/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பாதியில் நிறுத்தப்படும் பள்ளிப்படிப்பு
/
பாதியில் நிறுத்தப்படும் பள்ளிப்படிப்பு
ஜூலை 25, 2009 12:00 AM
ஜூலை 25, 2009 12:00 AM
லண்டனைச் சேர்ந்த மைனாரிட்டி ரைட்ஸ் குரூப் இன்டர்நேஷனல் (எம்.ஆர்.ஜி.,) என்ற நிறுவனம் உலகெங்குமுள்ள பழங்குடியின சமய மற்றும் மொழிவாரி சிறுபான்மையினரின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக இயங்கிடும் தனியார் அமைப்பாகும். இது வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் முக்கிய அம்சங்கள் சில...
* கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் உலகத் தலைவர்கள் நிறம் இனம், மதம், பால் வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கல்வி கிடைக்கப் பாடுபடுவோம் என்று ஏற்றுக் கொண்ட உறுதி மொழி இன்றும் நிறைவேறாத நிலையில் தான் உள்ளது.
* உலகில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திடும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மைனாரிட்டி பிரிவைச் சேர்ந்தவர்களே. உலகின் 100 கோடி பேர் பாதியில் படிப்பை நிறுத்துபவர்களாக இருக்கின்றனர். இவர்களில் 50 முதல் 70 சதவீதத்தினர் மைனாரிட்டி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
* இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், எதியோப்பியா, கென்யா, நைஜீரியா போன்ற வளரும் நாடுகளில் பெரும்பான்மை சமூகத்தினருக்கும் சிறுபான்மையினருக்குமிடையே கல்வி அறிவை எட்டுவதில் அதிகமான வித்தியாசம் உள்ளது.
* உலகிலுள்ள அனைவருக்கும் 2015ம் ஆண்டுக்குள் கல்வி என்பது பொதுவான இலக்காக உள்ளது. இதை அடையவேண்டுமென்றால் உலக நாடுகள் அனைத்தும் தங்களது கல்வி தொடர்பான முயற்சிகளை மைனாரிட்டிகளை மையமாக வைத்து எடுத்துச் செல்வது அவசியம்.
* பள்ளிகளை விட்டு பாதியில் குழந்தைகள் நிற்பதற்கு போதுமான வசதிகள் இல்லாததான பொதுவான காரணம் கூறப்பட்டாலும் பெரும்
பாலும் சமய மற்றும் சமூகப்பிரிவுகளே இதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
* சிறுபான்மை மற்றும் சீர்மரபுக் குடியினருக்குப் போதுமான கல்வியைத் தருவது அரசின் சட்டபூர்வமான கடமையாகும். ஆனால் இதை முறையாகப் புரிந்து கொள்ளதா அரசுகள் இவற்றை புள்ளி விபரங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றன. இதனாலேயே சமூக, சமய பிரச்னைகள் தோன்றுகின்றன.
* சிறுபான்மை சமூகத்தினரின் தலையாய பிரச்னையாக இருப்பது குழந்தைகளுக்குப் போதுமான மற்றும் முறையான கல்வியறிவு கிடைக்காததுதான். தரமான கல்வி அனைவருக்கும் எட்டாமலிருப்பதால்தான் சமூக ஏற்றத்தாழ்வுகளும் அவலங்களும் நிறைவேறுகின்றன.
* சிறுபான்மையின நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களில் 16 வயது வரை கல்வியறிவு பெறுபவர்கள் 4 சதவீதம் மட்டுமே. இந்த நிலையே உலகெங்கும் காணப்படுகிறது.
* 1990ல் யுனெஸ்கோவினால் நடத்தப்பட்ட உலகக் கல்வி கருத்தரங்கில் 150 நாட்டினரும் 150 சமூகத் தொண்டு நிறுவனங்களும் பங்கு பெற்றன. இவை 2000ம் ஆண்டுக்குள் உலகெங்குமுள்ள நலிவடைந்தவர்களுக்குக் கல்வியறிவைப் புகட்டுவது என்ற உறுதியேற்றன.
இதனால் உலகளாவிய கல்வி முறையில் நல்ல மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றிய போதும் இன்று வரை அனைத்து நாடுகளுமே ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்குக் கல்வி கிடைப்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.