/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
இன்சூரன்ஸ் அதிகாரி தேர்வுக்கு தயாராவது எப்படி?
/
இன்சூரன்ஸ் அதிகாரி தேர்வுக்கு தயாராவது எப்படி?
ஆக 02, 2009 12:00 AM
ஆக 02, 2009 12:00 AM
கடந்த சில மாதங்களாக பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிகாரி நிலையிலான பணி வாய்ப்புகளை தொடர்ந்து அறிவித்து வருவதை அறிவோம்.
நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகியவற்றைத் தொடந்து கடந்த வாரம் முன்னணி நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமும் ஏராளமான அதிகாரி பணியிடங்களை அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு முடித்திருப்பவரில் தொடங்கி இன்ஜினியரிங் பட்டதாரிகள் வரை பலர் இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் இப் பணிக்காக நடத்தப்படும் போட்டித் தேர்விற்கு எப்படித் தயாராவது என்பது பலருக்குள்ள சந்தேகம்.
இப்பணிக்கான தேர்வு என்பது பாங்குகளின் பி.ஓ., தேர்øவைப் போலவே அமையும். அப்ஜக்டிவ் வகைக் கேள்விகள் மட்டுமே இதில் இடம் பெறுகிறது. என்ன பகுதிகளில் கேள்விகள் இடம் பெறும்?
* டெஸ்ட் ஆப் ரீசனிங்
* டெஸ்ட் ஆப் குவான்டிடேடிவ் டெக்னிக்ஸ்
* டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்வேஜ்
* டெஸ்ட் ஆப் ஜெனரல் நாலெட்ஜ்
இவை தான் கேள்விகள் இடம் பெறும் 4 பகுதிகள்.
ரீசனிங் பகுதியில் பொதுவாக வெர்பல்
ரீசனிங், லாஜிக்கல் ஆப்டிடியூட் போன்ற பகுதிகள் இடம் பெற்றாலும் நான்-வெர்பல் ரீசனிங் கேள்விகளுக்கும் சேர்த்து தயாராவது அறிவுறுத்தப்படுகிறது. ரீசனிங் பகுதி என்பது ஒருவரின் நுண்ணறிவை சோதிப்பதால் ஆண்டுக்கு ஆண்டு இதில் புதிய புதிய கேள்வி வகைகள் உருவாக்கப்பட்டு கேட்கப்படுகின்றன. எனவே அடிப்படையில் ரீசனிங்கிற்கான நல்ல புத்தகங்களை வாங்கி பயிற்சி செய்வதுடன் மாதப் பத்திரிகைகள் மூலமாகவும் கூடுதல் பயிற்சியை மேற்கொள்ளலாம். ரீசனிங்கைப் பொறுத்தவரை கிடைக்கும் சிறப்பான புத்தகம் என்பது ஆர்.எஸ். அகர்வாலுடைய ரீசனிங் புத்தகங்கள் தான். இன்ஜினியரிங் கல்லூரிகளில் இது ஆப்டிடியூட் புத்தகமாக பரிந்துரைக்கப்படுகிறது. நான்வெர்பல் பகுதியையும் உள்ளடக்கிய புத்தகமாகப் பார்த்து வாங்கவேண்டும்.
ரீசனிங்கின் அடிப்படைகளை அறிய எட்கர் தோர்ப்பின் மென்டல் எபிலிடி புத்தகம் பெரிதும் உதவும். மேலும் கிரண் பப்ளிகேஷன்சின் பிராக்டிஸ் கைட் ஒன்றை வாங்கியும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கணிதப் பகுதிக்கும் ஆர்.எஸ். அகர்வால் புத்தகம் கிடைக்கிறது. கூடுதலாக டாடா மெக்ரா ஹில் வெளியிட்டுள்ள கணிதப் புத்தகத்தை வாங்கியும் பயிற்சி மேற்கொள்ளலாம். ஆங்கிலப் பகுதிக்கு பி.எஸ்சி., பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள உணஞ்டூடிண்ட டிண் உச்ண்தூ புத்தகத்தை நம்பலாம். ஆனாலும் பயிற்சியை மேற்கொள்வதற்கு கிரண் பதிப்பப் புத்தகமே உதவும்.
பொது அறிவுப் பகுதிக்கு அரிஹந்த் பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக ஓ.பி.கன்னாவின் ஜெனரல் நாலெட்ஜ் ரெப்ரஷர் புத்தகமும் பெறலாம்.
அதிகாரி நிலையிலான போட்டித் தேர்வில் அடிப்படைகளை அறிவது முதற்கட்டமென்றால் தினசரி பயிற்சியை மேற்கொள்வது தான் உங்களது வெற்றியை உறுதி செய்யும். அடிப்படைகளை அறிந்து பயிற்சியை மேற்கொள்ளாதவரும் அடிப்படை அறியாமல் தப்பும் தவறுமாக பயிற்சியை மேற்கொள்பவரும் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு. எனவே குறைந்தது 2 மாதப் பயிற்சியை அனைத்துப் பிரிவுகளிலும் தினசரி மேற்கொள்ள வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்.ஐ.சி., பணி ஒன்றுக்காக நடத்தப்பட்ட தேர்வில் எல்.ஐ.சி., குறித்த கேள்விகள் இடம் பெற்றிருந்தன. எனவே பொது இன்சூரன்ஸ் துறை பற்றிய தகவல்களையும் அறிந்து செல்ல வேண்டும்.
துவக்கத்தில் ஒரு பிரிவிலுள்ள 50 கேள்விகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தேவையில்லாமல் கவலைப்பட்டு தேர்வுக்குத் தயாராகும் ஆர்வத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் வேகம் பிடிபட்டு விடும். எனவே இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
மதுரை போன்ற நகரங்களில் தன்னார்வக் குழுக்களாக இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்து எக்கச்சக்கமான வெற்றியையும் குவித்து வருகின்றனர். சிறப்புப் பயிற்சி நிறுவனங்களிலும் சேர்ந்து தயாராகின்றனர். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து சிறப்பாகத் தேர்வை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.