தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஐ.எப்.எஸ்., ஆவது லட்சியமா

ஐ.எப்.எஸ்., ஆவது லட்சியமா

ஐ.எப்.எஸ்., ஆவது லட்சியமா


செப் 05, 2009 12:00 AM

செப் 05, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 05, 2009 12:00 AM செப் 05, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்தியன் பாரின் சர்வீஸ் சிறப்பான, சவாலான ஒரு துறையாக கருதப்படுகிறது. இதில் சேரும் வாய்ப்பு மிகவும் குறைவானவர்களுக்கே கிடைக்கிறது.

தற்போது உலகின் முக்கிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு சிறப்படைந்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், தென்னாப்ரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் கைகோர்க்க ஆர்வம் காட்டுகின்றன. இருதரப்பும் பயன்பெறும் வகையில், அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு மேம்பட்டு வருகிறது. இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக கூறப்படுவது, ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை தான்.

கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களின் பார்வை, ஐ.டி., துறையின் பக்கமாகவே இருந்தது. தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலை மாறியுள்ளது. மீண்டும் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகள், சமூகங்கள், மக்கள், கலாசாரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பை ஐ.எப்.எஸ்., பணி ஏற்படுத்தித் தருகிறது. சர்வ÷க்ச அளவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதால் பரந்த பார்வை கிடைக்கிறது. வெளிநாடுகளிலும், தலைமையகங்களிலும் பல்வேறு விதமான பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர்.

படைப்புத்திறன் மற்றும் இலக்கிய பணிகளுக்கு வாய்ப்பளிக்கிறது. இவர்களுக்கு சலுகைகளும் அதிகம். வசதியான வீடும், அதிகமான சம்பளமும் இவர்களுக்கு கிடைக்கிறது. நாட்டின் இலக்குகளை எட்டும் வகையில் வெளியுறவு கொள்கையைவடிவமைக்கும் பொறுப்பும் இவர்களுக்கு உள்ளது. பிறநாடுகளுடன் ஏற்பட்ட உடனடி சிக்கல்களை தீர்க்கும் வகையிலும், நீண்டகால இலக்குகளை அடையும் வகையிலும் வெளியுறவு கொள்கைகளை ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் வடிவமைக்கின்றனர்.

வெளியுறவு அமைச்கத்தில் மட்டுமின்றி வர்த்தகம், நிதி, தொழில்துறை, பாதுகாப்பு அமைச்சகங்களிலும் இவர்களின் பங்கு முக்கியமானது. இதனால் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு எல்லாத்துறைகளிலும் முக்கிய பொறுப்பு உள்ளது. பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ராஜதந்திரம் மிக அவசியமானது. தாங்கள் பணிபுரியும் நாட்டின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத் துவது, விவாதிப்பது போன்ற பணிகளை ஐ.எப்.எஸ். அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பணி இது.

ஐ.எப்.எஸ்., அலுவலர்களுக்கு ஐ.நா., சபையிலும், யுனெஸ்கோ, யு.என். எச்.சி.ஆர்., உலக வங்கி, மனித உரிமைகள் மையம், காமன்வெல்த் செயலகம், சார்க் செயலகங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

வளர்ந்த நாடுகளை சேர்ந்த புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கும், இவர்கள் அனுப்பிவைக்கப்படுகின்றனர். உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள், விஞ்ஞானிகளுடன் பணியாற்றும் வாய்ப்பை இந்த பணி ஏற்படுத்தித்தருகிறது. சிவில் சர்வீஸ் தேர்வு மூலமாகவே, ஐ.எப்.எஸ்., அதிகாரியாக முடியும். இதன் மூலமாகவே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., பணிகளுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

முதலில் ஆரம்ப கட்ட தேர்வு நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர் மட்டுமே இரண்டாம் கட்ட தேர்வை எழுத முடியும். அதில் கட்டுரை வடிவில் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் இடம் பெறும். பட்டதாரிகள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுடன் ஒப்பிடும் போது ஐ.எப்.எஸ்., பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே ஐ.எப்.எஸ்., பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஐ.எப்.எஸ்., ஆக விரும்புபவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே முதல் 100 பேருக்குள் ஒருவராக தேர்ச்சி பெற வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us