/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பயோஇன்பர்மேடிக்ஸ் - துறை அறிமுகம்
/
பயோஇன்பர்மேடிக்ஸ் - துறை அறிமுகம்
ஜூலை 11, 2009 12:00 AM
ஜூலை 11, 2009 12:00 AM
மாலிக்கூலர் பயாலஜி பிரிவு பயன்பாட்டிற்காக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் உயிரியல் தொடர்புடைய தகவல்களை சேமிப்பதற்காக கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதையும் இணைத்து பயோஇன்பர்மேடிக்ஸ் அல்லது கம்ப்யூடேஷனல் பயாலஜி என்று குறிப்பிடுகிறார்கள். கம்ப்யூட்டரின் மூலமாக உயிரியல் தொடர்புடைய தகவல்களை சேமித்து பாதுகாத்து அலசி ஆய்வு செய்து ஒன்றிணைக்கும் பணிகள் இத்துறையோடு தொடர்புடையன.
தற்சமயம் வளர்ச்சி பெற்று வரும் முக்கியத்துறைகளில் இதுவும் ஒன்று. இத்துறை பல்வேறு துறைகளுடன் தொடர்புடையதாக உள்ளது. நமக்கு புலப்படாமலுள்ள உயிரியல் தொடர்புடைய பல்வேறு தகவல்களை கண்டறிந்து உயிரினங்களின் அடிப்படை உயிரியல் கோட்பாடுகளில் ஒரு தெளிவை ஏற்படுத்தி மனித இனத்தின் தரத்தை மேம்படுத்துவதே இத்துறையின் தலையாய நோக்கமாக உள்ளது. ஜீனோம்களின் யுகமாக உள்ள இன்றைய கால கட்டத்தில் டி.என்.ஏ.,க்களைப் பற்றிப் படிப்பது, அவற்றை மாற்றியமைப்பதன் மூலம் நோய்களைத் தடுப்பது போன்ற முக்கியப் பணிகளில் பயோஇன்பர்மேடிக்ஸ் துறையின் பங்கு அளப்பரியது.
இத்துறையின் உபயோகம் மனித ஆரோக்கியம், விவசாயம், சுற்றுச்சூழல், சக்தி, பயோடெக்னாலஜி, உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்ற துறைகளில் பெரிதும் உள்ளது. மாலிக்கூலர் மருத்துவத்தில் தரமான மற்றும் சிறந்த மருந்துகளை உருவாக்குவதிலும் இத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. நோய்த் தடுப்பு, நோய்களை முறியடித்தல், பாக்டீரியாக்களை இனம் காணுதல், குறைந்த செலவில் நிறைந்த பலன் தரும் விவசாயப் பொருட் களை உற்பத்தி செய்தல் என்ற பல வகைகளில் இத் துறையின் உபயோகம் நீளுகிறது.
இத்துறையில் படித்தவர்களுக்கான பணி வாய்ப்புகள் பயோடெக்னாலஜி, மருந்தியல், பயோமெடிக்கல் சயின்ஸ், ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிலரங்குகள் போன்ற இடங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாலிக்கூலர் பயாலஜி, ஜெனிடிக்ஸ், மைக்ரோபயாலஜி, வேதியியல், மருந்தியல், வெடினரி சயின்ஸ், இயற்பியல், கணிதம், பொறியியல், ஐ.டி., பி.எச்டி., மருத்துவம் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவருக்கு இத் துறை பொருத்தமானதாக இருக்கிறது.
இத்துறையில் பி.டெக்., பட்ட மேற்படிப்பு, அட்வான்ஸ்ட் டிப்ளமோ, எம்.டெக்., என்று பல நிலைகளில் படிப்புகள் உள்ளன. இளநிலை பட்டப்படிப்பு நிøலியிலிருந்தே பயோஇன்பர்மேடிக்ஸ் தொடங்குகிறது. இதற்கு பிளஸ் 2ல் அறிவியல் புலத்தில் படித்திருக்க வேண்டும். பயோஇன்பர்மேடிக்ஸில் பி.டெக்., கில் சேர பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் படித்திருக்க வேண்டும்.
இதில் பட்டமேற்படிப்பில் சேர பி.எஸ்சி., பி.எஸ்சி., விவசாயம், பி.சி.எஸ்., பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.பார்ம்., பி.ஏ., எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., பி.வி.எஸ்சி., போன்ற ஒன்றில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் பயோ இன்பர்மேடிக்ஸ் படிக்க விரும்புபவர்கள் எம்.எஸ்சி.,படிப்பாக உயிர் அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், பயோடெக்னாலஜி, பயோபிசிக்ஸ், தாவரவியல், விலங்கியல், பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, மருந்தியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற ஒன்றைப் படித்திருக்க வேண்டும்.
