/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
உயர் கல்வி சீர்திருத்தம் - தனியார் பங்கேற்பின் அவசியம்
/
உயர் கல்வி சீர்திருத்தம் - தனியார் பங்கேற்பின் அவசியம்
உயர் கல்வி சீர்திருத்தம் - தனியார் பங்கேற்பின் அவசியம்
உயர் கல்வி சீர்திருத்தம் - தனியார் பங்கேற்பின் அவசியம்
ஜூலை 11, 2009 12:00 AM
ஜூலை 11, 2009 12:00 AM
இந்தியப் பொருளாதாரம் குறித்த சர்வே பட்ஜெட்டுக்கு முன்பாக பார்லிமெண்டில் சமர்ப்பிக்கப்பட்டதை அறிவோம். உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தில் தரமான கல்வி நிறுவனங்களையே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. உயர் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்த அறிக்கையின் சில அம்சங்கள் இவை தான்...
* உயர் கல்விக்கான கட்டுப்பாட்டு அமைப்பிலும் கட்டுப்பாட்டு நிறுவனங்களிலும் சீர்திருத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதன் மூலம் நியாயமான, நேர்மையான மற்றும் வெளிப்படையான தர நிர்ணயம் மற்றும் செலவுகளுக்கான தகவல்களைப் பெறுவது சாத்தியமாகும்.
* மிகவும் தரம் வாய்ந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கல்வி நிறுவனங்களையே உயர்கல்வி தருவதற்கு அனுமதிக்க வேண்டும்.
* கல்வி நிறுவனங்களை தவறாமல் தர வரிசைப் பட்டியலிடுவது உயர்கல்வித் துறையின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும்.
* ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களின் சேர்க்கை முறையை நெறிப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் இதனால் தரமான மாணவர்கள் சேருவது எந்த விதத்திலும் பாதிக்கப்படாத விதத்திலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இந்த நிறுவனங்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் அறிவைக் கிரகிக்கும் தன்மை தான் சோதிக்கப்பட வேண்டுமேயன்றி கிரகிக்கப்பட்ட அறிவு மட்டுமே சோதிக்கப்படக் கூடாது.
* உயர் கல்வி வழங்கிடும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை தரம் வாய்ந்த மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களின் மூலமாக அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. இவை தரும் பட்டங்களும் உலகளாவிய அங்கீகாரம் பெறத் தக்கதாக இருக்க வேண்டும்.
* உயர் கல்விக்காக அரசு வழங்கும் நிதித் தொகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கும் அனைத்துப் பிரிவு ஆராய்ச்சிகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
* ஏற்கனவே நடைமுறையிலுள்ள பொருந்தாத கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும். இவற்றை கட்டுப்பாட்டு வல்லுனர்களின் மூலமும் அரசு -தனியார் உடன்பாடுகளின் மூலமும் கொண்டு வர வேண்டும்.