/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
அருங்காட்சியகங்கள் பற்றி அறிய... சிறந்த கல்வி நிறுவனங்கள் (68)
/
அருங்காட்சியகங்கள் பற்றி அறிய... சிறந்த கல்வி நிறுவனங்கள் (68)
அருங்காட்சியகங்கள் பற்றி அறிய... சிறந்த கல்வி நிறுவனங்கள் (68)
அருங்காட்சியகங்கள் பற்றி அறிய... சிறந்த கல்வி நிறுவனங்கள் (68)
ஜூலை 18, 2009 12:00 AM
ஜூலை 18, 2009 12:00 AM
மிகப்பழமையான கலாசாரத்தையும் நாகரிகத்தையும் கொண்ட நாடு, இந்தியா. நமது பண்டைய கலாசார நினைவு சின்னங்கள் பல, இந்தியா முழுவதும் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் பண்டைய காலத்து அரிய பொருட்களை சேகரிப்பது, பாதுகாப்பது, பராமரிப்பது தொடர்பான கல்வியை வழங்கும் பிரத்யேக நிறுவனத்தை தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது.
முதன்முதலில் 1983ல் ‘நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்’டில் சில படிப்புகள் தொடங்கப்பட்டன. பின்னர் டில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு வகுப்புகள் மாற்றப்பட்டன. ‘நேஷனல் மியூசியம் இன்ஸ்டிடியூட்’ 1989ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பின்னர் தனியாக ‘நேஷனல் மியூசியம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹிஸ்டரி ஆப் ஆர்ட், கன்சர்வேஷன், மியூசியாலஜி’ என்ற பெயரில் அருங்காட்சியக படிப்புகளுக்காக சிறப்பு கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டு சில மாதங்களிலேயே இதற்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்தியாவில் அருங்காட்சியகங்கள் குறித்து கற்றுத்தரும் ஒரு நிறுவனம் என்.எம்.ஐ., மட்டுமே. தற்போதும் தேசிய அருங்காட்சியகத்துக்கு உள்ளேயே இந்த கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தனியாக கட்டடங்களோ, ஹாஸ்டல் வசதியோ இந்த கல்வி நிறுவனத்துக்கு இல்லை.
எனினும் முழுவசதிகளுடன் நொய்டா நகரில் புதிய வளாகத்தை உருவாக்கும் பணியில் என்.எம்.ஐ., ஈடுபட்டுள்ளது. மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இந்த கல்வி நிறுவனம் இயங்குகிறது. இந்திய கலாசாரம், இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் தொடர்பாக தொடர்ந்து புத்தகங்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இங்கு வழங்கப்படும் படிப்புகள்
- பி.எச்.டி., கலை வரலாறு
- பி.எச்.டி., கன்சர்வேஷன்
- பி.எச்.டி., மியுசியாலஜி
- எம்.ஏ., கலை வரலாறு
- எம்.ஏ., கன்சர்வேஷன்
- எம்.ஏ., மியுசியாலஜி
டிப்ளமோ படிப்புகள்
- பாரதிய கலாநிதி
- இந்தியா: கலை மற்றும் கலாசாரம்
- கலை விமர்சனம்
டிப்ளமோ படிப்புகளின் காலம் 5 மாதங்கள். பிஎச்.டி., பிரிவில் ஒவ்வொரு படிப்பிலும் தலா நான்கு இடங்கள் மட்டுமே உள்ளன. எம்.ஏ.,வில் கலை வரலாறு படிப்பில் மட்டும் 25 இடங்கள் உள்ளன. பிற படிப்புகளில் தலா 15 இடங்கள் உள்ளன. வகுப்புகள் ஆங்கில வழியிலேயே நடத்தப்படுகின்றன.
இங்கு படிப்பை முடித்த மாணவர்கள் பல்வேறு அருங்காட்சியகத்தில் இடைக்கால பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர். இதற்கு மாதம் 6,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.