மீன்பிடி தொழில்நுட்பம் கற்றுத்தரும் ‘சிப்நெட்’: சிறந்த கல்வி நிறுவனங்கள்-75
மீன்பிடி தொழில்நுட்பம் கற்றுத்தரும் ‘சிப்நெட்’: சிறந்த கல்வி நிறுவனங்கள்-75
செப் 05, 2009 12:00 AM
செப் 05, 2009 12:00 AM
கொச்சியில் 1963ம் ஆண்டு, ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரீஸ் நாடிக்கல் அண்டு இன்ஜினியரிங் டிரைனிங்’ (சிப்நெட்) தொடங்கப்பட்டது. இதன் இரண்டு மையங்கள் 1968ல் சென்னையிலும், 1981ல் விசாகப்பட்டினத்திலும் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன.
மத்திய அரசின் மீன்வள துறையின் கீழ் இந்த கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த துறை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளிலும் ‘சிப்நெட்’ ஈடுபட்டுள்ளது. மீன்பிடி தொழிலின் வருவாயை பெருக்கும், மீனவர்களுக்கு பலன் அளிக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகளிலும் இந்த கல்வி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பெரிய மீன்பிடி கப்பல்களுக்கு தேவையான ஸ்கிப்பர், மேட், இன்ஜினியர், இன்ஜின் டிரைவர்களுக்கு பயிற்சியளிக்கும், இந்தியாவின் ஒரே தேசிய கல்வி நிறுவனம் சிப்நெட் மட்டுமே. மீன்வள நிறுவனங்கள், கடல்சார் நிறுவனங்களுக்கு தேவையான மனித வளத்தை இவர்கள் உருவாக்கி வழங்குகின்றனர்.
சிப்நெட்டில் தற்போது ‘மேட் பிஷ்சிங் வெசல் கோர்ஸ்’ மற்றும் ‘இன்ஜின் டிரைவர் பிஷ்சிங் வெசல் கோர்ஸ்’ ஆகிய இரண்டு 18 மாத கால படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் சேர 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எனினும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இந்த படிப்புகளை அங்கு தங்கியே படிக்க வேண்டும். இதற்கு மாதந்தோறும் 700 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு படிப்பிலும் 100 இடங்கள் மட்டுமே உள்ளன. இந்த படிப்பை நிறைவு செய்த மாணவர்கள், கடல்சார் வணிக துறையில் பணிபுரிய முடியும். பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே இதற்கான போட்டித்தேர்வை எழுத முடியும். ஓராண்டு ‘ஷோர் மெக்கானிக்ஸ்’ படிப்பும் ‘சிப்நெட்’ல் வழங்கப்படுகிறது.
கடல்சார் இன்ஜினியரிங், மீன்வளம் தொடர்பான குறுகிய கால படிப்புகளையும் இந்த கல்வி நிறுவனம் வழங்குகிறது. வெளிநாட்டினர், கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு குறுகிய கால படிப்புகளையும் வழங்குகிறது.
‘சிப்நெட்’ வழங்கும் பிற படிப்புகள்
- அட்வான்ஸ்டு டிப்ளமோ இன் பிஷிங் கியர் டெக்னாலஜி
- பிஷரி டீச்சர் டிரைனிங் கோர்ஸ்
- எலிமென்டரி பிஷ்சிங் டெக்னாலஜி
- அட்வான்ஸ்டு பிஷ்சிங் டெக்னாலஜி
- ரேடார் அப்சர்வர் கோர்ஸ்
- மரைன் பிஷரீஸ் அண்டு இன்ஜினியரிங் டெக்னாலஜி
- மரைன் பிஷரீஸ் இன்ஜினியரிங்
- மரைன் பிஷரி டெக்னாலஜி
பேச்சிலர் ஆப் பிஷ்சிங் அண்டு நாடிக்கல் சயின்சஸ் என்ற இளநிலை படிப்பையும் ‘சிப்நெட்’ வழங்குகிறது. படித்து முடித்த மாணவர்களுக்கு உதவ வேலைவாய்ப்பு பிரிவும் இங்கு செயல்படுகிறது.