எம்.எஸ்சி., விவசாயம், எம்.டெக்., எம்.பி.பி.எஸ்., படித்தவரும் இதில் சேரலாம். எம்.டெக்., பொறியியல், மருந்தியல், மருத்துவம், பல் மருத்துவம், வெடினரி சயின்ஸ் போன்றவற்றில் ஒன்றைப் படித்திருப்பவரும் எம்.எஸ்சி., படித்திருப்பவரும் சேரலாம். மாலிக்கூலர் பயாலஜி துறையில் தொடர்ந்து தகவல் தொழில் நுட்பத்தின் உபயோகம் அதிகரித்து வருவதால் இத்துறைக்கு அபரிமிதமாக வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இத்துறைக்கான பிரத்யேகமான பணி வாய்ப்புகளாக சீக்வன்ஸ் அசெம்பிளி டேட்டாபேஸ் டிசைன் அண்ட் மெயின்டனன்ஸ், சீக்வன்ஸ் அனலிசிஸ், புரொடமிக்ஸ், பார்மகோ ஜீனோமிக்ஸ், பார்மகாலஜி, கிளினிகல் பார்மகாலஜிஸ்ட், இன்பர்மேடிக்ஸ் டெவலப்பர், கம்ப்யூட்டேஷனல் கெமிஸ்ட், பயோ அனலிடிக்ஸ் போன்றவை உள்ளன.
மருந்துகளைக் கண்டுபிடிக்கும் மருந்தியல் மற்றும் பயோடெக் நிறுவனங்களில் இவர்களுக்கு எளிதாகப் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. பயிற்றுவிக்கும் திறன் படைத்தவர்களுக்கு எளிதாக ஆசிரியப் பணிகளும் கிடைக்கின்றன. ஐ.டி., துறையின் உள் கட்டுமானப் பிரிவுக்கு இத் துறையின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. இதனால் தான் சத்யம், டி.சி.எஸ்., விப்ரோ, ரிலையன்ஸ், சிலிகான் ஜெனிடிக்ஸ், அக்சல்ரிஸ், ஐ.பி.எம்., லைப் சயின்ஸ் பப்ஜீன், டெசெல்லா போன்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனங்கள் பயோ இன்பர்மேடிக்ஸ் படித்தவர்களை பணிகளுக்கு எடுத்துக் கொள்கின்றன.
தனியார் துறை மருந்தியல் நிறுவனங்களில் பணிக்குச் சேரும் முதுநிலைப் பட்டதாரிக்கு தொடக்கத்திலேயே 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. அரசுத் துறையில் ஆரம்ப நிலையிலேயே குறைந்த பட்சம் 9 ஆயிரம் முதல் சம்பளம் பெற முடிகிறது.
நமக்கு அண்மையிலுள்ள துறையின் சிறந்த கல்வி நிறுவனங்கள்
Biosys Biotech Lab and Research Centre, Chennai(Tamil Nadu )63/32, IInd Floor, Kamaraj colony, Ist street Kodambakkam,
Chennai ( Chennai Dist. ) 600024 C.M.S. College of Science and Commerce, Coimbatore( Tamil Nadu )
Chinnavedampatty , Coimbatore ( Coimbatore Dist. ) 641006 Dr. N.G.P. Arts and Science College, Coimbatore( Tamil Nadu )
Kalapatti Road , Coimbatore ( Coimbatore Dist. ) 641048 Holy Matha College of Modern Technology, Ernakulam( Kerala )
Manakkapadi, North Paravur , Ernakulam ( Ernakulam Dist. ) 683511 Institute of Bioinformatics and Applied Biotechnology, Bangalore( Karnataka )
G05, Tech Park Mall,International Technology Park, Bangalore (ITPB), Whitefield Road , Bangalore ( Bangalore (Bengaluru) Dist. ) 560066 Karpagam Arts and Science College, Coimbatore( Tamil Nadu )
Pollachi Main Road, Eachanari Post , Coimbatore ( Coimbatore Dist. ) 641021 Madurai Kamaraj University, Madurai( Tamil Nadu )
Palkalai Nagar , Madurai ( Madurai Dist. ) 625021 Mar Athanasius College, Kothamangalam( Kerala )
Kothamangalam ( Ernakulam Dist. ) 686666 Muthayammal College of Arts and Science, Namakkal( Tamil Nadu )
Rasipuram , Namakkal ( Namakkal Dist. ) 637408 Pondicherry University : Bioinformatics Centre, Puducherry( Puducherry )
School of Life Sciences, Pondicherry University ,
Puducherry ( Puducherry ) 605014 S.R.M. University, Chennai( Tamil Nadu )
3 Veerasamy Street, West Mambalam , Chennai ( Chennai Dist. ) 600033 Satyam Sri Services, Bangalore( Karnataka )
143, 5th Main, 100 Ft Ring Road, KEB Layout, BTM 1st Stage ,
Bangalore ( Bangalore (Bengaluru) Dist. ) 560030.