/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
அணுசக்தி துறையின் எச்.பி.என்.ஐ., சிறந்த கல்வி நிறுவனங்கள்-62
/
அணுசக்தி துறையின் எச்.பி.என்.ஐ., சிறந்த கல்வி நிறுவனங்கள்-62
அணுசக்தி துறையின் எச்.பி.என்.ஐ., சிறந்த கல்வி நிறுவனங்கள்-62
அணுசக்தி துறையின் எச்.பி.என்.ஐ., சிறந்த கல்வி நிறுவனங்கள்-62
ஜூன் 21, 2009 12:00 AM
ஜூன் 21, 2009 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவின் மிகப்பெருமை வாய்ந்த நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் ஒன்று ‘ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிடியூட்’ (எச்.பி.என்.ஐ.,). அணுசக்தியின் பயன்பாடு உலகம் முழுவதும் அதி
கரித்து வருகிறது.
அணுசக்தி துறையும் வளர்ச்சி கண்டுள்ளது. இதன் வளர்ச்சிக்கு ஏற்ப மனித வளத்தை அதிகரிக்க இந்த துறையின் கீழ் 2005ம் ஆண்டு மும்பையில் எச்.பி.என்.ஐ., நிறுவப்பட்டது. எச்.பி.என்.ஐ.,யின் உதவியுடன் இந்தியா முழுவதும் ஏறத்தாழ 11 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
ஆய்வு நிறுவனங்களான
- பாபா அணுசக்தி ஆய்வு மையம், மும்பை
- இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையம், கல்பாக்கம்
- ராஜா ராமண்ணா சென்டர் பார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி, இந்தூர்
- வேரியபில் எனர்ஜி சைக்ளோட்ரான் சென்டர், கோல்கட்டா
- டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச், மும்பை
- சாகா இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் பிசிக்ஸ், கோல்கட்டா
- இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்மா ரிசர்ச், காந்திநகர்
- இன்ஸ்டிடியூட் ஆப் பிசிக்ஸ், புவனேஸ்வர்
- ஹரிசந்திரா ரிசர்ச் இன்ஸ்டிடியூட், அலகாபாத்
- டாடா மெமோரியல் சென்டர், மும்பை
-இன்ஸ்டிடியூட் ஆப் மேதமெடிக்கல் சயின்ஸ், சென்னை ஆகியவை எச்.பி.என்.ஐ.,யின் உதவியை பெற்று வருகின்றன. இங்குள்ள படிப்புகள்
- பிசிக்கல் சயின்சஸ் (இன்டகரேட்டட் பி.எச்டி., பி.எச்டி., எம்.பில்., பி.ஜி.,டிப்ளமோ)
- கெமிக்கல் சயின்சஸ் (இன்டகரேட்டட் பி.எச்டி., பி.எச்டி., எம்.பில்., பி.ஜி.,டிப்ளமோ)
- உயிர் அறிவியல் (பி.எச்டி., எம்.பில்., பி.ஜி.டிப்ளமோ)
- இன்ஜினியரிங் சயின்சஸ் (பி.எச்டி., எம்.டெக்., எம்.எஸ்சி., பி.ஜி.,டிப்ளமோ)
- மேதமெடிக்கல் சயின்சஸ் (இன்டகரேட்டட் பி.எச்டி., பி.எச்டி.,)
- ஸ்டடர்ஜிக் ஸ்டடீஸ் (பி.எச்டி.,)
- ஹெல்த் சயின்சஸ் (டிப்ளமோ இன் ரேடியாலஜிக்கல் பிசிக்ஸ், டிப்ளமோ இன் ரேடியேஷன் மெடிசின், டிப்ளமோ இன் மெடிக்கல் ரேடியோ ஐசோடோப்ஸ் டெக்னிக்ஸ், எம்.டி., - பேத்தாலஜி, அனஸ்தீசியா, ரேடியோதெரபி, டி.எம்., மெடிக்கல் ஆன்காலஜி, டிப்ளமோ இன் அனஸ்தீசியா).
பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் வளாகத்தில் எச்.பி.என்.ஐ., இயங்கி வருகிறது. தொடங்கப்பட்ட நான்கு ஆண்டுகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் சிறப்பான முன்னேற்றத்தை எச்.பி.என்.ஐ., அடைந்துள்ளது. இந்த நிறுவனத்துக்கான மத்திய அரசின் நிதியுதவியும் அதிகரித்துள்ளது.