/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் எம்.பி.ஏ.,
/
ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் எம்.பி.ஏ.,
ஜூலை 18, 2009 12:00 AM
ஜூலை 18, 2009 12:00 AM
நிர்வாகவியலில் கிளினிகல் ரிசர்ச் எஜூகேஷன் அண்ட் மேனேஜ்மென்ட் அகாடமி என்பது தலையாய அமைப்பாகும். இது அசாம் மாநிலம்
திப்ருகார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2 ஆண்டு முழு நேர எம்.பி.ஏ., படிப்பை ஹெல்த்கேர் பிரிவில் தருகிறது. தனியார் மற்றும் அரசுத் துறை மருத்துவமனைகளில் பெருகி வரும் பயிற்சி பெற்ற நிர்வாகவியல் வல்லுனர்களுக்கான தேவையை நிறைவேற்றும் விதத்தில் இப்படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் சுகாதாரம் தொடர்புடைய நிறுவனங்களிலும் 2012ம் ஆண்டில் 10 லட்சம் ஹெல்த்கேர் வல்லுனர்கள் தேவைப்படுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இப் பிரிவில் 2 லட்சம் வல்லுனர்களே உள்ள நிலையில் இந்த எம்.பி.ஏ., படிப்பைப் படிப்பது பலன் தரும் என்று கூறப்படுகிறது. ஹெல்த்கேர் துறைக்குத் தேவைப்படும் தரக் கட்டுப்பாடுகளை இந்த எம்.பி.ஏ., நிறைவு செய்யும் என்றும் இப்பிரிவில் இயங்கவுள்ள முழுநேர அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகமாகவும் இது செயல்படும் என்றும் அகாடமி சார்பில் கூறப்படுகிறது.
ஹெல்த்கேர் எம்.பி.ஏ., முடித்தவர்கள் புகழ் பெற்ற மருத்துவமனைகளில் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் எக்சிகியூடிவாகப் பணியைத் தொடங்கி மெடிக்கல் சூப்பரின்டென்ட், டைரக்டர், சி.இ.ஓ., என்னும் நிலை வரை முன்னேற முடியும். இது தவிர ஹாஸ்பிடல் பிளானிங், கன்சல்டிங், தனியார்/அரசு மற்றும் சர்வதேச மருத்துவமனைகளில் இணைந்து கன்சல்டன்ட் பணிகள், ஆசிரியப் பணி போன்றவற்றிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன.
தற்போதுள்ள நிலையிலேயே மாதம் ரூ. 50 ஆயிரம் வரை ஆரம்ப ஊதியம் பெற வழி செய்யும் இந்த ஹெல்த்கேர் எம்.பி.ஏ., படிப்புகள் 2 ஆண்டு பணி அனுபவத்திற்குப் பின் மாதம் 2 லட்சம் வரை சம்பளம் பெற வகை செய்யும் படிப்பாக இது அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹெல்த்கேர் எம்.பி.ஏ., படிப்புக்கான சேர்க்கை தொடங்கிவிட்டது. இதற்கான வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளன.
இந்தப் படிப்புகள் அகாடமியின் மும்பை, டில்லி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த எம்.பி.ஏ.,வில் லைப் சயின்ஸ் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், பிசியோதெரபி, மெடிக்கல் லேப் டெக்னாலஜி பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேரலாம். படிப்பை முழுமையானதாக மாற்றும் விதத்தில் புகழ் பெற்ற மருத்துவமனைச் சூழலில் வகுப்புகளை நடத்தவும், அவற்றின் கூட்டு ஒத்துழைப்பைப் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹெல்த்கேர் எம்.பி.ஏ., வில் பேஷண்ட் ரிடென்ஷன் மேனேஜ்மென்ட், எம்.ஐ.எஸ்., மேனேஜ்மென்ட், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட், மெயின்டனன்ஸ் மேனேஜ்மென்ட், பிசினஸ் டெவலப்மெண்ட், எச்.ஆர். மேனேஜ்மென்ட், அக்கவுண்ட்ஸ் அண்ட் பில்லிங், பிரண்ட் ஆபிஸ் மேனேஜ்மென்ட், வாடிக்கையாளர் சேவை, ஹவுஸ்கீப்பிங் அண்ட் கேட்டரிங், பப்ளிக் ரிலேஷன்ஸ், இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் பாடப் பகுதிகள் இடம் பெறவுள்ளன.