ‘கிளிப்’ பொருத்துதல், சேதமடைந்த பற்களை சரிசெய்தல், மிகவும் சிக்கலான முக அறுவை சிகிச்சைகள் செய்தல் ஆகியவை பல் மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர்.
பொறுமை, பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் போன்றவற்றை பல்மருத்துவர்கள் பெற்றிருக்க வேண்டும். பல் மருத்துவர்கள் நான்கரை வருடம் பல்மருத்துவப் படிப்பை முடித்தபின் ஒரு வருடம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பல்மருத்துவத்தில் ஹியூமன் அனாடமி அண்டு ஹிஸ்டாலஜி, பிசியாலஜி, பயோகெமிஸ்ட்ரி அண்டு டென்டல் மெட்டீரியல்ஸ், ஜெனரல் பார்மகாலஜி அண்டு தெரபீட்டிக்ஸ், ஜெனரல் பேத்தாலஜி அண்டு மைக்ரோபயாலஜி, டென்டல் அனாடமி அண்டு ஹிஸ்டாலஜி, பிரிகிளினிக்கல் கான்சர்வேட்டிவ் டென்டிஸ்ட்ரி, பிரி கிளினிக்கல் புரோஸ்தோடான்டிக்ஸ், கிரவுன் அண்டு பிரிட்ஜ் ஒர்க், ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, ஓரல் பேத்தாலஜி, பிரிவென்டிவ் அண்டு கம்யூனிட்டி டென்டிஸ்ட்ரி, ஓரல் மெடிசின் அண்டு ரேடியாலஜி, ஓரல் அண்டு மேக்சிலோபேசியல் சர்ஜரி, பீரியடான்டிக்ஸ், கன்சர்வேஷன் டென்டிஸ்ட்ரி அண்டு என்டடான்டிக்ஸ், பிராஸ்தோடான்டிக்ஸ், பீடோடான்டிக்ஸ் அண்டு ஆர்த்தோடான்டிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன.
பல்மருத்துவர்கள் தனியாக கிளினிக்குகள் தொடங்கலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்விநிறுவனங்கள், ராணுவம் ஆகியவற்றிலும் இத்துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. பிராஸ்தோடான்டிக்ஸ், பீரியோடான்டிக்ஸ், ஆர்த்தோடான்டிக்ஸ், என்டோடான்டிக்ஸ், பீடோடான்டிக்ஸ், ஓரல் பேத்தாலஜி, ஓரல் அண்டு மேக்சிலோபேசியல் சர்ஜரி, கான்சர்வேஷன் டென்டிஸ்ட்ரி, பிரிவென்டிவ் அண்டு கம்யூனிட்டி டென்டிஸ்ட்ரி, ஓரல் மெடிசின் அண்டு ரேடியாலஜி போன்ற பாடப்பிரிவுகளில் இத்துறையை சேர்ந்தவர்கள் முதுநிலைப்படிப்புகளில் சேரலாம்.
- பி.எஸ்.வாரியார்