/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வெளிநாடு சென்று படிக்கலாம் (14)
/
வெளிநாடு சென்று படிக்கலாம் (14)
ஜூன் 21, 2009 12:00 AM
ஜூன் 21, 2009 12:00 AM
அமெரிக்கா, பிரிட்டன், கனடாவுக்கு செல்பவர்கள் 16 மாதங்களுக்கு முன்னரே அதற்கு தயாராக வேண்டும். மே, ஜூன் மாதங்களில் படிப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு தூதரகங்கள், ஆலோசனை மையங்களில் விசாரிக்க வேண்டும். குடும்பம்,நண்பர்கள், வெளிநாடு சென்ற அனுபவம் உடையவர்களிடம் பேசியும் தகவல்களை சேகரிக்கலாம்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., ஜி.ஆர்.இ., ஜிமேட், சாட் போன்ற தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். செப்டம்பரில் பதிவு செய்து வைத்து தேர்வு எழுத வேண்டும். அக்டோபர் மாதத்தில் பழைய ஆசிரியரை சந்தித்து பரிந்துரை கடிதத்தை பெற வேண்டும். தேவைப்பட்டால் விண்ணப்ப கட்டுரை மற்றும் ‘ஸ்டேட்மென்ட் ஆப் பர்பஸ்’ குறித்தும் அவரிம் ஆலோசனை பெறலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்ய தேவைப்படும் சான்றிதழ்களையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.
நவம்பர் முதல் ஜனவரி வரையான மாதங்களில் விண்ணப்பங்களை அனுப்ப தொடங்கலாம். குறைந்தது ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் விண்ணப்பித்த பல்கலைக் கழகங்களில் இருந்து கடிதம் வந்தவுடன் , சிறந்த கல்வி நிறுவனத்தை தேர்வு செய்து டெபாசிட் தொகை செலுத்தவும். பின்னர் முறையான அனுமதி கிடைத்தவுடன், விசா பெறுவதற்கானஆவணங்களை தயார் செய்ய ஆலோசகரை அனுகவும்.வெளிநாட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவும்.
ஜூன், ஜூலை மாதங்களில் விசாவுக்கு விண்ணப்பித்து, பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்கவும். ஆஸ்திரேலியா,கனடா போன்ற நாடுகளில் மாணவர் விசா கிடைக்க தாமதமாவதால் முன்னதாகவே தயாராக வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன் செல்ல விண்ணப்பித்தவர்கள் ஆன்லைன் மூலமாக ‘அப்பாயின்மென்ட்’ பெற்று நேரடியாக சென்று விண்ணபிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயணத்தை தொடங்கலாம்.